பேங்க்ல இருக்க பணத்தை எல்லாம் இப்பவே வித்டிரா பண்ணி வைங்க! இந்த லிஸ்டல ஒன்ன இந்த மாசமே வாங்கிடலாம்!

நவம்பர் மாதம் பிறந்து விட்டது, இந்த மாதத்தில் பல முக்கியமான கார் மற்றும் பைக்குகள் அறிமுகமாக உள்ளன. ஆட்டோமொபைல் துறையில் பல முக்கிய அப்டேட்கள் இந்த மாதம் வெளியாக உள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.

ஸ்கோடா சூப்பர்ப்: நவம்பர் 2ஆம் தேதி ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் கார் சர்வதேச அரங்கில் புதிய தலைமுறை காராக அறிமுகமாக உள்ளது. இந்த காரின் வெளிப்புறம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு இந்த கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறம் ப்ரீமியமான இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது.

november launches

இதுபோக 13 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இந்தியாவிற்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தைியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் குறுக்கையிலான கார்கள் மட்டுமே விற்பனைக்கு வர உள்ளன.

புதிய தலைமுறை டஸ்டர்: ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் நிறுத்தப்பட்டதிலிருந்து இந்த கார் எப்பொழுது அப்டேட் செய்யப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதன்படி வரும் நவம்பர் 29ஆம் தேதி போர்ச்சுகலில் இந்த கார் முதல் முறையாக கான்செப்ட் காராக அறிமுகப்படுத்தப்பட போகிறது.

november launches

இந்த கார் சிஎம்எஃப் பி ஆர்க்கிடெக்சரில் உருவாக்கப்பட்ட காராகவும், இந்த கார் பெட்ரோல் மற்றும் ஃபிளக்ஸ் ஃப்யூயல் திறன் கொண்ட காராக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த புதிய அவதார டஸ்டர் கார் இந்தியாவிற்கு 2025-26 ஆம் ஆண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452: வரும் நவம்பர் 7ஆம் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் 452 பைக்கை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்துகிறது. இது அட்வெஞ்சர் டூவீலர் பைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 452 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

november launches

இந்த பைக் ஐந்து விதமான கலர் ஆப்ஷன்களுடன் எல்இடி லைட், யுஎஸ்பி முன்பக்க போக், ஆப்ஷனல் டியூப்லெஸ் டயர், டிஎப்டி கண்சோல் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ரைடு மோடுகள் கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை இந்தியாவில் பலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

டிரையம்ப் ஸ்கிரம்பிலர் 400 எக்ஸ் டெலிவரி: டிரையம்ப் நிறுவனம் தனது பைக்குகளை பஜாஜ் நிறுவனம் மூலம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதன்படி இதன் இரண்டாவது பைக்காக ஸ்கிரம்பிலர் 400 எக்ஸ் என்ற பைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிமுகமானது.

november launches

இந்த பைக் இந்தியாவில் ரூபாய் 2.63 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கின் டெலிவரி இந்த நவம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 398 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் ஸ்பீடு 400 பைக்கிலும் உள்ளது.

இது 40 பிஎஸ் பவரையும் 37.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. நீண்ட தூர பயணத்திற்கான சஸ்பென்ஷன் செட்டப், நீண்ட வீல் பேஸ், உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், உயரத்தில் சீட்டுகள் என இந்த பைக் ஸ்பீடு 400 பைக்கின் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது.

november launches

மஹிந்திரா பொலிரோ நியூ ப்ளஸ்: ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ பிளஸ் ஆம்புலன்ஸ் வெர்ஷனை வெளியிட்டு இருந்தநிலையில் இதன் பயணிகள் வெர்ஷன் இந்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்துக்குள் இந்த கார் அறிமுகமாகலாம். இதன் இன்ஜினை பொருத்தவரை 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்பீடு மேனுவல் இணைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஏஎம்ஜி சி43 : மெர்சிடிஸ் நிறுவனம் இந்த மாதம் தனது ஜிஎல்இ ஃபேஸ்லிஃப்ட் காரையும் புதிய ஏஎம்ஜி சி43 காரையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அறிமுகம் நவம்பர் 2 ம் தேதி நடக்க உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் ஜிஎல்இ காரில் உட்புறமும் வெளிப்புறமும் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்படவுள்ளன. முக்கியமாக இதில் 2.0 லிட்டர் எலெக்ட்ரிக் டர்போ சார்ஜர் மற்றும் 48 வோல்டு மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் பொருத்தப்பட உள்ளது. இது 42 பிஎஸ் பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த நவம்பர் மாதம் ஏகப்பட்ட வாகனங்கள் அப்டேட் ஆகி வெளியாக உள்ளன. பல புதிய வாகனங்களும் அறிமுகமாக உள்ளன. இது வருட கடைசி என்பதால் வாகன நிறுவனங்கள் இந்த ஆண்டு திட்டமிட்ட வாகனங்களை எல்லாம் இந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வந்து விடும். அதனால் பல வாகனங்களின் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரம் தீபாவளி,கிறிஸ்துமஸ், பொங்கல், என வரிசையாக பண்டிகை காலமாக வருவதால் இந்த காலகட்டங்களில் வாகனங்களின் விற்பனை நிச்சயம் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு புதிய வாகனங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த காலங்களில் புக்கிங் அதிகமாக இருக்கும் ஆரம்பத்திலேயே சிறப்பான விற்பனை இருந்தால் அந்த மொமண்டத்தை தொடர்ந்து கொண்டு சென்று குறிப்பிட்ட வாகனத்தின் விற்பனையை அதிகப்படுத்த முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களின் அறிமுகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நவம்பர் மாதத்தில் ஆறு முக்கியமான நிகழ்வுகள் ஆட்டோமொபைல் துறையில் நிகழ உள்ளன. அதைப்பற்றி தான் நாம் மேலே பார்த்தோம். இதுபோக அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும்போது இன்னும் கூடுதலாக வாகனங்கள் இந்த பட்டியலில் சேர வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 1, 2023, 12:42 [IST]
English summary
Exciting car and bike launches and debuts coming in november 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X