பெட்டி கடைல தேன் முட்டாயை வாங்கறது போல கியாவின் புதிய காரை புக் செய்யும் இந்தியர்கள்..

கியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கார் மாடலுக்கு இந்தியாவில் புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாள் அன்றே பல ஆயிரக் கணக்கானோர் அந்த காரை புக் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அப்படி என்ன கார் அது? அந்த காரில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன? என அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கியா நிறுவனம் வெகு சமீபத்தில் அதன் புகழ்பெற்ற கார் மாடலான செல்டோஸின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்திய சந்தையில் வெளியீடு செய்தது. கியா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்த பின்னர் தன்னுடைய முதல் பிரதிநிதியாக (கார் மாடலாக) செல்டோஸை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Kia seltos

இது ஓர் எஸ்யூவி ரக காராகும். விற்பனைக்கு வந்தது முதல் இப்போது வரை மிக அமோகமான வரேவற்பை இந்த கார் இந்தியாவின் எஸ்யூவி கார்கள் சந்தையில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் கியா களமிறங்கி இருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே புதிய கியா செல்டோஸ் எஸ்யூவிக்கான புக்கிங் பணிகள் சமீபத்தில் தொடங்கின. துள்ளியமாக கூற வேண்டும் என்றால் கடந்த 14 ஆம் தேதி அன்றே அப்டேட்டட் வெர்ஷன் செல்டோஸுக்கான முன் பதிவுகள் இந்தியாவில் தொடங்கின. இதுவே முதல் நாள் ஆகும்.

Kia seltos received 13000 bookings

அந்த முதல் நாளில் மட்டும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை 13,424 இந்தியர்கள் புக் செய்திருக்கின்றனர். ஆமாங்க, இந்த புக்கிங் எண்ணிக்கை ஜூலை 14 ஆம் தேதி அன்று மட்டுமே கிடைத்தவை ஆகும். இதுதவிர ஏற்கனவே செல்டோஸ் காரை பயன்படுத்தி வரும் சிலரும் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் செல்டோஸை புக் செய்திருக்கின்றனர்.

நிறுவனம் அறிவித்த கே-கோடு எனும் புரோக்கிராமின்கீழே அவர்கள் புதிய செல்டோஸை புக் செய்திருக்கின்றனர். இதன்கீழ் கிடைத்திருக்கும் புக்கிங்கின் எண்ணிக்கை 1,973 ஆகும். இந்த திட்டத்தின்கீழ் புக் செய்தவர்களுக்கு டெலிவரி கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என கியா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. சீக்கிரமே இந்த காரின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்க இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Kia seltos bookings

கியா நிறுவனம் இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸ் காரில் எக்கச்சக்கமான புதிய அம்சங்களைச் சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், அனைவரையும் கவரக் கூடிய ஓர் அம்சமாக லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பத்தை இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது. இது செல்டோஸின் உயர் நிலை வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.

இதுதவிர, 12.5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் என பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, 360டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், 8வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் புதிய செல்டோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அனைத்து அம்சங்களையும் கியா புதிய வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டே வழங்கி இருக்கின்றது. ஏற்கனவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நான்கு ஆண்டுகள் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு வந்து முழுமையாக முடிவுற்றிருக்கின்ற நிலையில் சுமார் 5.32 லட்சம் யூனிட்டுகள் தயாரிக்கும் அளவிற்கு இந்த கார் நாட்டில் விற்பனையாகி இருக்கின்றது.

மேலும், இந்த நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து இதுவரை 1 மில்லியன் யூனிட்டுகள் கார்களை கியா நிறுவனம் இந்தியாவில் தயாரித்து இருக்கின்றது. இந்த அளவிற்கு அமோகமான வரேவற்பையே கியாவின் தயாரிப்புகள் இந்தியாவில் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய செல்டோஸும் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியாவின் செல்டோஸ் காருக்கு இப்போதே புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதை பார்த்தால் விரைவில் இதன் போட்டி கார் மாடல்களின் நிலை என்ன ஆகுமோ என்றே நினைக்க வைக்கின்றது. எங்களின் யூகிப்பின்படி மிகப் பெரிய அடியை போட்டி கார் மாடல்களுக்கு புதிய செல்டோஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 15, 2023, 17:20 [IST]
English summary
Facelift kia seltos received 13 thousand bookings in first day
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X