ஒட்டுமொத்த உலகத்தையும் அசர வைத்த சீன நிறுவனம்... 3.50 லட்ச ரூபாக்கு எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!

சீனாவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஃபர்ஸ்ட் ஆட்டோ ஒர்க்ஸ் (First Auto Works), மிக மிக குட்டியான எலெக்ட்ரிக் காரை (Electric Car) அறிமுகம் செய்திருக்கின்றது. அதன் பெஸ்ட்யூன் (Bestune) பிராண்டின்கீழ் அந்த வாகனத்தை அது அறிமுகம் செய்திருக்கின்றது.

ஸியாமா (Xiaoma) எனும் பெயரிலேயே அந்த குட்டியான எலெக்ட்ரிக் காரை அது வெளியீடு செய்து இருக்கின்றது. இந்த காருக்கான ப்ரீ-சேல் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த மாதமே இந்த பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன.

Bestune xiaoma mini ev

ஆனால், முதலில் சீன சந்தையிலேயே இதன் விற்பனையை ஃபர்ஸ்ட் ஆட்டோ ஒர்க்ஸ் தொடங்க இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் பிரபலமான உலிங் ஹாங்குவாங் மினி இவி (Wuling Hongguang Mini EV)க்கு மிகப் பெரிய போட்டியாளனாக அமையும். இதன் விலையும் மிக மிக மலிவு என கூறப்படுகின்றது.

30 ஆயிரம் யுவான் தொடங்கி 50 ஆயிரம் யுவான்களுக்கு இந்த கார் விற்கப்பட இருக்கின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 3.47 லட்சம் தொடங்கி ரூ. 5.78 லட்சம் வரையிலான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த கார் முதன் முதலில் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டது.

xiaoma

ஷாங்காய் ஆட்டோ ஷோ (Shanghai Auto Show)-விலேயே அது அறிமுகம் செய்யப்பட்டது. விலை மலிவானதாக இருந்தாலும் இந்த காரில் சிறப்பம்சங்களை எஃப்ஏடபிள்யூ மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 7 அங்குல தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டேஷ்போர்டுக்கு கவர்ச்சிகரமான டூயல் டோன் தீம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஸியாமோ எலெக்ட்ரிக் காருக்கு பெட்டி போன்ற தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த தோற்றமே அக்காருக்கு மிகவும் அழகிய வடிவமைப்பை வழங்கும் வகையில் இருக்கின்றது. இதுதவிர, வாகனத்தில் பிரத்யேகமான அலங்கார அணிகலன்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. காரின் மேற்கூரை, பான்னெட், கிரில், வீல் மற்றும் பம்பர் உள்ளிட்டவற்றில் வித்தியாசமான நிறத்திலான அணிகலன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இது மூன்று கதவுகள் மட்டுமேக் கொண்ட காராகும். இந்த அனைத்து அம்சங்களும் இந்த காரை மினி ஜிம்னி போல காட்சியளிக்கச் செய்கின்றது. இந்த காரை ஸியாமா எஃப்எம்இ பிளாட்பாரத்தில் வைத்தே தயாரித்து இருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தில் வைத்தே தனித்துவமான சேஸிஸ் மற்றும் அதிக ரேஞ்ஜ் தரும் வாகனமாக ஸியாமா உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 800 கிமீ தொடங்கி 1200 கிமீ தூரம் வரை ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக லித்தியம் அயன் ஃபாஸ்பேட் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக் கோஷான் மற்றும் ரெப்ட் இடம் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன் 20 kW எலெக்ட்ரிக் மோட்டார் ஸியாமாவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மைக்ரை சைஸ் எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் இதில் நான்கு பேர் வரை மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். 3 ஆயிரம் மிமீ நீளம், 1510 மிமீ அகலம், 1630 மிமீ உயரம் மற்றும் 1,953 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கின்றது என்பது அதன் கூடுதல் சிறப்பாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு விற்பனைக்கு வருவது சந்தேகமே. இதுபோன்று குட்டியான எலெக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என உங்களுக்கு தோன்றினால் அதற்கான தேர்வாக கோமெட் இவி இருக்கின்றது. இதுவும் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காராகும். ஆனால், இதன் ஆரம்ப விலை ரூ. 8 லட்சம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 25, 2023, 13:00 [IST]
English summary
Faw launched xiaoma small electric car rival of wuling hongguang mini ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X