புதுசா ஆட்டோகியர் கார் ஓட்ட போறவங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? பிரேக்ன்னு நினைச்சு இதை மிதித்தால் விபரீதம்
புதிதாக ஆட்டோகியர் மற்றும் எலெக்ட்ரிக் கார் ஓட்டுபவர்களுக்கு பிரேக் எது ஆக்ஸிலேட்டர் எது என்ற பிரச்சனையும், எலெக்ட்ரிக் காரில் டார்க் குறைவான ஆர்பிஎம்மிலேயே கிடைப்பதால் அதையும் டிரைவர் ஹேண்டில் முடியாமல் திணறுகின்றனர். இதனால் நடந்த ஒரு விபத்தைக் காணலாம் வாருங்கள்.
புதிதாக கார் ஓட்டி பழகுபவர்கள் சற்று சிரமப்படுவார்கள். என்னதான் பைக்கை சிறப்பாக ஓட்டுபவராக இருந்தாலும் காரை ஓட்டும் போது அது மற்றும் கையாளும் முறை மாறுவதால் காரை ஓட்ட பலர் முதலில் கஷ்டப்படுவார்கள். பழகப் பழக எல்லாம் பழகி விடும் என்பது போல கார் ஓட்ட ஓட்டத் தான் அதன் தன்மை பலருக்குப் பிடிபடும். கார் ஓட்டுவது என்பது ஒரு கலை அதை ரசித்துச் செய்தால் பயணம் இனிமையாக இருக்கும்.

ஆனால் புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு எது பிரேக், எது ஆக்ஸிலரேட்டர் என்பதே சில நேரம் குழப்பமாக இருக்கும். புதிதாக கார் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல மேனுவல் கியர் கார்களையே ஓட்டி பழகியவர்களுக்கு ஆட்டோமெட்டிக் கியர் கார்களை ஓட்டும் போதும் இதே போன்ற குழப்பம் வரும் மேனுவல் கியரில் கிளட்ச் இருக்கும். ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் கிளட்ச் பெடலே இருக்காது. இதனால் கூட பலர் குழப்பிப்போவார்கள்.
இதனால் ஆக்ஸிலரேட்டருக்கு பதிலாக கிளட்சையும், கிளட்சிற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரையும் அழுத்தி விடுவார்கள். இதன் காரணமாக விபத்துகள் எல்லாம் கூட நடந்துள்ளது. இப்படியாகச் சமீபத்தில் ஒரு விபத்து ஒன்று நடந்தது. பிரேக் என நினைத்து ஒருவர் ஆக்ஸிலரேட்டரை பலமாக மிதித்தால் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து யூடியூப் வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியுள்ளன.
இந்த வீடியோவின் படி இந்த விபத்தில் சிக்கியது ஒரு டாடா நெக்ஸான் இவி காராகும். இந்த கார் பார்க் செய்யப்பட்டுள்ளது. அந்த காரை ரிவர்ஸில் எடுக்க இந்த காரின் உரிமையாளர் முயற்சி செய்துள்ளார். இந்த கார் ஒரு ஆட்டோமெட்டிக் ரக காராகும். இந்த காரை அவர் ரிவர்ஸில் எடுக்கும். போது பிரேக் என நினைத்து ஆக்ஸிலரேட்டரை அழுத்தி மிதித்துள்ளார். இதனால் கார் முழு வேகத்தில் பின்னாடி வந்ததில் பின்னாடியிருந்த சுவரை இடித்துள்ளது.

இதனால் அந்த சுவருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. காருக்கு பின்பக்கம் லேசான பாதிப்புகள் தான் ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த காரின் உரிமையாளருக்கு நன்றாகவே கார் ஓட்ட தெரியும் பின்னர் எப்படி என குழப்பம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்த போது 2 முக்கியமான காரணங்கள் தெரியவந்தது.
இந்த காரின் உரிமையாளர் நீண்ட நாட்களாகக் காரை ஓட்டி வந்தாலும் அவர் மேனுவல் கியர் காரை தான் ஓட்டி வந்துள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் வாங்கியது நெக்ஸான் இவி ஆட்டோமெட்டிக் கார். இதனால் இவர் பிரேக் என நினைத்து காரின் ஆக்ஸிலரேட்டரை அழுத்தியுள்ளார். இது அவர் அழுத்தியதற்கான முதல் காரணம் அதை அதிகமாக அழுத்தியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
இவர் இதற்கு முன்னர் பெட்ரோல்/டீசல் கார்களை தான் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த கார்கள் நகராமல் நின்று நகரும் போது அதிகமாக டார்க் திறன் எல்லாம் கிடைக்காது. போகப் போக தான் டார்க் அதிகமாகும். ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் முழுமையாக எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குவதால் இந்த காரில் எடுத்த எடுப்பிலேயே முழு டார்க் திறனும் கிடைத்துவிடும். அதனால் இவர் அழுத்தியதும் கார் முழு வேகத்தில் பின்னால் செல்ல துவங்கிவிட்டது.
இதுவே இவர் பெட்ரோல் டீசல் காரில் செய்திருந்தால் இவ்வளவு வேகம் பிக்கப் ஆகியிருந்திருக்காது. அதிலேயே பழகியதால் இவர் தவறுதலாக இதைச் செய்துவிட்டார். இப்படியாக எலெக்ட்ரிக் கார்களில் ரிவர்ஸ் எடுக்கும் போது வேகத்தைக் கட்டுப்படுத்த பலர் மறந்துவிடுகின்றனர். அல்லது அவர்களுக்கு அது சரியாக வரவில்லை. ஆட்டோமெட்டிக் கார்களிலும் சிலர் கியர் டிரைவ் மோடில் இருப்பதாக நினைத்து ரிவர்ஸ் மோடில் வைத்து ஆக்ஸிலேட்டரை அழுத்திவிடுகின்றனர்.
இப்படியாக இந்தாண்டு துவக்கத்தில் ஃபோக்ஸ்வேகன் வென்டோ கார் ஓட்டுநர் ஒரு ரெஸ்டாரென்ட் முன்பு இப்படிச் செய்ததில் கார் ரெஸ்டாரென்டிற்குள் உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது. கடந்தாண்டு டாடா ஷோரூமில் டாடா டியாகோ காரை ஒருவர் இப்படியாக காரின் காரில் அமர்ந்து அந்த கார் குறித்து கார் ஷோரூம் உரிமையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது கார் ஷோரூம் உரிமையாளர் காரின் இன்ஜினை ஸ்டார்ட் செய்து அதன் அம்சங்களை விளக்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது டிரைவர் சீட்டிலிருந்தவர் தெரியாமல் ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதில் கார் முன்னே நகர்ந்து காரின் ஷோரூம் கண்ணாடியை உடைத்து முதல் மாடியிலிருந்து கீழே விழுந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவியது. இப்படியாகப் பலருக்கு ஆட்டோமெட்டிக் மற்றும் எலெக்ட்ரிக் காரை ஹேண்டில் செய்வதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








