இனிமே காரை பார்க்கிங் பண்ணுவது இவ்வளவு ஈஸியா? இந்த ஒரு டெக்னாலஜி எல்லாத்தையுமே மாத்திடுச்சே!
லக்னோ விமான நிலையத்தில் ஃபாஸ்ட் டேக் கார்டு மூலம் ஆட்டோமெட்டிக் பார்க்கிங் செய்யக்கூடிய தொழிற்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய தொழிற்நுட்பமான இது ஐசிஐசிஐ வங்கியுடன் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் எப்படி உருவாகிறது என்பது குறித்த விரிவான விபரங்களைத் தெளிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பார்க்கிங் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். விமானத்தில் பயணிக்கும் பலர் தங்கள் கார்களில் விமான நிலையம் வந்து விமான நிலையத்தில் காரை பார்க் செய்துவிட்டு விமானத்தில் அவர் செல்ல வேண்டிய ஊருக்கு சென்று திரும்ப வந்து இந்த காரை எடுத்துச் செல்வார். அதுவரை கார் பார்க்கிங் தான் நிற்க வேண்டும்.

இப்படியாக ஏகப்பட்ட மக்கள் காரை விமான நிலையத்திலேயே நிறுத்தி வருவதால் பார்க்கிங் பிரச்சனை இருக்கிறது. இதனால் வாகனங்கள் பார்க்கிங் செய்வதை முறைப்படுத்த வாலட் பார்க்கிங் முறை பின்பற்றப்படுகிறது. அதில் விமான நிலையத்தில் வாகனம் நுழையும் போதே வாகனம் நிறுத்த இடம் அலாட் செய்யப்படும். அந்த வாகனம் திரும்ப செல்லும் போது அதே இடம் மற்ற வாகனத்திற்கு அலாட் செய்யப்படும்.
ஆனால் இதற்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒவ்வொரு வாகனமாகத் தான் பார்க்கிங் செய்ய அனுப்பப்படும். இதனால் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தீர்வாக லக்னோ விமான நிலைய நிர்வாகம் ஃபாஸ்ட்டேக் அடிப்படையிலான பார்க்கிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது எல்லா கார்களிலும் ஃபாஸ்ட்டேக் கார்டு கட்டாயமாகிவிட்டது. இந்நிலையில் இந்த ஃபாஸ்ட்டேக் கார்டை பயன்படுத்தியே பார்க்கிங் செய்யும் சிஸ்டம் அறிமுகமாகிவிட்டது. இதற்காக விமான நிலைய நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஐசிஐசிஐ வங்கியுடன் கை கோர்த்துள்ளது. இந்த மூவரும் இணைந்து இந்த சிஸ்டத்தை ஒரு முயற்சியாகத் துவங்கியுள்ளனர்.
இதன் படி ஒரு வாகனம் பார்க்கிங் உள்ளே நுழையும் போது அதன் ஃபாஸ்ட்டேக் கார்டு ஸ்கேன் செய்யப்பட்டு நேரம் குறித்துக்கொள்ளப்படும். அதற்கான பார்க்கிங் செய்யும் இடமும் ஒதுக்கப்படும். அந்த கார் வெளியே செல்லும் போது மீண்டும் ஃபாஸ்ட்டேக் கார்டு ஸ்கேன் செய்யப்படும். அதில் பார்க்கிங் செய்யப்பட்ட நேரத்தைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்தார் போலக் கட்டணம் நேரடியாக ஃபாஸ்ட்டேக் கார்டிலிருந்து எடுக்கப்படும்.
இந்த பணப்பரிவர்த்தனைகளை ஐசிஐசிஐ வங்கி கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்டேக் முறையிலான பார்க்கிங் ஒரு சோதனை முயற்சியாகவே செய்யப்படுகிறது. இது வெற்றியடைந்தால் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மட்டுமல்லாமல் மால்கள், பிஸ்னஸ் பார்க் உள்ளிட்ட இடங்களில் இது போன்ற பார்க்கிங் சேவை வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்க்கிங்களில் இடம் கிடைப்பது மற்றும் அதற்காக க்யூவில் நிற்பது மக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இதற்கிடையில் பணம் செலுத்துவதிலும் பல குழப்பங்கள் இருக்கிறது. இதற்கெல்லாம் இந்த ஃபாஸ்டேக் அடிப்படையிலான பார்க்கிங் சிஸ்டம் ஒரு தீர்வை வழங்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








