டாடா கார்களையே இந்த விஷயத்தில் எல்லாரும் தேடி போறாங்க!! எம்ஜி கோமெட் இவி காரால் கிட்ட கூட நிற்க முடியல!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை ஆனது சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு நாம், டாடா மோட்டார்ஸை தான் காரணமாக சொல்லியாக வேண்டும். ஏனெனில் டாடா பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான் இவி இந்திய மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

நெக்ஸான் இவி-இன் வெற்றியை கண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாம் எதிர்பார்த்ததை விட விரைவாகவே அதன் மற்ற கார்களையும் எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவந்தது. இதன்படி, சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட டியாகோ இவி தான் தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் காராக விளங்குகிறது.

electric car sales in q2 2023

குறிப்பாக, கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் வரையில் சுமார் 10,695 டியாகோ இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 3,200 டியாகோ இவி கார்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்த 2022 செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா டியாகோ இவி காரின் டெலிவிரிகள் இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் துவங்கப்பட்டது.

டியாகோ இவி காரில் இரு விதமான பேட்டரி தேர்வுகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. இதில் ஒன்றான 19.2kWh பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 250கிமீ தொலைவிற்கு செல்ல முடியும். அதுவே, இதனை காட்டிலும் அளவில் பெரிய 24kWh பேட்டரி தொகுப்பின் மூலமாக 315கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும்.

electric car sales in q2 2023

டியாகோ இவி காருக்கு அடுத்து கடந்த 3 மாதங்களில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் இவி உள்ளது. ஆனால் விற்பனையை பொறுத்தவரையில், டியாகோ இவி-ஐ காட்டிலும் நெக்ஸான் இவி மிகவும் பின்தங்கி உள்ளது. ஏப்ரலில் இருந்து ஜூன் மாத வரையில், அந்த 3 மாதங்களில் 5,623 நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்கள் இரு வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒன்று, வழக்கமான நெக்ஸான் இவி ஆகும். மற்றொன்று, அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகும். நெக்ஸான் இவி-க்கு அடுத்து கடந்த 3 மாதங்களில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் காராகவும் டாடா மோட்டார்ஸின் தயாரிப்பே உள்ளது. இந்த வகையில், 3வது இடத்தில் இருப்பது டிகோர் இவி ஆகும்.

electric car sales in q2 2023

டிகோர் இவி எலக்ட்ரிக் செடான் கார்கள் கடந்த 3 மாதங்களில் 3,257 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதற்கடுத்து 4வது இடத்தில், மற்றொரு முன்னணி இந்திய நிறுவனமான மஹிந்திராவின் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார் உள்ளது. டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் வரையில் 3 மாதங்களில் 2,234 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

Rank Top 10 EVs Sales
1 Tata Taigo EV 10,695
2 Tata Nexon EV 5,072
3 Tata Tigor EV 3,257
4 Mahindra XUV400 2,234
5 MG Comet 1,914
6 MG ZS EV 1,747
7 Citroen eC3 576
8 BYD Atto3 412
9 Kia EV6 279
10 Hyundai Kona EV 159

எக்ஸ்யூவி400-க்கு அடுத்து 5வது மற்றும் 6வது இடங்களை எம்ஜி மோட்டாரின் எலக்ட்ரிக் கார்களான கோமெட் மற்றும் இசட்.எஸ் இவி உள்ளன. இவை இரண்டும் 2023ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் முறையே 1,914 மற்றும் 1,747 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 7வது, 8வது, 9வது மற்றும் 10வது இடங்களை முறையே சிட்ரோன் இசி3 (576), பிஒய்டி அட்டோ3 (412), கியா இவி6 (279) மற்றும் ஹூண்டாய் கோனா இவி (159) எலக்ட்ரிக் கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய எலக்ட்ரிக் கார்கள் லிஸ்ட்டில் முதல் 3 இடங்களை டாடா எலக்ட்ரிக் கார் பிடித்திருப்பது பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பெருமை அனைத்திற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தகுதியானதே. அதேபோல், மஹிந்திராவின் எக்ஸ்யூவி400 காரின் விற்பனையும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 28, 2023, 22:19 [IST]
English summary
Electric car sales in q2 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X