மனுஷனோட தோற்றத்துக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லையே... என்னங்க இந்த காருலையே இப்படி பின்னி எடுத்திருக்காரு!
ஹூண்டாய் நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றே ஐயோனிக் 5 என் (Hyundai Ioniq 5 N) ஆகும். இந்த காரையே ஒருவர் தாருமாறாக ட்ரிஃப்ட் செய்யும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, களத்தை சூடாக்கி இருக்கின்றது. இதுகுறித்து கூடுதல் தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
"யாருங்க இது பேய் மாதிரி ட்ரிஃப்ட் பண்றதுனு" பார்ப்போரை வாயை பிளக்கச் செய்யும் வகையில் ஓர் நபர் ஹூண்டாய் ஐயோனிக் என் காரை வெறித் தனமாக ட்ரிஃப் செய்யும் காட்சிகளே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இவ்வாறு செய்தவர் வேறு யாரும் இல்லைங்க, 'ட்ரிஃப்ட் கிங்' என்றழைக்கப்படும் கெய்சி சுச்சியா என்பவரே அவர் ஆவார்.

இந்த காரின் திறன் எத்தகையது என்பதை வாகன ஆர்வலர்களுக்கு எடுத்துக் காண்பிக்கும் விதமாகவே அவர் இதுபோன்று செய்து பார்த்தார். ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாகவே ஐயோனிக் 5 என் இருக்கின்றது. அதிக திறனை வெளிப்படுத்தும் காரை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே இந்த காரை ஹூண்டாய் பிரத்யேகமாக தயார் செய்திருக்கின்றது.
இந்த காரையே ட்ரிஃப்ட் கிங் தற்போது ட்ரிஃப்ட் செய்துக் காட்டி இருக்கின்றார். இவருடைய வயது 67 ஆகும். இவரின் தோற்றத்தை பார்க்கையில் இவரா இப்படி செய்தார் என் கேட்க தோன்றும் வகையில் இருக்கின்றது. அந்த அளவிற்கே அவருக்கும், அவர் செய்த சம்பவத்திற்கும் முரண்பாடான வித்தியாசம் இருக்கின்றது.

இந்த நபரே டி1 கிராண்ட் பிரிக்ஸ் ட்ரிஃப்ட் (D1 Grand Prix drift series) சீரிஸின் கோ-ஃபவுண்டரும் ஆவார். இதுதவிர, 24 ஹவர்ஸ் ஆஃப் லீ மேன்ஸில் இதுவரை இரண்டு முறை வெற்றிகளைப் பெற்றிருக்கின்றார். இதுமட்டுமில்லைங்க, புகழ்பெற்ற ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தில் ஸ்டண்ட் கோ-ஆர்டினேட்டராகவும் அவர் பணியாற்றி இருக்கின்றார்.
டோக்யோ ட்ரிஃப்ட் காட்சியையே இவர் கோஆர்டினேட் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைக் கொண்டவராக இந்த 67 வயதான ட்ரிஃப்ட் கிங் கெய்சி சுச்சியா இருக்கின்றார். இவர் முதல் முறையாக ட்ரிஃப் செய்யும் எலெக்ட்ரிக் காரே ஐயோனிக் 5என் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் கிராஸோவர் வகை எலெக்ட்ரிக் காராகும். ஓர் எலெக்ட்ரிக் காரையே ஹூண்டாய் டிராக் பயன்பாட்டு வசதிக் கொண்டதாக தயார் செய்திருக்கின்றது. இந்த கார் 601 பிஎச்பி பவரை வெளியேற்றும். அதேவேளையில், என் கிரின் பூஸ்ட் மோடில் இயக்கும்போது 641 பிஎச்பி பவரை வெளியேற்றும்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 என் எலெக்ட்ரிக் காரால் வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிமீ ஆகும். ஐயோனிக் 5 என் 84 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதனை 350 kW அதிக வேகமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் 0-த்தில் இருந்து 80 சதவீத சார்ஜை 18 நிமிடங்களிலேயே ஏற்றிவிட முடியும். இதுமட்டுமில்லைங்க, இந்த எலெக்ட்ரிக் சொகுசு மற்றும் பிரீமியம் வசதிகளிலும் நம்மை மிரள வைக்கின்ற வகையிலேயே இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் அதிக திறனை வெளிப்படுத்தும் கார்களுக்கென தனித்துவமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதேபோல், உலக அளவிலும் இந்த வகை கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு உண்டு. இவர்களைக் கவரும் விதமாக ஹூண்டாய் அதன் என் சீரிஸ் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









