பழைய ஓனர்களுக்கே பொறாமையை ஏற்படுத்தும்... அப்படி மாத்தி வச்சிருக்காங்க... புதிய அவதாரம் எடுத்த ஹெக்டர்!

எம்ஜி நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஹெக்டர்-ம் ஒன்று. இதுவே நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து களமிறக்கிய முதல் கார் மாடலாகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இந்த காரை சிறப்பிக்கும் பணியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் ஹெக்டர் காரை மிகவும் கவர்ச்சிகரமான வாகனமாக புதுப்பித்து உள்ளது.

படங்கள் கசிவு

இந்த புதுப்பிக்கப்பட்ட கார் மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே பன்முக அப்டேட்டுகளைப் பெற்றிருக்கும் எம்ஜி ஹெக்டர் காரின் புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக வெளியாகி உள்ளன. காரின் உட்பக்கம் மற்றும் வெளிப்புறத்தின் படங்களே வெளியாகி உள்ளன. இந்த படங்கள் வாயிலாக எம்ஜி ஹெக்டர் கார் எந்த அளவிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

எம்ஜி ஹெக்டர்

முகப்பு பகுதி வேற லெவல்

மிகவும் அட்டகாசமான வகையில் இந்த காரை எம்ஜி நிறுவனம் அப்கிரேட் செய்து இருக்கின்து. இதற்கு காரின் வெளிப்பக்கமே சான்றாக உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் வெர்ஷனைக் காட்டிலும் பல மடங்கு அதிக அழகானதாகவும், கவர்ச்சியானதாகவும் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றது. காரின் முகப்பு பகுதியில் டைமண்ட் வலை ஸ்டைலிலான க்ரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள், அழகிய ஹெட்லேம்ப் மற்றும் பனி மின் விளக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இவையே காரின் முகப்பு பகுதிக்கு கண்கவர் தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளன. இதேபோல், பக்கவாட்டு மற்றும் பின் பக்கத்திலும் சொற்பளவிலான மறு வடிவமைப்பு செய்து எம்ஜி செய்து உள்ளது. குறிப்பாக, பின் பக்கத்தின் பம்பர் மற்றும் டெயில் லைட்டுகளிலேயே அது கவனத்தைப் பெற கூடிய மாற்றங்களைச் செய்திருக்கின்றது. இவை அனைத்தைக் காட்டிலும் காரின் உட்பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றமே மிக பிரமாண்டமானதாக உள்ளது.

எம்ஜி ஹெக்டர்

பெரிய திரை

காருக்குள் போர்ட்ரைட் ரக 14 அங்குல எச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் இந்த அளவு திரையை இதுவரை பார்த்திருக்க முடியாது. மினி லேப்-டாப்பை பயன்படுத்துவதைப் போன்ற உணர்வை இது நமக்கு வழங்கும். மஹிந்திரா எக்ஸ்யூவி 700கார் மாடலில் கூட 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே வழங்கப்பட்டுள்ளது. இதைவிட சூப்பரானதாகவும், நல்ல பயன்பாட்டை வழங்கக் கூடியதாகவும் எம்ஜி ஹெக்டரில் வழங்கப்பட்டிருக்கும் 14 அங்குல திரை இருக்கின்றது.

இத்துடன், டேஷ்போர்டில் புதிய ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டிரைவருக்கான இன்ஃபோடெயின்மென்ட் திரை, புதிய ஏசி வெண்டுகள், வென்டிலேட் இருக்கைகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இந்த காரில் அடுத்த தலைமுறை ஐ-ஸ்மார்ட் இணைப்பு வசதியையும் எம்ஜி வழங்கி இருக்கின்றது. இது இப்போது பயன்பாட்டில் இருப்பதைக் காட்டிலும் 50க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதியை வழங்கக் கூடியது.

எம்ஜி ஹெக்டர்

இந்த இணைப்பு அம்சம் வாயிலாக கார் கதவை திறத்தல், சன்ரூஃபை கட்படுப்படுத்துதல், க்ளைமேட் கன்ட்ரோலை கட்டுப்படுத்துதல், காரை ஆன் செய்யுதல், டூரை லாக் செய்தல் போன்ற எக்கசக்க செயல்களை செல்போன் வாயிலாகவே செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், கார் இருக்கும் இடத்தைக் கண்டறிதல், ஜியோ ஃபென்ஸ் மற்றும் நேவிகேஷன் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க, குரல் கட்டளைக்கு இணங்கி செயல்படும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது.

டிரைவர் இல்லாமலே பிரேக் பிடிக்கும்

இதுதவிர, அடாஸ் எனப்படும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்ட்ன்ஸ் சிஸ்டமும் அப்டேட் செய்யப்பட் எம்ஜி ஹெக்டர் காரில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹெக்டரின் டாப் ஸ்பெக் மாடலிலேயே இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கும். தற்போது விற்பனையில் உள்ள எம்ஜியின் பிற தயாரிப்புகளான குளோஸ்டர் மற்றும் அஸ்டர் ஆகிய கார் மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அடாஸ் அம்சம் வாயிலாக தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட் போன்ற உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

யாருக்கெல்லாம் போட்டியாக இருக்கும்

இத்தகைய சூப்பரான அம்சங்கள் இப்போது விற்பனையில் இருக்கும் எம்ஜி ஹெக்டர் காரில் பார்க்க முடியாது. இதனையே புதுப்பித்தலின் கீழ் எம்ஜி நிறுவனம் விரைவில் அறிமுகமாக இருக்கும் 2023 ஹெக்டரில் வழங்கி இருக்கின்றது. இந்த காரின் அறிமுகம் இன்னும் சில தினங்களில் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா ஹாரியர், மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா உள்ளிட்டவற்றிற்கு கடுமையான போட்டியாளனாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 4, 2023, 13:47 [IST]
English summary
Facelift hector exterior interior leaked
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+