ஏழைகளுக்கான கம்மி பட்ஜெட் கார்களை தயாரிக்கப்போகும் டெஸ்லா! இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருக்கு!

இன்று உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் என்றால் டெஸ்லாவை தான் சொல்ல வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து அதிகமான கார்களை விற்பனை செய்து வருகிறது. இதற்குக் காரணம் தனித்துவமான தயாரிப்பு தான். பல பெரிய நிறுவனங்களே தானியங்கி கார்களை தயாரிக்கத் திண்டாடி வரும் நிலையில் டெஸ்லா அதைச் சாதித்துள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் கார்களை மக்கள் அதிகம் விரும்பி வரும் நிலையில் டெஸ்லா நிறுவனம் தனது புதிய தலைமுறை கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மெக்ஸிக்கோவில் உலகின் மிகப்பெரிய இவி தொழிற்சாலையைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளது. இங்குத் தனது புதிய தலைமுறை டெஸ்லா கார்கள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த கார்கள் பல மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்பங்களுடன் தயாரிக்கப்படவுள்ளது.

ஏழைகளுக்கான கம்மி பட்ஜெட் கார்களை தயாரிக்கப்போகும் டெஸ்லா! இந்தியாவுக்கு வர வாய்ப்பு இருக்கு!

பொதுவாகவே டெஸ்லா கார்கள் அதிக தொழிற்நுட்ப அம்சங்களுடன் தான் கார்களை உருவாக்கும். தற்போது புதிய தலைமுறையில் முற்றிலும் மாறுபட்ட கார்களை உருவாக்க முடிவுசெய்துள்ளது. அதில் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது முக்கியமான விஷயம் என்னவென்றால் டெஸ்லா இந்த புதிய தலைமுறை கார்களில் குறைந்த பட்ஜெட் கார்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

தற்போது டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 கார் தான் குறைந்த விலை காராக இருக்கிறது. தற்போது அதை விடக் குறைந்த விலையில் ஒரு காரை உருவாக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. டெஸ்லா கார்கள் சிறந்த கார்களாக இருந்தாலும் அதை அனைத்து தரப்பு மக்களும் வாங்கக்கூடிய நிலையில் இல்லை என்ற விமர்சனம் இருக்கிறது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் குழந்தை விலை டெஸ்லா காரை உருவாக்க மடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது டெஸ்லா கார்களிலேயே குறைந்த விலை கார் என்றால் மாடல் 3 கார் தான் இது அமெரிக்காவில் 43 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதை விட குறைந்த விலையில் மக்கள் எளிதாக வாங்கும்படியான கார்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

பலர் எலான் மஸ்க் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ20.52 லட்சம் என்ற விலையில் புதிய தலைமுறை குறைந்த விலை டெஸ்லா காரை தயாரிப்பார் என எதிர்பார்க்கின்றனர். டெஸ்லா கார் என்றாலே ஆட்டோனமஸ் வசதி கொண்ட கார்கள் தான் குறைந்த விலை கார் என்றாலும் அந்த வசதியும் இருக்கும். மேலும் சில அடிப்படை வசதிகள் கொண்ட காராக இருக்கும் என்பதால் இந்த விலை வந்துவிடும் என நம்புகின்றனர்.

டெஸ்லா நிறுவனத்தின் பெரும் கனவாக இருப்பது ஆண்டிற்கு 2 கோடி கார்களை உலகளிவில் விற்பனை செய்ய வேண்டும் என்பது தான். இந்த கனவை 2030ம் ஆண்டிற்குள் எட்டி பிடிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கு இந்த குறைந்த விலை கார் நிச்சயம் உதவி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய மார்கெட்டாக இருப்பது அமெரிக்கா மற்றும் சீனாதான் உலகளவிலும் இவை இரண்டும் தான் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தை, 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் டெஸ்லா இன்னும் தன் பிஸ்னஸை துவங்கவில்லை. மேலும் சில வளர்ந்த நாடுளில் தனது பிஸ்னஸை அதிகம் விஸ்தரிப்பு செய்துள்ளது.

ஆனால் வரும் காலங்களில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் டெஸ்லா தனது கார்களை தயாரிக்கவில்லை என்றால் அதன் இலக்கை எட்டி பிடிப்பது மிகவும் கடினம். டெஸ்லா கார்களை வாங்க இந்தியர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்தியாவில் டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய டிமாண்டும் இருக்கிறது.

ஏற்கனவே இதற்கான முயற்சியைச் செய்து எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்துவிட்டார். ஆனால் இந்தியாவில் ஆலை அமைத்து கார்களை உற்பத்தி செய்தால் டெஸ்லா நிறுவனத்தால் இந்திய மார்கெட் மட்டுமல்ல தெற்காசிய மார்கெட்களையும் பிடித்துவிட முடியும். இப்படி இந்தியாவிற்குக் குறைந்த விலை டெஸ்லா கார் வந்தால் நீங்கள் வாங்குவீர்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 9, 2023, 9:20 [IST]
English summary
Elon musk revealed about next gen budget tesla car
மேலும்... #டெஸ்லா #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+