இத்தன கோடி ரூபாயை கொட்டி கொடுத்து துல்கர் இந்த காரை வாங்கியிருக்காரா? அதுவும் அவரோட பேருலகூட வாங்கல!..

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் மிகப் பெரிய கார் காதலர் ஆவார். இதை வெளிக்காட்டும் விதமாக ஓர் செயலையே அவர் செய்திருக்கின்றார். இந்தியாவில் விற்கப்படும் மிக மிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றை அவர் வாங்கி இருக்கின்றார். ஏற்கனவே அவருடைய இல்லத்தில் பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்நிலையில், புதிதாக மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரையே துல்கர் வாங்கி இருக்கின்றார். இதன் வாயிலாக சொகுசு வாகங்களின் மீது தீராத தாகம் கொண்டவர் தான் என்பது அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். அரண்மனை போன்ற வசதிக் கொண்ட காரே மேபேக் ஜிஎல்எஸ் 600.

Dulquer Buys Mercedes Maybach GLS 600

இதில் இல்லாத ஆடம்பர வசதிகளே இருக்க முடியாது என கூறிவிடலாம். இதனை சாலையில் மிதக்கும் கப்பல் என்றும்கூட கூறலாம். அந்தளவிற்கு மிக மிக அதிக சொகுசு வசதிகளை இந்த கார் தாங்கி இருக்கின்றது. இதன் காரணமாகவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக திரை நட்சத்திரங்கள் மற்றும் அம்பானி போன்ற மிக பெரிய செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே தானும் இந்த காரின் மிகப் பெரிய ரசிகன் என்பதை அக்காரை வாங்கி, அதனை அவரது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார். மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்ஸ் 600 சொகுசு காரின் இந்திய மதிப்பு ரூ. 2.9 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Dulquer Buys Mercedes Maybach GLS 600

இது மட்டுமில்லைங்க அந்த காருக்கு பெரும் தொகையை செலவு செய்து ஃபேன்சி நம்பரையும் துல்கர் வாங்கி இருக்கின்றார். ஃபேன்சி நம்பருக்கு மட்டும் அவர் ரூ. 1.85 லட்சம் செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. கோட்டயம் ஆர்டிஓ அலுவலகத்தில் மம்முட்டி பெயரிலேயே இந்த கார் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

துல்கர் மிக மிக விலை உயர்ந்த கார்களை வாங்குவது இது முதல் முறையல்ல. மிக மிக சமீபத்திலே அவர் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எனும் ஆடம்பர ரக காரை வாங்கினார். இதேபோல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரையும் அவர் அண்மையில் வாங்கி இருந்தார். இந்த நிலையிலேயே 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து புதிதாக மேபேக் ஜிஎல்எஸ் சொகுசு காரை அவர் வாங்கி உள்ளார்

இந்த எக்கசக்க ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், சேம்பைன் பாட்டிலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கான சிறிய குளிர்சாதன பெட்டி, எலெக்ட்ரானிக் பனோரமிக் ஸ்லைடிங் சன் ரூஃப், வெண்டிலேட் மற்றும் மசாஜ் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் மேபேக் ஜிஎல்எஸ் 600 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல் பாதுகாப்பு வசதிகளும் இந்த காரில் மிக தாராளம். ஆக்டீவ் டிஸ்டன்ஸ் அசிஸ்ட் டிஸ்ட்ரானிக் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஆக்டீவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆக்டீவ் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டீவ் பிரேக் அசிஸ்ட், ஆக்டீவ் ஸ்டியரிங் அசிஸ்ட் போன்றவையும் மேபேக் ஜிஎல்எஸ் 600இல் இடம் பெற்றிருக்கின்றன.

தொடர்ந்து, 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அடாப்டீவ் ஹை பீம் அசிஸ்ட், டவுன்ஹில் ஸ்பீடு ரெகுலேசன், கார் வாஷ் மோட், டிபிஎம்எஸ், ஏபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளன. இத்தகைய தரமான சூப்பர் லக்சூரி எஸ்யூவி காரையே துல்கர் தற்போது வாங்கி அசத்திஇருக்கின்றார்.

இந்த காரில் லேசான ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 4.0 லிட்டர், ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 558 எச்பி பவர் மற்றும் 730 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் வாயிலாக இது இயங்குகின்றது. இதன் ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 22 எச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஏற்கனவே எண்ணற்ற சொகுசு கார்கள் தன்னிடத்தில் பயன்பாட்டில் இருக்கும்போது இந்த புதிய கார் தேவைதானா என்கிற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழும்பக் கூடும். நடிகர்கள், குறிப்பாக, கோடிகளை சம்பளமாக பெறும் நடிகர்கள் ஸ்டாம்ப் கலெக்சன், காயின் கலெக்சனை போல் கார் கலெக்சனை செய்து வருகின்றனர். அந்தவகையிலேயே துல்கரும் இக்காரை வாங்கி இருக்கின்றார்.

Article Published On: Wednesday, March 29, 2023, 15:09 [IST]
English summary
Dulquer registered mercedes maybach gls 600 into mammuooty name
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+