ஹெவி-ட்யூட்டிக்கு சரியான சாய்ஸ்!! ஈச்சர் மார்க்கெட்டுக்கு கொண்டுவந்திருக்கும் 4 புது கனரக லாரிகள்!
வால்வோ ஈச்சர் கமர்ஷியல் வாகனங்கள் லிமிடெட் (VECV) நிறுவனத்தின் ஈச்சர் டிரக்குகள் & பேருந்துகள் (Eicher Trucks & Buses) பிரிவின் சார்பில் புதிய ஈச்சர் நான்-ஸ்டாப் கனரக லாரிகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. வெவ்வேறு செயல்திறன்களில், வெவ்வேறு விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் மொத்தம் 4 லாரிகள் ஈச்சர் நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
நீண்ட தொலைவிற்கு சரக்கு பொருட்களை லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்வது இந்தியாவில் வேகமாக வளர்ச்சிக் கண்டு வருகிறது. இதனால், கனரக லாரிகளுக்கு பல்வேறு துறைகளில் தேவை உள்ள நிலையில், அந்த தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வால்வோ நிறுவனம் புதியதாக 4 கனரக லாரிகளை கமர்ஷியல் வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஈச்சர் புரோ 6019 எக்ஸ்.பி.டி, டிப்பர்; ஈச்சர் புரோ 6048எக்ஸ்பி, ஹாலேஜ் லாரி; ஈச்சர் புரோ 6055எக்ஸ்பி மற்றும் ஈச்சர் புரோ 6055எக்ஸ்பி 4x2 என்பன அந்த 4 ஈச்சர் லாரிகள் ஆகும். இந்த புதிய ஈச்சர் லாரிகளில் ஆற்றல்மிக்க & எரிபொருள் திறன் மிக்க என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. சரக்கு தொழிலுக்கு ஏற்ப இந்த என்ஜின்கள் அசத்தலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவை ஆக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ஈச்சர் புரோ 6019 எக்ஸ்பிடி (Eicher Pro 6019XPT): வி.இ.டி.எக்ஸ்5 5.1 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜினை கொண்ட டிப்பர் லாரி இதுவாகும். அதிகப்பட்சமாக 240 எச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் சிறந்த செயல்படுதிறன், நம்பகத்தன்மையை வழங்கும் எனவும், இதனால் அதிக இலாபத்தை தொழிலில் பெறலாம் என்கிறது ஈச்சர் நிறுவனம்.

ஈச்சர் புரோ 6048எக்ஸ்பி (Eicher Pro 6019XP): 48 டன் எடை கொண்ட இந்த லாரியில் எரிபொருள் திறன்மிக்க வி.இ.டி.எக்ஸ்8 என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 300 எச்பி மற்றும் 1200 என்எம் டார்க் திறனை வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. நீண்ட தொலைவு போக்குவரத்துக்கு சிறந்த செயல்திறன் மற்றும் அதிக இலாபத்தை வழங்கக்கூடியதாக இந்த லாரி இருக்கும்.
ஈச்சர் புரோ 6055 எக்ஸ்பி மற்றும் ஈச்சர் புரோ 6055/1 (4x2): இவை இரண்டும் டிராக்டர் டிரைலர்ஸ் ஆகும். அதாவது, இவற்றுடன் எந்தவொரு பாடியையும் இணைத்துக் கொள்ளலாம். இந்த லாரி டிரைலர்களில் மேற்கூறப்பட்ட அதே வி.இ.டி.எக்ஸ்8 என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் வேகமாக திரும்பு திறனை கொண்டுள்ளன.
இந்த லாரிகளை அறிமுகம் செய்து பேசிய VECV-இன் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான வினோத் அகர்வால், "எங்களின் வாடிக்கையாளர்களின் வெற்றிக்கு மட்டுமின்றி, நமது நாட்டில் தளவாடங்களில் செயல்திறனையும், விலையையும் மேம்படுத்துவதில் எங்களின் அர்ப்பணிப்பை குறிக்கும் வகையில், புதிய தொழில் தரநிலைகளை அமைக்கும் விதமாக நான்-ஸ்டாப் சீரிஸ் லாரிகளை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
கனரக லாரிகள் உற்பத்தியில் பல வருடங்களாக ஈச்சர் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 850க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தொடு மையங்கள் உடன் ஈச்சர் தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை நன்கு வலுவானதாகவே கொண்டுள்ளது. இந்த 850+ தொடு மையங்கள் மட்டுமின்றி, 425க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர்கள் மற்றும் 8000க்கும் அதிகமான சில்லறை விற்பனை மையங்களையும் ஈச்சர் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ மற்றும் ஈச்சர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் லாரிகளுக்கு உலகம் முழுவதுமே வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில், புதியதாக இந்த 4 கனரக லாரிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இவை நான்கும், நாடு முழுவதும் சரக்குகளை கொண்டு செல்வதற்கு ஏற்றவையாக இருப்பதினாலேயே இந்த லாரிகளை நான்-ஸ்டாப் சீரிஸ் லாரிகள் என ஈச்சர் அழைக்கிறது என எண்ணுகிறோம்.


Click it and Unblock the Notifications








