இந்தியாவை விட வெளிநாட்டில் தான் இந்த காருக்கு மவுசு ஜாஸ்தி போல! வரிசையா கப்பல்ல ஏத்த ஆரம்பிச்சுட்டாங்க!
இந்தியாவில் தயாரிக்கப்படும் மாருதி நிறுவனத்தின் ஜிம்னி 5 டோர் கார் இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக வெளிப்படையாகி வரும் நிலையில் தற்போது இந்த காலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி ஓடுவது மாருதி நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கப் போகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சமீப ஆண்டுகளாக இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு சர்வதேச அளவில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை வெளிநாட்டில் உள்ள மக்கள் வாங்கி வருகின்றனர். இதனால் இந்தியா தற்போது ஏற்றுமதியில் ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாக மாறி வருகிறது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளர்களான மாருதி சுஸூகி, ஹூண்டாய், கியா, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதில் மாருதி நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இதில் மாருதி நிறுவனம் தற்போது தனது புதிய 5 டோர் ஜிம்னி காரை சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது. இந்த 5 டோர் கார் இந்தியாவிற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட காராகும், இதுவரை சர்வதேச அளவில் ஜிம்னி 3 டோர் கொண்ட கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
அந்த காரும் இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த காருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு தொடர்ந்து இந்த காரின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாக ஐந்து டோர் கார் உருவாக்கப்பட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார் அறிமுகமாகனது. இதை பலர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த 5 டோர் ஜிம்னி கார் இந்தியாவில் முதன்முறையாக கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது ரூபாய் 12.74 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது இது மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
இந்த 5 டோர் ஜிம்னி காரில் வாஷருடன் கூடிய எல்இடி ஹெட் லைட், சிறப்பான பம்பர் காம் செல் பானட், குரோம் ஆக்ஸென்ட் உடன் கூடிய நீளவாக்கிலான கிரில், ஸ்போர்ட்டியான அலாய் வீல் ஆகியன இருக்கிறது. இதன் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் கே 15டி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 14.8 பிஎஸ் பவரையும் 134.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இஞ்சினாக இருக்கிறது.
இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது . இந்த மாருதி 5 டோர் ஜிமினி கார் சேர்த்து மாருதி நிறுவனம் மொத்தம் 17 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. கிராண்ட் விட்டாரா, எஸ் பிரெஸ்ஸோ, செலிரியோ, எர்டிகா, சியாஸ் ஆகிய கார்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவிலிருந்து அதிகமான கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கியமான நிறுவனமாக மாருதி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 25 லட்சமாவது காரை ஏற்றுமதி செய்ததாக அறிவித்தது. மாருதி நிறுவனம் 1986 முதல் வெளிநாட்டிற்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக வங்கதேசம் நேபால் லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கார்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா தற்போது பல நாடுகளுக்கு ஆட்டோமொபைல் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறி வருகிறது. பல நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை விரும்பி இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா இந்த விவகாரத்தில் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








