இவ்ளோ கம்மி விலையிலா டாடா ஹாரியர்-சஃபாரி ஆட்டோமேட்டிக்கை விற்க போகுதா! ஆச்சரியத்தில் கார் லவ்வர்ஸ்!!
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அதன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கார் மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரு எஸ்யூவி ரக கார்களையும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் களமிறக்கின.
இதன் அறிமுகத்தின்போது வெறும் மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட தேர்வுகளின் விலை மட்டுமே வெளியீடு செய்யப்பட்டது. அதேவேளையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட தேர்வுகளின் ஆரம்ப விலையும் அறிவிக்கப்பட்டது. ஆனால், முழுமையான விலை விபரம் வெளியிடப்படவில்லை. அதாவது, ஆட்டோமேட்டிக் தேர்வுகள் அனைத்தின் விலையையும் அது வெளியீடு செய்யவில்லை.

இந்த விலை விபரத்தையே தற்போது அது அறிவித்து உள்ளது. அதிகாரப்பூர்வ வருகை கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி அன்றே அரங்கேறியது. இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகின்றநிலையில் நேற்றைய (அக்டோபர் 20) தினமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளின் விலைகள் அறிவிக்கப்பட்டன.
டாடா மோட்டார்ஸின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்களுக்கு ரூ. 15.49 லட்சம் தொடங்கி ரூ. 25.04 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ. 20 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக 26.44 லட்ச ரூபாய் வரையில் விற்கப்பட உள்ளது.
இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலைகள் டாடா ஹாரியர் எஸ்யூவி கார் மாடலின் விலைகள் ஆகும். டாடா சஃபாரி மேனுவல் வேரியண்டிற்கு ரூ. 16.19 லட்சம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த விலையில் இருந்து அதிகபட்சமாக 25.94 லட்ச ரூபாய் வரையில் இந்த கார் விற்கப்பட உள்ளது. அதேவேளையில், இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்டுகள் ரூ. 20.69 லட்சம் தொடங்கி ரூ. 27.34 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளும், அதன் விலைகளும்: ப்யூர் பிளஸ் (விலை ரூ. 20 லட்சம்), ப்யூர் பிளஸ் எஸ் (விலை ரூ. 21.09 லட்சம்), ப்யூர் பிளஸ் எஸ் டார்க் (விலை ரூ. 21.39 லட்சம்), அட்வென்சர் பிளஸ் (விலை ரூ. 23.09 லட்சம்)..
..அட்வென்சர் பிளஸ் டார்க் (விலை ரூ. 23.64 லட்சம்), அட்வென்சர் பிளஸ்ஏ (விலை ரூ. 24.39 லட்சம்), ஃபியர்லெஸ் (விலை ரூ. 24.94 லட்சம்), ஃபியர்லெஸ் டார்க் (விலை ரூ. 25.89 லட்சம்) மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் (விலை ரூ. 26.44 லட்சம்).
டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளும், அதன் விலைகளும்: ப்யூர் பிளஸ் (விலை ரூ. 20.69 லட்சம்), ப்யூர் பிளஸ் எஸ் (விலை ரூ. 21.79 லட்சம்), ப்யூர் பிளஸ் எஸ் டார்க் (விலை ரூ. 22.09 லட்சம்), அட்வென்சர் பிளஸ் (விலை ரூ. 23.89 லட்சம்), அட்வென்சர் பிளஸ் டார்க் (விலை ரூ. 24.44 லட்சம்), அட்வென்சர் பிளஸ் ஏ (விலை ரூ. 24.89 லட்சம்)..
..அக்காம்ப்ளிஸ்டு (விலை ரூ. 25.39 லட்சம்), அக்காம்ப்ளிஸ்டு டார்க் (விலை ரூ. 25.74 லட்சம்), அக்காம்ப்ளிஸ்டு பிளஸ் (விலை ரூ. 26.89 லட்சம்), அக்காம்ப்ளிஸ்டு பிளஸ் டார்க் (விலை ரூ. 27.24 லட்சம்), அக்காம்ப்ளிஸ்டு பிளஸ் 6எஸ் (விலை ரூ. 26.99 லட்சம்) மற்றும் அக்காம்ப்ளிஸ்டு பிளஸ் 6எஸ் டார்க் (விலை ரூ. 27.34 லட்சம்).
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரு கார்களுக்கும் இந்தியாவில் கணிசமான அளவில் நல்லவிற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் பன்முக சிறப்பம்சங்களை இந்த காரில் டாடா சேர்த்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








