'க்யூட்'-ஆ இருக்கு! பைக் விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்! டாடா நானோவை போல் களமிறங்கியது சுட்டி குழந்தை
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மைக்ரோ எலெக்ட்ரிக் கார்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உருவாக தொடங்கியுள்ளது. இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
மைக்ரோ எலெக்ட்ரிக் கார்கள், அளவில் சிறியவை. எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர பகுதிகளில் ஓட்டுவதும், பார்க்கிங் செய்வதும் மிக எளிமையாக இருக்கும். அத்துடன் மைக்ரோ எலெக்ட்ரிக் கார்களின் விலையும் குறைவு. எனவேதான் மைக்ரோ எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக சீனாவை சேர்ந்த ஃபர்ஸ்ட் ஆட்டோ ஒர்க்ஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் எஃப்ஏடபிள்யூ (First Auto Works - FAW) நிறுவனம் புத்தம் புதிய மைக்ரோ எலெக்ட்ரிக் கார் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எஃப்ஏடபிள்யூ நிறுவனத்தின் கீழ் பல்வேறு பிராண்டுகள் இருக்கின்றன.
இதில், பெஸ்ட்யூன் (Bestune) பிராண்டும் ஒன்றாகும். இந்த பெட்யூன் பிராண்டின் கீழ்தான், எஃப்ஏடபிள்யூ நிறுவனம் புதிய மைக்ரோ எலெக்ட்ரிக் காரை களமிறக்கியுள்ளது. இதற்கு ஷியோமா (Xiaoma) என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளை போல் 'க்யூட்' என சொல்லும் அளவிற்கு, ஷியோமா மைக்ரோ எலெக்ட்ரிக் கார் அழகாக டிசைன் (Design) செய்யப்பட்டுள்ளது.

நடப்பு 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 'ஷாங்காய் ஆட்டோ ஷோ' நடைபெற்றது. இதில்தான், ஷியோமா மைக்ரோ எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டது. 'ஹார்டுடாப்' மற்றும் 'கன்வெர்டபிள்' என மொத்தம் 2 வெர்ஷன்களில், ஷியோமா மைக்ரோ எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டது. ஆனால் இதில் 'ஹார்டுடாப்' வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
'கன்வெர்டபிள்' வெர்ஷன் பின் நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த எலெக்ட்ரிக் காரில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட, இதன் விலை மிகவும் குறைவுதான்.
இந்திய மதிப்பில் ஷியோமா மைக்ரோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 3.40 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 5.70 லட்ச ரூபாயாக உள்ளது. இவை இந்திய மதிப்பின் தோராய விலை ஆகும். இதுபோன்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்கள், இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் தற்போது விலை குறைவான சிறிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. எம்ஜ கோமெட் இவி (MG Comet EV) இதற்கு ஒரு நல்ல உதாரணம். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.98 லட்ச ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.98 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். வரும் காலங்களில் இந்திய சந்தையில் இதைக்காட்டிலும் குறைவான விலையில், அதாவது ஷியோமாவை போன்ற விலையில், புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








