டாடாவோட இந்த டீசல் கார் இவ்ளோ மைலேஜ் தருமா!.. வென்யூ-சொனெட் ரெண்டையுமே இந்த விஷயத்துல அது சாகடிச்சிருச்சு!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) சமீபத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி (Nexon SUV)-யை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸான் எஸ்யூவி இருக்கின்றது. இந்த காரின் பக்கமே கூடுதலாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் டாடா விற்பனைக்குக் கொண்டு வந்தது.
பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் என பன்முக அவதாரத்தில் இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஐசிஇ மாடல்கள் மட்டுமின்றி எலெக்ட்ரிக் வெர்ஷனும் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த அப்டேட் வெர்ஷன் முன்னதாக விற்பனையில் இருந்தவற்றைக் காட்டிலும் அதிகம் ரேஞ்ஜ் தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இந்த நிலையிலேயே இதன் டீசல் மோட்டார் கொண்ட தேர்வும் அதிகம் மைலேஜ் தரும் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. மைலேஜ் தருவதில் அதன் போட்டி கார் மாடல்களான வென்யூ மற்றும் சொனெட் ஆகியவற்றிற்கே பலமடங்கு டஃப் கொடுக்கும் காராக டீசல் நெக்ஸான் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதனால், போட்டி கார் மாடல்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒரு லிட்டருக்கு டீசல் நெக்ஸான் எஸ்யூவி 24 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸ், பேஸ்லிஃப்ட் நெக்ஸானில் பன்முக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை வழங்குகின்றது.

டூயல் கிளட்ச், ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளே புதிய நெக்ஸான் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், பெட்ரோல் நெக்ஸானில் மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச்பாக்ஸ் தேர்வும், டீசல் மோட்டாரில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.
இதில், மேனுவல் கியர்பாக்ஸ் வசதி உடன் கிடைக்கும் பெட்ரோல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் பெட்ரோல் நெக்ஸான் 17.44 கிமீ மைலேஜையும் வழங்கும். அதேவேளையில், டீசல் மேனுவல் நெக்ஸான் ஒரு லிட்டரக்கு 23.23 கிமீ மைலேஜையும், ஏஎம்டி டீசல் நெக்ஸான் ஒரு லிட்டருக்கு 24.01 கிமீ வரையிலும் மைலேஜ் தரும்.
இந்த மைலேஜ் திறன்கள் ஏற்கனவே நாங்கள் கூறியதைப் போலவே நெக்ஸானின் போட்டி கார் மாடல்களான வென்யூ மற்றும் சொனெட் ஆகியவற்றிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, டீசல் நெக்ஸான் போட்டி கார்களை மாடல்களைக் காட்டிலும் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக இருக்கின்றது.
ஹூண்டாய் வென்யூ டீசல் தேர்வு அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 23.4 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தரும். இதேபோல், கியாவின் சொனெட் டீசல் தேர்வு 18.2 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தரும். இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டீசல் ஆப்ஷன் 19.07 கிமீ முதல் 20.1 கிமீ வரையில் மைலேஜ் தரும்.
இவற்றுடன் ஒப்பிடுகையில் டாடா நெக்ஸானே அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் டீசல் ரூ. 11 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், இதன் பெட்ரோல் வெர்ஷன் ரூ. 8.09 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கும்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா மோட்டார்ஸ் முன்பைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான காராக ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானை உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், அழகிற்கு சற்றும் குறைச்சல் இல்லாத காராக அது காட்சியளிக்கின்றது. நிறுவனம் தன்னுடைய கான்செப்ட் கார் மாடலான கர்வ்-ஐ தழுவியே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தயார் செய்திருக்கின்றது.
இந்த காரில் தொழில்நுட்ப வசதிகளும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 10.25 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய யுஐ தொழில்நுட்பம், டிஜிட்டல் கன்சோல் என ஏகப்பட்ட அம்சங்களை டாடா மோட்டார்ஸ் இந்த காரில் சேர்த்து இருக்கின்றது. இந்த அம்சங்கள் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.
இதுதவிர, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஐஆர்ஏ 2.0 கார் இணைப்பு வசதி, ரிமோட் கார் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், வாய்ஸ் அசிஸ்டட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் கார்களுக்கு எப்போதும் நல்ல டிமாண்ட் உண்டு. அந்தவகையில் புதிய டாடா நெக்ஸான் காருக்கும் மிக சூப்பரான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் அதிகம் பாதுகாப்பு வசதிக் கொண்டதும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.


Click it and Unblock the Notifications








