என்னது இவி காரை ஈஸியா ஹேக் பண்ண முடியுமா? மத்திய அரசு சொன்ன பகீர் பதில்!
மத்திய போக்குவரத்துத் துறை இந்தியாவில் எலெக்ரிக் வாகனங்களுக்கு பொது சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படுவதில் அதன் மூலம் நடக்கும் சைபர் திருட்டிற்கான வாய்ப்பு குறித்தும், சாலை விபத்துக்கள் குறித்து பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் துறை சார்ந்த கேள்விகளை எழுப்புவதும், அதற்கு துறை சார்பில் துல்லியமான பதில்களை வழங்குவதும் வழக்கமாக நடக்கும் சம்பவங்கள் தான். இப்படியாகக் கேள்விகளுக்குப் பதில் வரும்போது சில சுவாரஸ்யமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும் அப்படி தற்போது கிடைத்துள்ள தகவல் தான் இவி ஹேக்கிங்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான பொதுவான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க அரசு மானியங்களை வழங்கி வருகிறது. இதன் எண்ணிக்கையும் அதிகப்படுத்தவும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பல தனியார் நிறுவனங்களும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் ஏற்றும் போது அதில் சைபர் திருட்டு நடப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது சார்ஜ்ங் போடும் போது அதில் உள்ள வயர் வழியாக கார் குறித்த தகவல்களை எல்லாம் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தித் திருட முடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி அளித்த பதிலில் குறித்து அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும், இதை இந்திய கம்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் நேரடியாகக் கண்காணிக்கிறது என்றும், சார்ஜிங் ஸ்டேஷன்களில் இப்படியாகத் தகவல் திருடுவதற்குச் சாதகமான பொருட்களுக்குத் தடை விதிக்கிறது என்றும் கூறினார்.
மேலும் இந்தியாவில் நடந்த சைபர் தாக்குதல்கள் குறித்த விபரங்களும் வெளியாகியுள்ள கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் மொத்தம் 2018ம் ஆண்டு 2,08,456 சம்பவங்களும், 2019ம் ஆண்டு, 3,94,499 சம்பவங்களும், 2020ம் ஆண்டு 11,58,208 சம்பவங்களும், 2021ம் ஆண்டு 14,02,809 சம்பவங்களும், 2022ம் ஆண்டு 13,91,457 சம்பவங்களும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அடுத்தாக வேறு ஒருளு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மூலம் இந்தியா அரசு மொத்தம் 147 லட்சம் அதாவது 1.47 கோடி பணத்தைச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனங்களால் விபத்து நடந்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த விபத்துக்களுக்காக நஷ்ட ஈட்டை வழங்கி வருகிறது.
மோட்டார் வாகன சட்டம் அடையாளம் தெரியாத வாகன விபத்து பிரிவின் கீழ் கடந்த 2022ம் ஆண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் படி அடையாளம் தெரியாத வாகனம் மூலம் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ50 ஆயிரமும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ2 லட்சமும் நஷ்ட ஈடாக வழங்கப்படுகிறது.
அடுத்தாக வேறு ஒரு ஒரு பதிலில் இந்தியாவில் மொத்தம் நடப்பு நிதியாண்டில் 12,200 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 3 ஆண்டுகள் கட்டமைக்கப்பட்ட சாலையின் நீளத்தை விட அதிகம் எனத் தெரிவித்துள்ளது. இது போக இந்தியாவில் தற்போது தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தாமத்திற்கு நெடுஞ்சாலைக்கான நிலங்களை கைப்பற்றுவதில் உள்ள சிக்கல்களால் தான் இந்த திட்டம் முடங்கிப்போய் இருப்பதாகக் கூறியுள்ளார். சார்ஜிங் ஸ்டேஷன்களில் சைபர் தாக்குதல் அல்லது ஹேக்கிஙற்கிற்கான வாய்ப்பு இருப்பது குறித்த தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








