எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்ஸில் டிக்கெட் கட்டணம் இவ்ளோதானா! கூட்டத்தை எப்படிதான் கண்ட்ரோல் பண்ண போறாங்களோ!
மும்பை நகர பொதுமக்கள் இனி தினமும் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களில் உல்லாசமாக சவாரி செய்யலாம். மும்பையின் பொது போக்குவரத்து நிறுவனமான பெஸ்ட், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை தனது வாகனங்களின் எண்ணிக்கையில் இணைத்தது.
இந்த சூழலில் தற்போது மும்பை நகரில் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மும்பை நகரில் மிகவும் பிரபலமான டீசல் டபுள் டக்கர் பஸ்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் மும்பை நகரின் முதல் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் சேவை வெறும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே இயக்கப்பட்டது.

சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினலில் இருந்து நாரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலைநிகழ்ச்சிகளுக்கான தேசிய மையம் பகுதி வரை மட்டுமே முதல் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த இடைவெளிக்கான கட்டணமாக வசூல் செய்யப்பட்டது வெறும் 6 ரூபாய் மட்டுமே என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களில் கண்டக்டர்கள் இருக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக டிஜிட்டல் டிக்கெட் முறை பின்பற்றப்படுகிறது.
மும்பை நகரில் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் சேவை இன்றுதான் (பிப்ரவரி 21) தொடங்கப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களுக்கு இஐவி 22 என பெயரிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் மும்பை நகரில் மொத்தம் 20 எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் மும்பை நகரில் ஒட்டுமொத்தமாக 200 எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களில் 231 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு மிகவும் குறைவான நேரம்தான் ஆகும். வெறும் 1.5 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரத்திற்கு உள்ளாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும். ஆனால் ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பி விட்டால், இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் 250 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும்.
இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், மும்பை நகரில் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மும்பை மட்டுமல்லாது, பெங்களூர் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஏற்கனவே எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவிலேயே முதல் முறையாக மும்பை நகரில் தற்போது எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் பலரும் தற்போது மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். எனவே மும்பை நகரில் எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு மட்டுமின்றி, பொது போக்குவரத்தான எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடும் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்பட்டு கொண்டுள்ள கார்பன் உமிழ்வை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இந்திய சாலைகளை ஆட்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு நட்பான வாகனங்களும் தற்போது இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








