பிஎஸ்-6 2.0-க்குதான் நன்றி சொல்லணும்... அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களாக மாறிய டாடா கார்கள்..

விரைவில் இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 கட்டம் இரண்டு அமலுக்கு வர இருக்கின்றது. இந்த விதியின் காரணமாக டாடா கார்களின் மைலேஜ் திறன் உயர்ந்திருக்கின்றது. எவ்வளவு மைலேஜ் திறன் உயர்ந்திருக்கின்றது என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடாவின் அனைத்து கார் மாடல்களும் அதிக மைலேஜ் தரும் வாகனங்களாக மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெகு விரைவில் பிஎஸ்-6 2.0 நாட்டில் அமலுக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப டாடா மோட்டார்ஸ் அதன் அனைத்து கார் மாடல்களையும் அப்டேட் செய்திருக்கின்றது.

டாடா கார்

இந்த அப்டேட்டின் காரணத்தினாலே நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களாக மாறி இருக்கின்றன. பெட்ரோல் மாடல்கள் முன்னதாக வழங்கிக் கொண்டிருந்த மைலேஜ் உடன் 0.60 கிமீ முதல் 1.13 கிமீ வரையில் கூடுதல் மைலேஜை வழங்கும் திறன் கொண்ட வாகனங்களாக மாறி இருக்கின்றன.

இதேபோல், டீசல் கார் மாடல்கள் கூடுதலாக 0.60 கிமீ தொடங்கி 2.40 கிமீ வரையில் மைலேஜை வழங்கக் கூடியவை மாறி இருக்கின்றன. இவ்வாறு கூடுதல் மைலேஜ் தரும் வாகனங்களாக டாடா கார்கள் மாறி இருப்பது டாடா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

டாடா கார்

அதேவேளையில், இது மாருதி சுஸுகி போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. டாடாவின் பஞ்ச் காரே அதிகம் மைலேஜ் தரும் பெட்ரோல் காராக இருக்கின்றது. இது ஒரு லிட்டருக்கு 20.10 கிமீ வரையில் தரும். இதற்கு அடுத்த இடத்தில் டியாகோ இருக்கின்றது.

இதன் புதிய மைலேஜ் திறன் 20.1 கிமீ ஆகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்கும் மைலேஜ் திறன் இது ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலாக டிகோர் இருக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.60 கிமீ வரை மைலேஜ் தரும்.

டாடா கார்

நிறுவனத்தின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல்களான அல்ட்ராஸ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.30 கிமீ மைலேஜையும், நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 17.10 கிமீ மைலேஜையும் வழங்கும் கார்களாக மாறி இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் டீசல் மோட்டார் தேர்வை தனது மூன்று இரு கார் மாடல்களில் மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகியவற்றில் மட்டுமே டீசல் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதில், அல்ட்ராஸ் டீசல் தேர்வு ஒரு லிட்டருக்கு 23.60 கிமீ வரையில் மைலேஜ் தரும். நெக்ஸானின் டீசல் தேர்வு 23.20 கிமீ தொடங்கி 24.10 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

டாடா கார்

இந்த வாகனம் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். பிஎஸ் 6 கட்டம் 2 வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது. இந்த புதிய விதியின் காரணமாக சில கார்களின் விலை பல மடங்கு அதிகமாக இருக்கின்றது.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்6 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் வென்யூ ஆகிய கார்கள் 45 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் அதிக விலையுடன் அவை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இதுபோலவே, இன்னும் சில கார்களும் விரைவில் விலை உயர்வுடன் விற்பனைக்கு வர இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 21, 2023, 8:36 [IST]
English summary
Due to new emission norm tata cars fuel figures improved
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X