சிஎம்-மே நேரடியா களமிறங்கீட்டாரு! பெட்ரோல் பங்க்குகள் மொத்தமா மாற போகுது! இதைதான் ரொம்ப நாளா எதிர்பாத்தோம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) குறித்த விழிப்புணர்வு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இன்னமும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டி கொண்டிருப்பதற்கு பின்னால், மிக முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்கள் (Charging Stations) போதிய அளவில் இல்லாததுதான் அதற்கு காரணம்.

இந்த குறையை போக்க அரசு முயற்சி செய்து வரும் நிலையில், பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்து வரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு முதல் அமைச்சர் முக்கியமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் தமிழ்நாடு (Tamil Nadu) முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) அல்ல.

Petrol Bunk

கோவா முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த்! கோவா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் பங்க்குகளில் (Petrol Bunk), சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடனான கூட்டத்தை, கோவா மாநில முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் சமீபத்தில் நடத்தினார். சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான வழிகள் குறித்து, இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தில்தான், பெட்ரோல் பங்க்குகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் நிறுவும்படி, எண்ணெய் நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Ola S1 Pro

இது குறித்து கோவா முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ''எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினேன். எங்கெல்லாம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளதோ, அங்கெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும்படி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். இதற்கு அரசு ஆதரவு அளிக்கும்'' என்றார்.

சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது அதிகரிக்கும் எனவும் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் விளைவாக காற்று மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து கோவா மாநிலத்தை பாதுகாக்க முடியும் என அவரது அரசு நம்புகிறது.

முன்னதாக வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து கோவா மாநில அரசு துறைகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யலாம். இது நடக்கும்பட்சத்தில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக உயரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, September 8, 2023, 18:11 [IST]
English summary
Electric vehicle charging stations at petrol bunks check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+