இவி பேட்டரி சூடாகுவதை தடுக்கும்!! நீரின் உதவியில் இயங்கும் டெக்னாலஜி - வீடியோவை முதலில் பாருங்க!

எக்ஸ்போனெண்ட் எனர்ஜி (Exponent Energy), பெங்களூரை சேர்ந்த ஆற்றல் தொழிற்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான இது புதியதாக நீர்-சார்ந்த தொழிற்நுட்பம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளது. அந்த நீர்-சார்ந்த தொழிற்நுட்பம் என்னவென்றால், தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (Thermal Management System) ஆகும்.

இந்த தொழிற்நுட்பத்தை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் எக்ஸ்போனெண்ட் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. பெங்களூரில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் கலந்து கொண்டது. நீர்-சார்ந்த தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை நேரில் காணும் வாய்ப்பை பெற்றோம். அப்போது, இந்த தொழிற்நுட்பத்தை பற்றி எங்களுக்கு தெரியவந்த விபரங்களை தமிழில் வழங்கியுள்ளோம். அவற்றை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

எக்ஸ்போனெண்ட் எனர்ஜியின் தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தின் முக்கிய பணி, சார்ஜ் செய்யும் போது சூடாகும் பேட்டரியை நீர் உதவியுடன் குளிர்வித்து, பேட்டரி சார்ஜ் ஆகும் நேரத்தை குறைப்பதாகும். எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள முக்கிய குறைப்பாடுகளுள் ஒன்று, அதிகப்படியான சார்ஜிங் நேரம் ஆகும். சார்ஜ் செய்து கொண்டே எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது இப்போதைய காலக்கட்டத்தில் இயலாத காரியமாக உள்ளது.

exponent energy thermal management system

இந்த குறையை தீர்க்க, தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளில் பல்வேறு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், எக்ஸ்போனெண்ட் எனர்ஜி சற்று அட்வான்ஸாக சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பேட்டரி உடன் இணைந்து செயல்படக்கூடிய இந்த தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை அதிகப்பட்சமாக 15 நிமிடங்களில் விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என கூறுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 3, 2023, 14:28 [IST]
English summary
Exponent energy thermal management system explained video tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+