என்ன இவ்வளவு அழகா தமிழ் பேசுறாரு!! பெங்களூரு தொழிலதிபர் மாதிரியே தெரியலயே... எக்ஸ்போனெண்ட் சிஇஓ உடன்!!
பெங்களூரை சேர்ந்த எக்ஸ்போனெண்ட் எனர்ஜி நிறுவனம் நீர்-சார்ந்த தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் என்ற தொழிற்நுட்பத்தை எலக்ட்ரிக் வாகனங்களுக்காக கண்டுப்பிடித்து, வெளியீடு செய்துள்ளது. எனர்ஜி டெக்னாலஜி நிறுவனமான எக்ஸ்போனெண்ட் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்தவதற்கு ஆகும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காகவும், பேட்டரி சூடாகுவதை தடுப்பதற்காகவும் இந்த தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தொழிற்நுட்பம் பெங்களூரில் ஓர் நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் சார்பிலும் ஒரு குழு பங்கேற்றது. நிகழ்ச்சியில் எக்ஸ்போனெட் எனர்ஜியின் புதிய கண்டுப்பிடிப்பை நேரில் பார்வையிட்ட நமது டிரைவ்ஸ்பார்க் குழு, பின்னர் எக்ஸ்போனெண்ட் நிறுவனத்தின் சிஇஓ அருண் வினாயக் உடன் கலந்துரையாடி, இந்த தொழிற்நுட்பம் குறித்தும், எக்ஸ்போனெண்ட் நிறுவனம் குறித்தும் கேட்டறிந்தது. அந்த வீடியோவை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
எக்ஸ்போனெண்ட் எனர்ஜி கண்டுப்பிடித்துள்ள புதிய தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டமானது எலக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி சூடாகுவதை நீரின் உதவியுடன் தடுக்கக்கூடியதாக விளக்குகிறது. இந்த தொழிற்நுட்பத்தின் உதவியுடன் எலக்ட்ரிக் வாகனங்களில் 0-100% சார்ஜை வெறும் 15 நிமிடங்களில் எட்டி விடலாம் என நம்பும் எக்ஸ்போனெண்ட் எனர்ஜி, இதன் விளைவாக எலக்ட்ரிக் வாகனங்களின் விலை தற்போது இருப்பதை காட்டிலும் 30% வரையில் குறையலாம் என கணித்துள்ளது.

இந்த நீர்-சார்ந்த தொழிற்நுட்பத்தின் செயல்படுதிறனை உறுதிப்படுத்துவதற்காக, கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 25,000க்கும் அதிகமாக சார்ஜிங் செயல்முறைகளை செய்து காட்டியுள்ளது. இந்த செயல்முறைகளுக்காக 200க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை சுமார் 10 இலட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு எக்ஸ்போனெண்ட் இயக்கி உள்ளது. பெங்களூரில் மட்டுமே தற்போதைக்கு செயல்படும் இந்த நிறுவனம் விரைவில் சென்னை உள்பட இந்தியாவின் 5 முக்கிய நகரங்களுக்கு வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








