ரொம்ப நாளா எதிர்பார்த்த கார் விற்பனைக்கு வந்தாச்சு! இன்டிகா விற்பனையான மாதிரி இந்த காரும் விற்பனையாகபோகுது!

இந்தியர்களின் நீண்ட எதிர்பார்ப்பாக இருந்து வந்த டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் (2023 Tata Harrier Facelift) வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக களமிறக்கப்பட்டு இருக்கின்றது. சமீபத்தில் இந்த காரை வெளியீடு செய்த நிலையில், அதற்கான புக்கிங்குகளை ஏற்கவும் தொடங்கியது, டாடா. ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைவான முன் தொகையிலேயே ஹாரியருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே விலையை அறிவித்து அக்காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். யாரும் எதிர்பார்த்திராத ஆரம்ப விலையே இக்காருக்கு டாடா நிர்ணயம் செய்திருக்கின்றது. ரூ. 15.49 லட்சம் என்கிற தொடக்க விலையில் இருந்தே புதுப்பிக்கப்பட்ட ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்கும்.

Tata harrier suv

ஸ்மார்ட், ப்யூர், ப்யூர் பிளஸ், அட்வென்சர், அட்வென்சர் பிளஸ், ஃபியர்லெஸ் மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் ஆகிய தேர்வுகளில் புதிய ஹாரியர் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ஸ்மார்ட் எனும் வேரியண்டே ஆரம்ப நிலை தேர்வாகும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

ஆனால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ப்யூர் பிளஸ், அட்வென்சர் பிளஸ், ஃபியர்லெஸ் மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் ஆகிய தேர்வுகளில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதன் ஆட்டோமேட்டிக் தேர்வு ரூ. 19.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Tata harrier beauty

இதைபோலவே இந்த கார் மாடலில் டார்க் எனும் சிறப்பு பதிப்பையும் டாடா ஹாரியரில் விற்பனைக்கு வழங்குகின்றது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எந்தெந்த தேர்வுகளில் வழங்கப்படுகின்றது. அந்த தேர்வுகளிலேயே டார்க் பதிப்பும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலையும் ரூ. 19.99 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா மோட்டார்ஸ் இந்த எஸ்யூவி காரை அதன் கான்செப்ட் கார் மாடலான கர்வ்-ஐ தழுவியே அப்கிரேட் செய்திருக்கின்றது. இதனாலேயே ஃபேஸ்லிஃப்ட் ஹாரியர் மேலும் பலமடங்கு அதிக கவர்ச்சியான காராக மாறியிருக்கின்றது. முதலில் இந்த கான்செப்ட் கார் மாடலை தழுவி நிறுவனம் அதன் நெக்ஸான் எஸ்யூவி காரை புதுப்பித்து இருந்தது.

Tata harrier dashboard

இதைத்தொடர்ந்தே, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களையும் அது புதுப்பித்து இருக்கின்றது. ஆமாங்க, டாடா மோட்டார்ஸ் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சஃபாரி எஸ்யூவி-க்கு அறிமுக விலையாக ரூ. 16.19 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. புதுப்பித்தலின்கீழ் இந்த காரில் முகப்பு மற்றும் பின் பக்கம் ஹெவியாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இக்காரின் பக்கவாட்டு பகுதியில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. முன் மற்றும் பின் பக்கத்தில் காரின் முழு நீளத்தை ஆளுகின்ற வகையில் எல்இடி லைட், எல்இடி ஹெட்லைட் மற்றும் பனி மின் விளக்கு உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Tata harrier boot space

அதுதவிர புதிய பம்பர் மற்றும் க்ரில் ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஹாரியர் எஸ்யூவி காரில் 17,18 மற்றும் 19 அங்குல அலாய் வீல் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்பகுதியிலும் பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், 12.3அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. 10.25அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, பின் பக்கத்தில் சன் ஷேட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பெரிய பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட வசதிகளாக இந்த காரில் ஐஆர்ஏ கார் இணைப்பு அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆகிய வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஹாரியர் காரின் பாதுகாப்பு தரத்திற்கு வலுவூட்டும் விதமாக ஜென்2 வகை அடாஸ் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர், கைரோடெக் டீசல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மைலேஜ் விஷயத்திலும் இந்த கார் மிக சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் பாதுகாப்பு தரத்தில் நற்சான்றை வாங்கி இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது. அது பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவருக்குமான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5 ஸ்டார்களைப் பெற்று இருக்கின்றது. குளோபல் என்சிஏபி வாயிலாக வழங்கப்பட்ட பாதுகாப்பு ரேட்டிங்கே இது ஆகும். ஆகையால், எதிர்பாராத விபத்துகளின்போது இந்த காரில் நல்ல பாதுகாப்பு வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

Article Published On: Tuesday, October 17, 2023, 15:47 [IST]
English summary
Facelift tata harrier suv launched in india at rs 15 49 lakh starting price
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X