ஒட்டுமொத்த கேரளாவையும் திரும்பி பாக்க வைத்த ஹோட்டல் உரிமையாளர்! ஒத்த விஷயத்துக்காக பணத்த வாரி இறைச்சிருக்கார்!

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவைச் சேர்ந்தவர் கேடி தாமஸ். பிரபல ஹோட்டல் ஆர்காடியாவின் இயக்குநர் இவர் ஆவார். இவரே தன்னுடைய ஒற்றை செயலால் ஒட்டுமொத்த மாநிலத்தையும் தன்னை திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார். அவர் மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியதன் வாயிலாகவே பலரின் கவனத்தை ஈர்க்கும் நபராக மாறி இருக்கின்றார்.

கேடி தாமஸ் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடலான ஐ7 (BMW i7)-ஐ வாங்கி இருக்கின்றார். இந்த காரை கேரளாவில் இதுவரை வேறும் யாரும் வாங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், கேரளாவிலேயே பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தும் முதல் நபராக கேடி தாமஸ் மாறி இருக்கின்றார்.

Kerala first bmw i7

இதனாலேயே பலரின் கவனத்தை ஈர்த்த நபராக அவர் மாறி இருக்கின்றார். கொச்சியில் உள்ள இவிஎம் ஆட்டோகிராஃப்ட் டீலர் வாயிலாகவே கேரளாவின் முதல் பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு எலெக்ட்ரிக் கார் வாங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் செடான் ரக சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் காராகும்.

இந்த எலெக்ட்ரிக் காரை அதி-நவீன வசதிகள் மற்றும் அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாகவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த காரில் தியேட்டர் உணர்வை வழங்கும் 313. அங்குல திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இது 8K தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே, தியேட்டர் போன்ற துள்ளியமான விஷுவல் திறனை வழங்கும்.

Kerala first bmw i7 ev aerial view

இந்த திரையில் அமேசான் ஃபையர் டிவி வசதியும் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் காரில் சுமார் 625 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 101.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 544 எச்பி பவர் மற்றும் 745 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய சக்தி வாய்ந்த மின்சார மோட்டாரும் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டாரால் வெறும் 4.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

Kerala first bmw i7 ev front look

இதேபோல் தொழில்நுட்ப விஷயத்திலும் இந்த கார் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றது. ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு, 655 வாட்ஸ் திறன் கொண்ட 18 ஸ்பீக்கர்கள் அடங்கிய மியூசிக் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்டன்ஸ், அகலமான வளைந்த திரை உள்ளிட்ட அம்சங்கல் பிஎம்டபிள்யூ ஐ7 சொகுசு எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமாதிரியான பன்முக வசதிகளை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அதன் விலையும் பலமடங்கு அதிகமாக இருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலையே 1.95 கோடி ரூபாய் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய அதீத விலைக் கொண்ட சொகுசு எலெக்ட்ரிக் காரையே கேரளாவிலேயே முதல் ஆளாக கேடி தாமஸ் தற்போது வாங்கி இருக்கின்றார்.

இந்த காரில் மேலே பார்த்த அம்சங்களுடன் சேர்த்து இன்னும் பல அம்சங்களையும் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 12.3 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை, 3டி மேப் நேவிகேஷன் வசதி, வாய்ஸ் கன்ட்ரோல் ஆகிய மிக முக்கியமான அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல் பாதுகாப்பு அம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் தரமான தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. பன்முக ஏர் பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதி உடன் கூடிய ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், சிபிடி, கிராஷ் சென்சார், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதி உடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டயர் ரிப்பேர் கிட் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கான டிமாண்ட் முன்பைக் காட்டிலும் தற்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதேபோல், சொகுசு வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் கார்களுக்கும் தற்போது வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய மின்சார கார்களுக்கே வரவேற்பு இரட்டிப்பாக மாறி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 10:59 [IST]
English summary
Famous hotel arcadia director kt thomas buys bmw i7
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X