உதயநிதி வாங்கி கொடுத்ததுலாம் ஒரு காரா! எடப்பாடியார் வாங்கி இருக்கும் வண்டிய பாருங்க! ஸ்டார் ஹோட்டலே தோத்திடும்
சமீபத்தில் மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு, உதயநிதி ஸ்டாலின் மிக உயரிய விலைக் கொண்ட மினி கூப்பர் சொகுசு காரை பரிசளித்து அவரை அசர வைத்தார். இந்த சம்பவம் அரங்கேறிய இந்த கால கட்டத்திலேயே மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் கார் கொள்முதல் சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றது.
அது வேறும் யாரும் இல்லிங்க தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடிப்பாடி பழனிச்சாமிதான் அது. இவர் அதி நவீன மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த சூப்பரான வாகனத்தை தன்னுடைய தேர்தல் கள பயன்பாட்டிற்காக வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வாகனத்தையே அவர் வாங்கி இருக்கின்றார்.

இந்த வாகனத்தை தன்னுடைய பிரச்சார பயணங்களுக்காக மட்டுமே வாங்கி இருக்கின்றார் என கூறப்படுகின்றது. தற்போதைய ஆளும் கட்சி திமுக-வின் ஆட்சி காலம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. இந்த நிலையில் இப்போதே பிரச்சாரத்திற்கு தயாராகும் விதமாக இபிஎஸ் விலை உயர்ந்த சொகுசு வாகனத்தை வாங்கி இருக்கின்றார்.
இதன் வாயிலாகவே அவர் தன்னுடைய வாக்கு சேகரிக்கும் பயணங்களை இனி தொடருவார். விரைவில் இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான தீவிர வாக்கு சேகரிப்பு பணியின் போது அவர் இந்த வாகனத்தையேப் பயன்படுத்த இருக்கின்றார். தேர்தல் பிரச்சாரம் என்பது வாரம், நாட்கள் கடந்து நடைபெறக் கூடிய ஓர் மேட்டர் ஆகும்.

இத்தகைய ஒன்றை களைப்பில்லாமல் செய்ய வாகனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எனவேதான் எடப்பாடி பழனிச்சாமி ஃபோர்ஸ் அர்பேனியா வாகனத்தை தேர்வு செய்திருக்கின்றார். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி வாங்கி இருக்கும் இந்த வாகனம் ஓர் நடமாடும் சொகுசு பங்களா என கூறலாம்.
இது பிரச்சார பயணங்களை வீட்டுக்குள் இருந்தபடியே மேற்கொள்ளும் அனுபவத்தை வழங்கும். அந்தளவிற்கு, அதிக லக்சூரி வசதிகளை மிக தாராளமாக கொண்டிருக்கும் மினி வேனே ஃபோர்ஸ் அர்பேனியா ஆகும். மிகவும் ஹேப்பியான ரைடு அனுபவத்தை இந்த வாகனத்தில் நம்மால் பெற்றுக் கொள்ளம் முடியும்.

அதேவேளையில், மிகவும் ஸ்டைலான வாகனமாகவும் அது காட்சயளிக்கின்றது. இத்தாலிய டிசைனே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன் வெளிப்புற அழகு கட்டாயம் இந்த கால இளைஞர்களை சுண்டி இழுக்கும். சமீபத்தில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு என்றே மிக சூப்பரான ஓர் வாகனத்தை வாங்கினார்.
மிகவும் கம்பீரமான தோற்றம் மிலிட்டரி பச்சை நிறம் என அசத்தலான வாகனமாக அது இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தமிழக அரசியல் களத்தை பரபரபாக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி புதிய ஃபோர்ஸ் அர்பேனியா வாகனத்தை வாங்கி இருக்கின்றார். இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் பத்து, பதினேழு பேரால்கூட பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அது 10, 13 மற்றும் 17 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதிக சொகசான வசதிகளுடன், குடும்பத்துடன் பயணிக்க விரும்பும் தொழிலதிபர்களைக் கவரும் விதமாகவே இந்தியாவில் ஃபோர்ஸ் நிறுவனம் இந்த அர்பேனியாவை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த வாகனத்தையே தன்னுடைய தேர்தல் பிரச்சார களத்திற்கு ஏற்ற வாகனமாக அவர் மாற்றி இருக்கின்றார், இபிஎஸ்.
இதனை தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் வாங்கி இருப்பதனால் அதில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, உணவு உண்பதற்கு, ஓய்வெடுப்பதற்கான வசதிகளை இந்த வாகனம் கொண்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. வழக்கமாக இந்த வாகனம் 29.83 லட்சம் ரூபாய் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
எடப்பாடி அவருடைய தேவைக்கேற்ப சில கூடுதல் சொகுசு அம்சங்களை இந்த வாகனத்தில் சேர்த்திருப்பதனால், அதன் விலை இன்னும் பலமடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறப்பு சொகுசு வசதிகளைத் தாண்டி வெளிப்புறத்தில் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் விதமாக ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அவற்றில் ஃபுட்போர்டு செய்தபடி அவர்களால் பயணிக்க முடியும். இதுபோன்ற பன்முக சிறப்பு மாற்றங்கள் அந்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபோர்ஸ் அர்பேனியாவின் வெளிப்புற அழகிய தோற்றத்திற்காக எல்இடி டிஆர்எல்கள், எல்இடி இன்டிகேட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், புரஜெக்டர் ஹெட்லேம்புகள், சீல்டு கிளாஸ் பேனல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இத்துடன், குயிக் கூலிங் சிஸ்டம், ரெக்லைனிங் சீட்டுகள், சார்ஜிங் போர்ட்டுகள் என பல்வேறு பிரீமியம் அம்சங்கள் அர்பேனியாவில் இடம் பெற்றிருக்கின்றன. இதில், கூடுதல் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங் வீல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது. இது தவிர டூயல் ஏர் பேக்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா போன்ற உயர் ரக தொழில்நுட்ப கருவிகளே அர்பேனியாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்களே அர்பேனியாவை வேன் என்பதற்கு பதிலாக சொகுசு கப்பல் என அழைக்கச் செய்கின்றது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2.6 லிட்டர் டர்போ டீசல் மோட்டாரே அர்பேனியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எடப்பாடியார் வாங்கி இருக்கும் இந்த வாகனம் அவரை வீட்டுக்குள்ளே இருப்பதை போல உணர வைக்கும். அது தவிர பாதுகாப்பு வசதிகளும் மிக தாராளமாக இருக்கும். குறிப்பாக, அவர் அமர்ந்து செல்லும் முன் இருக்கையில் ஏற் பேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர ஏசி துளைகள், பொழுதுபோக்கு திரை ஒன்றும்கூட முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









