ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே பரவாயில்ல போலிருக்கே... புலம்ப வைக்கும் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார்!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே பரவாயில்லை என கூறும் அளவிற்கு மிக மிக குறைவான ரேஞ்ஜ் திறனுடன் எலெக்ட்ரிக் மினி கன்வர்டபிள் கூப்பர் எஸ்இ (Mini Cooper SE Convertible) மின்சார கார் உருவாக்கப்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மினி கூப்பர் எஸ்இ கன்வர்டபிள் எலெக்ட்ரிக் கார் (Mini Cooper SE Convertible) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 999 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. எலெக்ட்ரிக் மோட்டாரில் மிக சிறந்த இயக்க திறனை வழங்குவதற்காக 184 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய மின்மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மினி

இந்த மோட்டார் வெறும் 8.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இத்துடன், ஓர் முழு சார்ஜில் 198 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் கூடுதல் சிறப்பு என்ன என்றால் இதன் மேற்கூரையை தேவை என்றால் விரித்தும், தேவை இல்லை என்றால் மடக்கிக் கொள்ளவும் முடியும்.

இத்தகைய சிறப்பு வசதியே இந்த வாகனத்தில் மினி நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இந்த செயலை வெறும் 18 செகண்டுகளிலேயே செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் துணியால் ஆனது என்பது குறிப்பிடத்தகுந்தது. மழை மற்றும் வெயில் போன்றவற்றை தாங்கும் திறன் கொண்டது. இதேபோல், இந்த மேற்கூரையை விரித்துக் கொண்டு ஏசி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மினி

மேற்கூரை துணியால் ஆனது என்பதால் ஏசி வெளியே போய் விடுமோ என எண்ணிக் கொள்ள வேண்டும். துளியளவும் காற்று வெளியே போகாது. இதேபோல், தூசி மற்றும் மழை நீர் உள்ளிட்டவற்றையும் இந்த மேற்கூரை காருக்குள் கொண்டு வராது. இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட காரையே மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, மினி நிறுவனம்.

இரண்டு விதமான நிற தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிக் கொள்ள முடியும். எனிக்மேட்டிக் கருப்பு (Enigmatic Black) மற்றும் ஒயிட் சில்வர் (White Silver) ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும். அதேவேளையில், கதவின் கை பிடிகள், பக்கவாட்டு ஸ்கட்டில்கள் மற்றும் முன்-பின் பக்க லைட்டுகள் இருக்கும் பகுதிகளில் பிரத்யேக நிறமாக ரெசல்யூடே ப்ரோன்ஸே நிறுவனம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மினி

இத்துடன், மினி லோகோவிற்கு பிரத்யேக நிறமாக பியானோ பிளாக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் என்பதால் 'இ' லோகோ இந்த காரில் பயன்படுத்தி இருக்காங்க. இதுவும், தனித்துவமான நிற தேர்வால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. முன் பக்க ஏப்ரானில் இதைக் காணலாம். பின் பகுதியிலும் இ எனும் லோகோ பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதனால் சிறப்பு பேட்ஜ்களும் காரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் காண முடிகின்றது. 1 முதல் 999 வரையிலான எண்கள் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், 17 அங்குல 2 டோன் நிறத்திலான அலாய் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது எலெக்ட்ரிக் மினி கன்வர்டபிள் ஓர் சிறப்பு பதிப்பை என்பதை வெளிக்காட்டும் வகையில் இருக்கின்றது.

மினி

இதனை மிக சிறந்த பிரீமியம் வசதி நிறைந்த காரா மினி உருவாக்கி இருக்கின்றது. எலெக்ட்ரிக் காரில் உட்பகுதியில் பன்முக பிரீமியம் அம்சங்களை நம்மால் பார்க்க முடிகின்றது. லெதர் இருக்கைகள், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இருக்கை ஹீட் மற்றும் அட்ஜஸ்டபிள் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன் உட்பகுதியை மேலும் பிரீமியமானதாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக பியானோ கருப்பு, ஆம்பியன்ட் லைட் மற்றும் மினி எலெக்ட்ரிக் மஞ்சள் நிற அக்செண்டுகள் மற்றும் ஸ்டார்ட் - ஸ்டாப் டாகிள் சுவிட்ச் என பன்முக சிறப்பு வசதிகள் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஹெட்-அப் திரை, வழித்தடம், ரேஞ்ஜ் விபரம் மற்றும் டிரைவிங் டிப்ஸ் ஆகியவற்றை வழங்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

மினி

மேலும், ஆக்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டாப் மற்றும் கோ ஃபங்சன், மினி டிரைவிங் அசிஸ்ட் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே, இதில் ரைடிங் அனுபவம் வேற லெவலில் இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அதேவேளையில், மிக மிக குறைவான ரேஞ்ஜை மட்டுமே வழங்கும் வகையில் இந்த காரை மினி நிறுவனம் உருவாக்கி இருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதுதவிர, 999 யூனிட்டுகளை மட்டுமே ஒட்டுமொத்தமாக விற்பனைக்காக தயார் செய்திருப்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இப்போது வெளியீடு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக இதன் விற்பனையை தொடங்க மினி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2023, 17:40 [IST]
English summary
Electric mini convertible unveiled with 198 km range
மேலும்... #மினி #mini
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X