"இந்தியாவை விட்டு இந்த நிறுவனம் ஏன்தான் போச்சோ".. வருத்தப்பட வைக்கும் அளவிற்கு சிறப்பான ஃபியட் கார் வெளியீடு!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபியாட் முழுக்க முழுக்க மினசாரத்தால் இயங்கக் கூடிய சூப்பரான புதுமுக கார் மாடல் ஒன்றை உருவாக்கி இருக்கின்றது. ஃபியட் 600 (Fiat 600) எனும் எலெக்ட்ரிக் காரையே அது உருவாக்கியிருக்கின்றது. விரைவில் இந்த எலெக்ட்ரிக் காரை ஃபியட் நிறுவனம் உலக அளவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே காரின் டீசர் படங்களை ஃபியட் வெளியீடு செய்திருக்கின்றது. இதன் வாயிலாக காரையும் அது பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காரின் அழகும், வசதிகளும் இந்தியர்களை ஏங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. தற்போது ஃபியாட் பிராண்டின் ஒற்றை கார் மாடல்கூட இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை.

Fiat 600 ev

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் மற்ற பிராண்டுகளான ஜீப் மற்றும் மஸராட்டி உள்ளிட்டவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், ஃபியாட் மட்டும் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றது. இந்த நிலையிலேயே அதன் 600 இவி-யை ஃபியட் பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது இந்தியாவில் விற்பனைக்கு வருவது சந்தேகமே.

இந்த நிலையே இந்தியர்களை தற்போது ஏங்கச் செய்திருக்கின்றது. விரைவில் வத்திக்கான் நகரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக இந்த காரை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. இந்த காரை வெறும் அழகான ஓர் வாகனமாக மட்டுமே ஃபியட் வடிவமைக்கவில்லை.

Fiat 600 ev dashboard

அதனை அதி-நவீன வசதிகள் கொண்ட காராகவும் வடிவமைத்திருக்கின்றது. வட்ட வடிவ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஃப்ரீ ஸ்டாண்டிங் ரக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஃபியட் 600 இவி ஓர் குட்டி எஸ்யூவி ரக காராகும்.

இந்தியாவில் இந்த ரக கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக டாடா பஞ்ச் காரை கூறலாம். இந்த கார் தற்போது இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாகவே மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப் போலவே அடக்கமான எஸ்யூவி ரக காராகவே ஃபியட் 600 உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

Fiat 600 ev running pic

இந்த காரை ஃபியட் நிறுவனம் அதன் 500 கார் மடாலை தழுவி உருவாக்கி இருக்கின்றது. நீளமான வீல்பேஸ் இதன் அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதை உருவாக்க பயன்படுத்தப்பட்டு இருப்பது, ஜீப் அவென்ஜர் காரை உருவாக்க பயன்படுத்தப்படும் தளம் ஆகும். ஆகையால், ஜீப் அவென்ஜரின் ஒன்னுவிட்ட சகோதரனைப் போல ஃபியட் 600 காட்சியளிக்கின்றது.

இந்த காரின் நீளமான வீல் பேஸே அக்காரில் பெரிய பேட்டரி பேக்கை சேர்க்க உதவியாக இருக்கின்றது. 54kWh பேட்டரி பேக்கே ஃபியட் 600 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 248 மைல் தூரம் வரை பயணிக்க முடியும்.

Fiat 600 ev side view

கிமீட்டரில் கூற வேண்டுமானால் ஓர் ஃபுல் சார்ஜில் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரை ஃபியட் நிறுவனம் 500எக்ஸ் மாடலை ரீ-பிளேஸ் செய்யும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதனை நிறுவனம் இப்போது உறுதி செய்யவில்லை. "வெளிநாட்டுல எப்படி போனா நமக்கு என்ன?, இந்த காரு நம்ம ஊருல விற்பனைக்கு வரவாபோகுதுனு நினைக்குறீங்களா"?, இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஃபியட் 600 போன்ற குட்டியான வாகனங்களுக்கு டிமாண்ட் மிக சூப்பர்.

ஆகையால், இந்த சூழலை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள ஃபியாட் இந்த காரை எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் கொண்டு வரலாம். ஃபியட் நிறுவனம் 600 இ-காரில் 154 குதிரை திறன் மற்றும் 260 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபியட் 600 எலெக்ட்ரிக் காரின் வருகைக்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆகையால், இது இப்போது விற்பனைக்கு வருவது மிக மிக சந்தேகமே. தற்போது மலிவு விலையில் டாடா மோட்டார்ஸ் அதன் டியாகோ இவியை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைவிட குறைவான விலை எலெக்ட்ரிக் கார் வேண்டும் எனில் எம்ஜியின் கோமெட் இவியை நடாலாம். இதன் விலை ரூ. 9 லட்சத்திற்கும் குறைவாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 14, 2023, 18:02 [IST]
English summary
Fiat revealed 600 small electric suv
மேலும்... #ஃபியட் #fiat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X