இந்த கார் நம்ம கண்கள்ல பட்டாலே பெரிய விஷயம்.. 612 பிஎச்பி பவரை வெளியேற்றும் ரோமா ஸ்பைடர் கன்வர்டபிள் வெளியீடு!

சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் புதிய காரை ஃபெராரி நிறுவனம் உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. ரோமா ஸ்பைடர் கன்வர்டபிளை அது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரில் 612 பிஎச்பி பவரை வெளியேற்றும் மோட்டாரை அது பயன்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலக புகழ்பெற்ற சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி, புதிய கன்வர்டபிள் ரக கார் மாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. ரோமா ஸ்பைடர் மாடலின் கன்வர்டபிள் வெர்சனையே அது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. ரோமா கூபே ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது.

ரோமா ஸ்பைடர் கன்வர்டபிள்

ரூ. 3.76 கோடி அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 4 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இதைவிட பலமடங்கு அதிக விலைக் கொண்டதாகவே புதிய ஃபெராரி ரோமா ஸ்பைடர் கன்வர்டபிள் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இந்தியாவிலும் இதன் வருகை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அதீத விலை அக்காரை பலருக்கு எட்டக் கனியாக மாற்ற இருக்கின்றது. மேலும், கனவில் மட்டுமே ஓட்டக் கூடிய ஒன்றாகவும் இந்த காரை அதன் அதீத விலை மாற்ற உள்ளது. இந்தியாவில் சொகுசு கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

ரோமா ஸ்பைடர் கன்வர்டபிள்

இதேபோல், சூப்பர் கார்களையும் அதிகப்படியானோர் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால், இப்போதும் அவற்றை சாலையில் காண்பது அரிதினும் அரிதாகவே இருக்கின்றது. இந்த நிலையிலேயே ரூ. 4 கோடிக்கும் அதிக விலையில் ஃபெராரி ரோமா ஸ்பைடர் கன்வர்டபிள் ;சூப்பர் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

ஆகையால், இந்த காரையும் சாலையில் காண்பது என்பது மிகவும் அரிதானதாகவே இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. ஃபெராரி நிறுவனம் இந்த காரில் ட்வின் டர்போ வி8 மோட்டாரை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 612 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ரோமா ஸ்பைடர் கன்வர்டபிள்

டூயல் கிளட்ச் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிமீ ஆகும். இந்த வேகத்தை அரை நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்த கார் எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், வெறும் 3.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இந்த கார் எட்டிவிடும்.

இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் சூப்பர் காராகவே ரோமா ஸ்பைடர் கன்வர்டபிள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. பெரிய பூட் கொண்ட காராக இதனை ஃபெராரி வடிவமைத்திருக்கின்றது. நான்கு பேர் வரை இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும். இதன் பின் இருக்கைகள் பின்பக்கத்துடன் இணைந்த வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

ரோமா ஸ்பைடர் கன்வர்டபிள்

இதன் ஏரோடைமிக்ஸும் மிக நேரத்தியாக டிசைன் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே காரின் டாப் ஸ்பீடுக்கு உதவியாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, அதிநவீன வசதிகள் பல இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சம் கொண்ட திரை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தை ஒயர்லெஸ்ஸா இணைத்துக் கொள்ள முடியும்.

வைஃபை வசதி அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் 18 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடிய இருக்கைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஹீட் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. கார் மேற்கூரை இல்லாமல் இயங்கும்போது குளிர்ச்சியை தவிர்க்கும் விதமாக இந்த அம்சம் இருக்கைகளில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல ஆடம்பர அம்சங்களை மிக தாராள மனதுடன் ஃபெராரி, ரோமா ஸ்பைடர் கன்வர்டெபிள் காரில் வழங்கியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 21, 2023, 11:01 [IST]
English summary
Ferrari unveiled roma spider convertible
மேலும்... #ஃபெராரி #ferrari
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X