ஃபெராரி சிஇஓ சொன்ன ரகசியத் தகவல்! 2025ல் இப்படி ஒரு விஷயத்தை செய்யப்போறாங்க!

ஃபெராரி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை வரும் 2025-26ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன டிரெண்டில் ஃபொராி காரும் இணைந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

உலகம் முழுவதும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. புவி வெப்ப மயமாகுதலைத் தடுக்க ஒவ்வொரு நிறுவனமும் கார்பன் நியூட்டிராலிட்டியை பின்பற்ற வேண்டும் என்ற ஒரு உறுதியை எடுத்துள்ளது. இதற்கான இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. இந்நிலையில் ஃபொராரி நிறுவனமும் வரும் 2030ம் ஆண்டிற்குள் கார்பன் நியூட்டிராலிட்டி இலக்கை எட்டி பிடிக்கும் கொள்கையை வகுத்துள்ளது.

Ferrari first electric car

இந்நிலையில் சமீபத்தில் ஃபெராரி நிறுவனத்தின் சிஇஓ பினிடெட்டோ விக்னா என்பவர் ஊடகத்தினருக்குப் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் ஃபொராரி நிறுவனம் 2030ம் ஆண்டு கார்பன் நியூட்டராலிட்டியை கொண்டு வரக் கொள்கைகளை வகுத்துள்ளதாகவும், இதன் முதன் படியாக 2025ம் ஆண்டு ஃபெராரி தனது முதல் எலெக்ட்ரிக் சூப்பர் காரை அறிமுகப்படுத்தும் எனவும் பேசியுள்ளார்.

அதே நேரத்தில் தொடர்ந்து கம்பஷன் இன்ஜின் வாகனங்களையும் விற்பனை செய்யும் என்றும், கம்பஷன் இன்ஜின் வாகனங்களிலேயே இன்னும் பல புதுமைகளைச் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். ஐரோப்பாவில் 2035ம் ஆண்டிற்குப் பிறகு கம்பஷன் இன்ஜின் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்போவதாக இருந்த கொள்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த பதிலை அவர் கொடுத்தார்.

Ferrari first electric car

மேலும் இது குறித்துப் பேசும் போது கம்பஷன் இன்ஜினிலேயே மாசு ஏற்படுத்த இன்ஜினை வடிவமைக்கும் முயற்சியில் ஃபொராரி நிறுவனம் இருப்பதாகக் கூறினார். எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் இன்ஜின் இரண்டுமே விற்பனையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அது எப்படி கம்பஷன் இன்ஜினில் மாசு படுத்தாத இன்ஜின் என நீங்கள் கேட்கலாம் அதற்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தான். பொதுவாக நாம் பெட்ரோலை பயன்படுத்துகிறோம். மாசு ஏற்படுத்தாத கம்பஷன் இன்ஜினில் எலெக்ட்ரோஃப்யூயலை பயன்படுத்துவார்கள். அப்படி என்றால் கார்பன் டை ஆக்ஸைடு அல்லது கார்பன் மோனோ ஆக்ஸைடு ஆகியவற்றை ஹைட்ரஜன் உடன் கலந்து உருவாக்கப்படும் எரிபொருள். அதைப் பயன்படுத்தினால் மாசு இல்லாமல் கம்பஷன் இன்ஜினை பயன்படுத்த முடியும்.

இப்படியாக இன்ஜினிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடு எரிபொருளாக வெளியேறினாலும் இந்த எரிபொருளைத் தயாரிக்க கார்பன் டைஆக்ஸைடை காற்றிலிருந்தே பிரித்து எடுக்கின்றனர். இதனால் காற்றிலிருந்தே எடுக்கப்பட்டது மீண்டும் காற்றிலேயே கலப்பதால் இது மாசு எனக் கருத முடியாது. இதனால் இந்த எரிபொருளைப் பயன்படுத்த முடிவு செய்துள்னளர்.

ஆனால் இதுவரை இந்த இன்ஜின் செயல்பாட்டில் இல்லை. இது முழுமையாக வடிவமைக்கப்பட்ட பின் செயல்பாட்டிற்கு வரும். ஃபொராரி எலெக்ட்ரிக் கார்களில் சத்தமே இருக்காது. ஆனால் இப்படியான எரிபொருளில் இயங்கும் கம்பஷன்இன்ஜினில் தற்போது உள்ள அதே சத்தம் இருக்கும். இந்த செய்தி ஃபொராரி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபொராரி நிறுவனம் எலெக்ட்ரிக் சூப்பர் காரை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடவே எலெக்ட்ரோஃப்யூல் குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ பேசியுள்ளது ஃபெராரியின் தீவிர ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 21:21 [IST]
English summary
Ferrari plans launch first electric car in 2025
மேலும்... #ஃபெராரி #ferrari
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+