சிங்கம்னா யாருன்னு நிரூபித்த டாடா... மாருதிக்கு டாப் 10லயே இடம் இல்ல!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகி உள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் இந்தியா முழுவதும் விற்பனையான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த ரிப்போர்ட் ஒன்று வெளியாகி உள்ளது இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 7,437 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மொத்தம் 2961 எலக்ட்ரிக் கார்கள் தான் விற்பனையாக இருந்தது. தற்போது இந்த விற்பனை 151% அதிகமாகியுள்ளது. மொத்தம் உள்ள மார்க்கெட் ஷேரில் டாடா நிறுவனம் மட்டும் 78.28% கைப்பற்றியுள்ளது.

இந்த பட்டியலில் 10 இடத்தை கைப்பற்றியுள்ளது மெர்சிடிஸ் நிறுவனம். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெறும் 5 எலெக்ட்ரிக் கார்களையே விற்பனை செய்த இந்நிறுவனம், கடந்த மே மாதம் 18 கார்களை விற்பனை செய்துள்ளது ஒரே ஆண்டில் 260 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
9 இடத்தில் வால்வோ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனை செய்யவில்லை ஆனால் கடந்த மே மாதம் மொத்தம் 42 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 0.56 சதவீதம் மார்க்கெட் பங்கை வைத்துள்ளது.

8 இடத்தில் கியா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனமும் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனை செய்யவில்லை. மாறாக கடந்த மே மாதம் மொத்தம் 45 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 0.61 சதவீதம் மார்க்கெட் பங்கை வைத்துள்ளது.
7 இடத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெறும் 9 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் 70 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. விற்பனையில் 677.78 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

6 இடத்தில் சீன நிறுவனமான பிஒய்டி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெறும் 42 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் 138 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து 228.57% வளர்ச்சியை பெற்றுள்ளது.
5 இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மொத்தம் 27 எலெக்ட்ரிக் கார்களை தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த மே மாதம் மொத்தம் 163 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து 53.70 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
| Rank | Manufacturer | May'23 | May'22 | Growth (%) YoY |
| 1 | Tata | 5,822 | 2,501 | 132.79 |
| 2 | MG | 437 | 250 | 74.80 |
| 3 | Mahindra | 363 | 9 | 3,933.33 |
| 4 | Citroen | 308 | 0 | - |
| 5 | Hyundai | 163 | 27 | 503.70 |
| 6 | BYD | 138 | 42 | 228.57 |
| 7 | BMW | 70 | 9 | 677.78 |
| 8 | Kia | 45 | 0 | - |
| 9 | Volvo | 42 | 0 | - |
| 10 | Mercedes | 18 | 5 | 260 |
4 இடத்தில் சிட்ரோன் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு எலெக்ட்ரிக் ஆக கூட விற்பனை செய்யவில்லை. ஆனால் கடந்த மே மாதம் மொத்தம் 308 எலெக்ட்ரிக் காரர்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 4.14 சதவீதம் மார்க்கெட் ஷேரை வைத்துள்ளது
3 இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்த பட்டியலிலேயே மிகப்பெரிய வளர்ச்சியை பெற்ற நிறுவனம் இதுதான். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மொத்தம் 9 எலெக்ட்ரிக் காரர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த மே மாதம் மொத்தம் 363 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் விற்பனை வளர்ச்சியை பார்த்தால் 3933.33 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது.
2 இடத்தில் எம்ஜி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 29 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த மே மாதம் இந்நிறுவனம் மற்றும் 437 எலெக்ட்ரிக் காரர்களை விற்பனை செய்துள்ளது. ஒரே ஆண்டில் 74.80 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
1 இடத்தை அசைக்க முடியாத இடமாக டாடா நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 2501 எலெக்ட்ரிக் காரர்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த மே மாதம் மொத்தம் 5,822 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து 132.79 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனம் 78.28% மார்க்கெட் பங்கை வைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த மே மாதம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளர்கள் தொடர்ந்து விற்பனை வளர்ச்சியையே சந்தித்துள்ளனர். இந்த டிரெண்ட் இன்னும் சில ஆண்டுகளுகு்கு தொடரும் என எதிர்பார்க்கலாம். விரைவில் பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனையாகும் நிலை வரும்.


Click it and Unblock the Notifications









