அமைச்சர் பொன்முடி வீட்டிலிருந்து அமலாக்கத்துறை தட்டி தூக்கிய காரோட விலை இவ்ளோ அதிகமா! இந்த காரு இவரு வீட்டிலா!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டைத் தொடர்ந்து தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடியும் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கி இருக்கின்றார். நீண்ட நேரமாக நடைபெற்ற சோதனையில் இவரிடம் இருந்து கணக்கில் வராத பல லட்சக் கணக்கான ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவரிடத்தில் இருந்து ரொக்கம் மற்றும் ஆவணங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட சில சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சரின் வீட்டில் இருந்த விலையுயர்ந்த லக்சூரி கார் ஒன்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஓட்டிச் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Minister ponmudis lamborghini urus

அவர்கள் பறிமுதல் செய்திருப்பது லம்போர்கினி உருஸ் ஆடம்பர காராகும். இது ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எஸ்யூவி ரக காராகும். இதன் விலை சுமார் 3.5 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 4 கோடியையும் தாண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரையே அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர். அமைச்சர் வீட்டில் இந்த விலையுயர்ந்த கார் இருந்தது இப்போதே ஒரு சிலருக்கு தெரிய வந்திருக்கின்றது. உலக அளவில் புகழ்பெற்ற அதிக சொகுசு வசதிகள் நிறைந்த ஓர் வாகனமே லம்போர்கினி உருஸ் ஆகும்.

Minister ponmudi

இதனால் இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் வீட்டில் இந்த கார் கட்டாயம் இடம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, பாலிவுட் திரை நட்சத்திரங்களின் பலரின் கை வசம் இந்த கார் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றது. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திடம்கூட இந்த கார் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய புகழ்பெற்ற கார் மாடலையே அமலாக்கத்துறை தற்போது அமைச்சரிடம் இருந்து பறிமுதல் செய்திருக்கின்றது. இது அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடல் மட்டுமல்ல அதிக வேகத்தில் சீறியப் பாயும் வாகனமும்கூட. இதற்காக இந்த காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ-சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 650 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரால் அதிகபட்சமாக மணிக்கு 306 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.

அதுமட்டுமில்லைங்க, வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் இந்த லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இத்தகைய அதிக வேகத்தில் இயங்கும் காரே உருஸ் ஆகும். இது போன்ற ஏகப்பட்ட அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே உலகின் அதி-வேக எஸ்யூவி ரக காராக உருஸ் விளங்குகின்றது.

மேலும், திரை நட்சத்திரங்கள் மற்றும் செல்வந்தர்கள் பலரின் விருப்பமான காராகவும் அது காட்சியளிக்கின்றது. சொகுசு வசதிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சாலையில் பயணிக்கின்றோம் என்கிற அனுபவத்திற்கு பதிலாக மிதக்கும் அனுபவத்தை வழங்கும் அளவிற்கு மிக தாராளமான லக்சூரி அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்தகைய ஆடம்பர காரைதான் அமலாக்கத்துறையினர் தற்போது அமைச்சரின் வீட்டில் இருந்து தட்டி தூக்கி இருக்கின்றனர். அவரது வீட்டில் லம்போர்கினி உருஸ் சொகுசு கார் மட்டுமல்ல மினி கூப்பர் உள்ளிட்ட அதி-நவீன வசதிகள் அடங்கிய வேறு சில கார்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலரின் கனவு வாகனமாக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இந்த கார் விற்பனையிலும், உற்பத்தியிலும் தற்போது தொடர்ச்சியாக சாதனைப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் இந்த காருக்கு கார் காதலர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 18, 2023, 14:04 [IST]
English summary
Enforcement department seized minister ponmudi s lamborghini urus luxury car video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+