ஒரு முற ஓட்டிட்டீங்கனா காரை விட்டு இறங்கவே மாட்டீங்க.. அப்படிதான் எங்களை ஃபீல் பண்ண வச்சிருச்சு புதிய ஹாரியர்!
டாடா மோட்டார்ஸ் அதன் புகழ்பெற்ற எஸ்யூவி ரக கார் மாடலான ஹாரியர்-இன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. வெளியீட்டு நிகழ்வு கடந்த சில தினங்களுக்கு முன்பே அரங்கேற்றம் செய்யப்பட்ட நிலையில், அக்காருக்கான புக்கிங் பணிகளையும் டாடா மோட்டார்ஸ் நாட்டில் தொடங்கியது. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் இருந்தாலே புதிய ஹாரியரை உங்களால் புக்கிங் செய்துக் கொள்ள முடியும்.
இதன் விலைகளை விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிவிக்க இருக்கின்றது. இதற்கான சிறந்த நாளாக வரும் 17 ஆம் தேதியை டாடா மோட்டார்ஸ் குறித்துள்ளது. ஆமாங்க, அன்றைய தினத்திலேயே டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்டின் விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையிலேயே இக்காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு அண்மையில் கிடைத்தது. இதுகுறித்த முழு தகவலையே வீடியோவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டாடா மோட்டார்ஸ் அதன் பிரபல கான்செப்ட் கார் மாடலான கர்வ்-ஐ தழுவியே புதிய ஹாரியரை மேம்படுத்தி இருக்கின்றது. நிறுவனம் இந்த கர்வ் கான்செப்ட் கார் மாடலை சென்ற ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ-விலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது. மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த கார் இருந்ததனால் பலரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த காரை ஐசிஇ மற்றும் மின்சாரம் ஆகிய இரு வெர்ஷன்களிலும் டாடா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த கார் கர்வ் என்கிற பெயரில் அல்லாமல் அசூரா எனும் பெயரிலேயே விற்பனைக்கு வரவிருப்பதாக அண்மை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து எந்தவொரு தகவலையும் டாடா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதேவேளையில், இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வரும் பொருட்டு மிக தீவிரமான சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








