இந்த 10 அம்சங்களை தார் காருல பார்க்க முடியாது.. மாருதி சுஸுகி ஜிம்னி வெற்றி காணபோவது உறுதிதான் போலிருக்கே!

மஹிந்திரா தார் (Mahindra Thar) காருக்கு போட்டியாக இந்திய சந்தையில் வெகு விரைவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் ஜிம்னி (Jimny) காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காருக்கு இப்போதே இந்தியர்கள் மிக அமோகமான வரவேற்பை வாரி வழங்க ஆரம்பித்துவிட்டனர்.

விலைகளே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஜிம்னி காரை புக் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி ஜிம்னி அதன் போட்டி கார் மாடலான தாரைக் காட்டிலும் 10 அம்சங்களில் மிக சிறந்ததாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Maruti suzuki jimny

பாதுகாப்பு அம்சங்கள் தாராளம்: மஹிந்திரா தார் பாதுகாப்பு பெயர்போன காராக இருக்கின்றது. ஆனால், இந்த காரைவிட அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக மாருதி சுஸுகி ஜிம்னி இருக்கின்றது. அந்தவகையில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்-பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக ஜிம்னியில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால், தார் காரில் இரண்டு ஏர் பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கும். அதேவேளையில் இது ஓர் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகும். இதுதவிர, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய அம்சங்களும் ஜிம்னி காரில் வழங்கப்பட்டு இருக்கும்.

Maruti suzuki jimny side design

கூடுதல் கதவுகள்: மஹிந்திரா தார் நகர்புற வாசிகளின் பயன்பாட்டைக் கருத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அதிகம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அதேவேளையில், மாருதி சுஸுகியில் தாரைக் காட்டிலும் இரண்டு கதவுகளை கூடுதலாக நம்மால் பார்க்க முடிகின்றது. பயணிகளால் மிக சுலபமாக காரில் ஏறி-இறங்க இது மிகுந்த உதவியாக இருக்கும். ஆகையால், ஃபேமிலியுடன் சேர்ந்து பயணிக்க மிக உகந்த வாகனமாக ஜிம்னி இருக்கின்றது.

Maruti suzuki jimny rear seat

நகரும் விண்டோ: பின் பக்க பயணிகளுக்கு கூடுதல் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக ரோலிங் ரக விண்டோக்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. நீண்ட தூர டிராவல்களின்போது பின்னிருக்கையாளர்களுக்கு அசௌகரியமான பயண உணர்வு ஏற்படும். இந்த மாதிரியான நேரங்களில் இந்த ரோலாகும் விண்டோ அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த அம்சம் மஹிந்திரா தார் காரில் இருக்காது.

Maruti suzuki jimny display

பெரிய திரை: மாருதி சுஸுகி ஜிம்னி காரில் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை ஒயர்லெஸ் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் கொண்டது. இதேமாதிரியான அம்சம் கொண்ட திரையே தார் காரிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், அது 7 அங்குல திரை ஆகும். இது ஜிம்னியைவிட சிறியது.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல்: மஹிந்திரா நிறுவனம் அதன் தார் காரில் இந்த அம்சத்தை வழங்க தவறிவிட்டது. ஆனால், மாருதி சுஸுகி ஜிம்னியில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இந்த அம்சத்தை வழங்கி இருக்கின்றது. அதிகப்படியான குளிர் மற்றும் வெயிலைச் சமாளிக்க இந்த அம்சம் மிகுந்த உதவியாக இருக்கும்.

Maruti suzuki jimny rear design

பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் நீளமான வீல்பேஸ்: மாருதி சுஸுகி ஜிம்னி இந்த இரண்டிலும் பெஸ்டான காராகக் காட்சியளிக்கின்றது. நீளமான வீல் பேஸைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் அதிக லெக்-ரூம், இட வசதியை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். தார் காரைக் காட்டிலும் அதிக இட வசதியை இதில் பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், அதிக பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில் பெரிய பூட் ஸ்பேஸும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

எல்இடி புரஜெக்டர் ஹெட்லைட் மற்றும் ஹெட்லைட் வாஷர்: மாருதி சுஸுகி நிறுவனம் மஹிந்திர தார் காரைக் காட்டிலும் அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட காராக தன்னுடைய ஜிம்னி காரை உருவாக்கி இருக்கின்றது. தார் காரில் இல்லாத பிரீமியம் அம்சங்களை அதிகளவில் பார்க்க முடியும். அதற்கு மிக சிறந்த சான்றாக இவை இருக்கின்றன.

Maruti suzuki jimny headlamp

புரஜெக்டர் ரக ஹெட்லைட் மற்றும் ஹெட்லைட் வாஷர் வசதிகள் ஜிம்னியில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சத்தை மஹிந்திரா தார் காரில் காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், ஜிம்னியின் பின் பக்கத்திலும் வாஷர் மற்றும் வைப்பர்கள் வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதையும் தார் காரில் பார்க்க முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே இருக்கும் இந்த அனைத்து அம்சங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு மாருதி சுஸுகி ஜிம்னி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை ஜிம்னிக்கு இரட்டிப்பான வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த கார் ரூ. 9.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ வார்த்தைகள் நிறுவனம் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 30, 2023, 8:43 [IST]
English summary
Features that are not available in thar car offered in the jimny
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X