உலக இவி தினம் ஸ்பெஷல்: இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் விலை குறைவான கார்களின் லிஸ்ட் இதோ! அட இந்த காரோட வில
இந்தியாவில் ஒரு சில கார் உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் கார்களுக்கு இணையான மலிவு விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து பிரத்யேகமாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் கார்களை தேடிக் கொண்டிருப்போருக்கு இந்த தகவல் நிச்சயம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
செப்டம்பர் 9 ஆம் தேதி உலக மின்சார வாகன தினமாக (World EV Day)க் கொண்டாடப்பட்டு வருகின்றது. மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவே இந்த இவி தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்த தினத்தின் ஸ்பெஷலாகவே இந்த பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் பிரத்யேகமாக உங்களுக்காக வெளியிட்டு இருக்கின்றது. வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். அதாவது, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலைக் காணலாம்.

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ரூ. 7.98 லட்சம்: இதுவே இந்தியாவின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் காராகும். இதன் வருகைக்கு முன்னர் வரை டாடாவின் டியாகோ இவி-யே இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்தது.
ஆனால், ரூ. 7.98 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்ததன் விளைவாக இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் என்கிற மகுடம் கோமெட்டின் தலைகளுக்கு மாறி இருக்கின்றது. எம்ஜி கோமெட் இவியில் நான்கு முதல் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ஆனால், இரண்டு கதவுகள் மட்டுமே அதில் இடம் பெற்றிருக்கும்.

அதேவேளையில் பிரீமியம் அம்சங்களை இந்த கார் மிக தாராளமாகப் பெற்றிருக்கும். மிக மிக விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்றது. இதில், ஓர் முழு சார்ஜில் 230 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதற்காக 17.3 kWh பேட்டரி பேக் இந்த எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ரூ. 8.69 லட்சம்: எம்ஜி கோமெட் இவிக்கு அடுத்தபடியாக மிக மிக விலை குறைவான மின்சார காராக டியாகோ இவி இருக்கின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷன் நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராகும்.

இந்தியாவின் மிக மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கவர்ச்சியான ஹேட்ச்பேக் கார் இதுவே ஆகும். இந்த கார் இரண்டு விதமான பேட்டரி தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 19.2 kWh மற்றும் 24 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.
இவற்றின் ரேஞ்ச் திறன் 250 கிமீ மற்றும் 315 கிமீ ஆகும். முழு ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் மற்றும் 45க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதி என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சிட்ரோன் இசி3 (Citroen e-C3) ரூ. 11.50 லட்சம்: நம்முடைய இந்த இந்தியாவின் மலிவு விலை கார்கள் லிஸ்டில் மூன்றாவதாக பார்க்க இருக்கும் கார் மாடல் சிட்ரோன் நிறுவனத்தின் இ-சி3 ஆகும். இது ஓர் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காரில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
டாடா டிகோர் இவி (Tata Tigor EV) ரூ. 12.49 லட்சம்: இந்தியாவில் டாடா மோட்டார்ஸே பரந்த அளவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களின் லிஸ்டில் டாடாவின் தயாரிப்புகள் மட்டுமே மொத்தம் மூன்று இடத்தை விட்டன. இந்த டிகோர் இவி ஓர் முழு சார்ஜில் 315 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ரூ. 14.19 லட்சம்: இந்த கார் மாடலின் பெட்ரோல் வெர்ஷன் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயோ என்னமோ விற்பனையில் இந்த கார் ஜொலித்துக் கொண்டிருக்கின்றது. மிக சமீபத்திலேயே இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டாடா இந்தியாவில் வெளியீடு செய்தது.
இன்னும் ஒரு சில தினங்களில் விற்பனைக்கு வர இருக்கின்றது. புதிய வெர்ஷன் லாங் ரேஞ்ஜ் மற்றும் மிட் ரேஞ்ஜ் என்கிற பெயரிலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதில், லாங் ரேஞ்ஜ் வேரியண்ட் ஓர் முழு சார்ஜில் 465 கிமீ ரேஞ்ஜையும், மிட் ரேஞ்ஜ் தேர்வு 325 கிமீ ரேஞ்ஜையும் ஓர் முழு சார்ஜில் வழங்கும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த உலக மின் வாகன நாளில் ஓர் எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், மேலே உள்ள லிஸ்டில் உங்களுக்கு பிடித்த அல்லது ஏற்ற ஏதேனும் ஓர் கார் மாடலை தேர்வு செய்துக் கொள்ளவும். அனைத்தும் விலை மலிவானவை, அதேவேளையில், அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டவை. இதுதவிர செலவு செய்யும் பணத்திற்கு ஒர்த்தானவையாகவும் அவை இருக்கும்.


Click it and Unblock the Notifications









