சும்மா சார்ஜ் போட்டு எடுத்தாலே பல கிமீ-க்கு ஓடும்!! இந்த 10 எலக்ட்ரிக் கார்கள் தான் பெஸ்ட்... ஆய்வு சொல்லுது!
உலகளவில் மொத்த ஆட்டோமொபைல் துறையும் எலக்ட்ரிக்கை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், அவற்றை அவ்வப்போது சார்ஜ் செய்வதுதான். ஒருமுறை சார்ஜ் செய்தாலே பல நூறு கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்தாலும், அவற்றை பெரும்பான்மையான மக்களால் வாங்க முடிவதில்லை.
இதற்கு காரணம், அவற்றின் அதிகமான விலை. சாதாரண மக்களால் வாங்கக்கூடிய எலக்ட்ரிக் கார்கள் கூட ரூ.7 - 8 இலட்சத்தில்தான் குறைந்தப்பட்ச விலையை கொண்டுள்ளன. சரி... இவ்வளவு இலட்சங்களை கொடுத்து வாங்கிய எலக்ட்ரிக் காரை தொலைத்தூர பயணங்களுக்கு தைரியமாக எடுத்து செல்ல முடியுமா என்றால், அதிலிலும் பிரச்சனை இருக்கிறது.

ஏனெனில், விலை குறைவான கார்களில் ரேஞ்ச் குறைவாகவே இருக்கிறது. நம் இந்தியாவில் சார்ஜிங் வசதிகள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இதனாலேயே முடிந்த வரையில் அதிக ரேஞ்ச் உடன் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய கார் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் சார்ந்த எட்மண்ட்ஸ் நிறுவனம் மொத்தம் 43 வெவ்வேறு விதமான எலக்ட்ரிக் கார்களை சோதனை செய்து, அவற்றுள் அதிக ரேஞ்சை வழங்கும் கார்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
ரேஞ்ச் என்றால் ஒன்றுமில்லை, காரின் பேட்டரி 100% சார்ஜில் இருந்து 0% சார்ஜ் வரையில் காரை இயக்கும் அதிகப்பட்ச தூரம். மைலேஜ் போன்றதுதான் இதுவும். சிலரால் கார் நிறுவனம் கூறும் ரேஞ்சை பெற முடியாமல் போகலாம். எட்மண்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஹூண்டாயின் ஐயோனிக் 6 எலக்ட்ரிக் செடான் உலகிலேயே அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் காராக விளங்குகிறது.

சிங்கிள் மோட்டார் மூலம் பின் சக்கரங்களில் இயங்கும் ஐயோனிக் 6 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் சுமார் 1,400கிமீ என கூறப்படுகிறது. இதற்கடுத்து 2வது இடத்தில் 2022 கியா இவி6 1,240கிமீ ரேஞ்ச் உடன் உள்ளது. தென்கொரிய எலக்ட்ரிக் கார்களான ஐயோனிக் 6 மற்றும் இவி6 இரண்டும் ஒரே விதமான செட்-அப்பில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து 3வது இடத்தில் ஐயோனிக் 6 காரின் இரட்டை-மோட்டார் வெர்சன் உள்ளது.
மோட்டார்களின் எண்ணிக்கை அதிகரித்தால், காரின் செயல்படுதிறன் இன்னும் சிறப்பானதாக இருக்கும். ஆனால், அதேநேரம் காரின் ரேஞ்ச் குறையும். போர்ஷே டைகன் 4எஸ் இந்த வரிசையில் ஏறக்குறைய 1,110கிமீ ரேஞ்ச் உடன் 4வது இடத்தில் உள்ளது. 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே கியா இவி6 ஜிடி மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 ட்யூயல்-மோட்டார் கார்கள் உள்ளன.

மெர்சிடிஸின் இக்யூஎஸ் 450+ எலக்ட்ரிக் செடான் கார் இந்த வரிசையில் 7வது இடத்தில் உள்ளது. இந்த பென்ஸ் எலக்ட்ரிக் கார் 954கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. ஜெனேஸிஸ் ஜி80 எலக்ட்ரிக் கார் 946கிமீ ரேஞ்ச் உடன் 8வது இடத்திலும், போர்ஷே டைகன் ஜிடிஎஸ் ஏறக்குறைய 940கிமீ ரேஞ்ச் உடன் 9வது இடத்திலும் உள்ளன.
எலக்ட்ரிக் கார்கள் உலகில், விற்பனையில் முன்னணியில் இருக்கும் டெஸ்லாவின் மாடல் 3 இந்த வரிசையில் 10வது இடத்திலேயே உள்ளது. ஏனெனில், இந்த டெஸ்லா காரின் ரேஞ்ச் 915கிமீ மட்டுமே ஆகும். எலக்ட்ரிக் கார்களின் சார்ஜிங் வேகத்தை சில காரணிகள் இடையூறு செய்வதாக எட்மண்ட்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது. பயன்படுத்தப்படும் பேட்டரி தொழிற்நுட்பம், சார்ஜர் திறன், எலக்ட்ரிக் காரின் எடை மற்றும் சார்ஜை ஏற்றுக்கொள்ளும் திறன் உள்ளிட்டவை அந்த காரணிகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எட்மண்ட்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களின் பேட்டரியின் திறனை கணக்கில் எடுத்துக் கொண்டது மட்டுமின்றி, சார்ஜ் ஆகும் வேகம் மற்றும் பேட்டரி தொழிற்நுட்பத்தையும் ஆராய்ந்து பார்த்தே மேற்கூறப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்ட்டை பார்க்கும்போது, ஹூண்டாய், கியாவின் ஆதிக்கமே அதிகமாக உள்ளதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









