டாடா நிறுவனத்தை தான் இந்த விஷயத்தில் எல்லாரும் தேடி போறாங்க!! மஹிந்திரா இதை முறியடிக்குமா?

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு ஆண்டிலும் அதிக எண்ணிக்க்கையில் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனையாகுகின்றன. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்கள் என்றவுடனே நமது நினைவிற்கு எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்கள் தான் வரும்.

ஆனால் எலக்ட்ரிக் கார்களும் சந்தையில் விற்பனையில் உள்ளன. தற்போதைக்கு எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா போன்ற சில கார் நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்து வருகின்றன. இதில் குறிப்பாக, டாடா மோட்டார்ஸின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள கடந்த ஏப்ரல் மாத எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ரிப்போர்ட்டை இனி பார்க்கலாம்.

electric cars sales top-10 brands

கடந்த ஏப்ரலில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக வழக்கம்போல் டாடா மோட்டார்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 4,392 எலக்ட்ரிக் கார்கள் டாடா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2022 ஏப்ரலில் விற்பனையான டாடா எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் சுமார் 141.72%, அதாவது 2,575 கார்கள் அதிகம் ஆகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 1,817 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற 4 எலக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய சந்தையில் கடந்த ஏப்ரலில் விற்பனையான 4இல் 3 எலக்ட்ரிக் கார்கள் டாடா நிறுவனத்துடையது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து கடந்த வருடங்களில் எம்ஜி மோட்டார் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 2வது இடம் வகித்து வந்தது.

electric cars sales top-10 brands

ஆனால் அந்த 2வது இடத்தை இனி எம்ஜி மோட்டார் மறந்துவிட வேண்டியதுதான். ஏனெனில் அந்த இடத்தை இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா பிடிக்க ஆரம்பித்துள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் டெலிவிரிகள் சில வாரங்களுக்கு முன்னர் தான் துவங்கின. கடந்த ஏப்ரலில் மொத்தம் 505 எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

ஆனால் 2022 ஏப்ரலில் வெறும் 13 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே மஹிந்திரா சார்பில் விற்கப்பட்டு இருந்தன. ஏனெனில் அந்த சமயத்தில் எக்ஸ்யூவி400 கார் விற்பனையில் இல்லை. இந்த வரிசையில் 3வது இடத்தை பெற்றுள்ள எம்ஜி மோட்டாரில் இருந்து கடந்த மாதத்தில் 335 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 2022 ஏப்ரலில் 245 எலக்ட்ரிக் கார்களை எம்ஜி இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

electric cars sales top-10 brands

4வது மற்றும் 5வது இடங்களில் சிட்ரோன் மற்றும் பிஒய்டி நிறுவனங்கள் உள்ளன. சந்தைக்கு புதியவையான இவை இரண்டும் கடந்த ஏப்ரலில் முறையே 229 மற்றும் 154 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 5 இடங்களில் பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், வால்வோ, கியா மற்றும் மெர்சிடிஸ் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் 100ஐ கூட தொடவில்லை என்றாலும், 2022 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் இவற்றின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடாவின் ஆதிக்கத்தை உடைக்க மஹிந்திரா ஆரம்பித்துவிட்டது. மஹிந்திரா பிராண்டில் மேலும் சில எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், 505 என்பது 5005ஆக மாறும் என்பது உறுதி. அதேபோல், மற்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையும் முன்னேற்றம் கண்டிருப்பது பார்ப்பதற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதேநேரம் மேற்கூறப்பட்ட பிராண்ட்களை தவிர்த்து, சந்தையில் பிரபலமில்லாத நிறுவனத்தில் எலக்ட்ரிக் காரை வாங்குவதை கஸ்டமர்ஸ் குறைத்து கொண்டுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 15, 2023, 11:16 [IST]
English summary
Electric cars sales 2023 april top 10 brands
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X