Electric Scooter Ban எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்ட திடீர் தடை! ஏன் தெரியுமா?

இன்று உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசு மட்டுமல்ல பல அமைப்புகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்குச் சலுகைகள் உள்ளிட்ட பல சப்போர்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே பிரான்ஸ் தலை நகர் பாரீஸில்தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதன்முறையாக பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது பாரீஸில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பெரும் முரணாக இருக்கிறது அல்லவா இதைப் பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.

Electric Scooter Ban எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்ட திடீர் தடை! ஏன் தெரியுமா?

பாரீஸில் பப்ளிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் நீங்கள் நினைப்பது போல நம்மூரில் உள்ள ஸ்கூட்டர் கிடையாது. மாறாக நின்று கொண்டே பயணிக்கூடிய வித்தியாசமான ஸ்கூட்டர் இது. இது நகரில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

மக்களுக்கு இது தேவை என்றால் தங்கள் செல்போனில் ஸ்கேன்செய்து இதை எடுத்து பயன்படுத்தலாம். இதற்கான கட்டணத்தையும் செல்போன் மூலமே செலுத்த முடியும். இந்நிலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் நகரில் ஆங்காங்கே விபத்துகள் அதிகம் நடந்து வருவதாகப் புகார்கள் எழுந்தது.

Electric Scooter Ban எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்ட திடீர் தடை! ஏன் தெரியுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நடந்த விபத்தில் 31 வயது பெண் ஒருவர் பலியானார். இந்நிலையில் இந்த ஸ்கூட்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்தது. ஆனால் இந்த ஸ்கூட்டர் சேவையை நடத்தி வரும் நிறுவனம் நகரில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் நடக்கும் விபத்து மிகக் குறைவு என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனால் இந்த பிரச்சனைக்கு மக்களிடமிருந்தே முடிவைப் பெற பாரீஸ் மேயர் அனீ ஹிடால்கோ என்பவர் கட்டுபாடுகறள்ள வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார்.பாரீஸ் நகரில் மொத்தம் 13.8 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

Electric Scooter Ban எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்ட திடீர் தடை! ஏன் தெரியுமா?

இந்த வாக்கெடுப்பில் 91,300 பேர் பாரீஸ் நகரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என வாக்களித்துள்ளனர். இதனால் அந்த நகரில் பப்ளிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக இந்த ஸ்கூட்டர்களை வாங்கி பயன்படுத்த எந்த விதமான தடையும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பப்ளிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் மக்கள் கடும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளும், நடை பாதைகளிலும் சுமார் 27 கி.மீ வேகம் வரை பயணிக்கின்றனர். இதனால் விபத்துக்கள் நடக்கிறது. 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட இந்த ஸ்கூட்டரை சட்ட ரீதியாகப் பயன்படுத்த முடிகிறது. இதனால் விபத்துக்கள் அதிகமாக நடந்துள்ளது.

இந்த பிரச்சனை இப்பொழுது அல்ல கடந்த 2019ம் ஆண்டே துவங்கிவிட்டது. அப்பொழுதே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விதிமுறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டது. டிராஃபிக் விதிமுறைகளை மீறினால் 135 யூரோ அதாவது சுமார் ரூ12 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதிக வேகத்தில் பயணித்தால் 1.33 லட்சம் அபராதம், நடைபாதையில் பார்க் செய்தால் ரூ3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் அதையும் மீறித்தான் தற்போது விபத்துக்கள் நடந்துவருவதால் இதற்காகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது தவறு கிடையாது மக்கள் அதை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதை உரிய இடத்தில் பார்க் செய்ய வேண்டும். மிதமான வேகத்தில் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க வேண்டும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, April 3, 2023, 12:40 [IST]
English summary
Electric scooter ban in paris after referendum against it
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+