மஸராட்டி எம்சி20 காரை வாங்கிய இந்தியர்... நமக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் வாங்கியிருப்பாங்களோ..

இந்தியாவில் தனது முதல் எம்சி 20 (MC20) காரை டெலிவரி கொடுத்து இருப்பதாக மஸராட்டி (Maserati) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டு இருக்கின்றது. இந்த காரின் விலை, சிறப்பு வசதிகள் மற்றும் எஞ்ஜின் திறன் உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் தனது முதல் எம்சி20 (MC20) ஸ்போர்ட்ஸ் ரக காரை டெலிவரி கொடுத்திருப்பதாக மஸராட்டி (Maserati) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூப்பர் கார் பிரியர்களின் மிகவும் பிரியமான காராக இந்த கார் இருக்கின்றது. உலகளவில் இந்த காருக்கு அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

First maserati mc20 delivered

இத்தகைய ஓர் சூப்பர் காரையே இந்தியர் ஒருவர் தற்போது வாங்கி இருக்கின்றது. இதனை மஸராட்டி நிறுவனம் கடந்த மார்ச் மாதத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இப்போதே இந்த சூப்பர் காரின் முதல் யூனிட் இந்தியாவில் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும் 3.69 கோடி ரூபாய் ஆகும். இந்த காரை ஸ்பெஷல் கஸ்டமைசேஷன் வாயிலாகவும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவ்வாறு வாங்கப்படும் பட்சத்தில் காரின் விலையில் மேலும் சில கோடிகள் அல்லது லட்சங்கள் கூடுதலாக இருக்கும்.

Maserati mc20 display

மஸராட்டி நிறுவனம் தன்னுடைய இந்த எம்சி 20 காரை, அதன் புகழ்பெற்ற எம்சி12 ஸ்போர்ட்ஸ் காரை தழுவி உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், லுக் மற்றும் செயல்பாடு விஷயத்தில் இந்த கார் எம்சி12-ஐ பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கின்றது. மஸராட்டி எம்சி 20 கார் பிரத்யேகமாக அதிக வேகத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற காராக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காரில் நிறுவனம் 3 லிட்டர், வி6 எஞ்ஜினையே பயன்படுத்தி இருக்கின்றது. இதனால் 630 குதிரை திறன் மற்றும் 730 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரால் மணிக்கு 325 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். டிரான்ஸ்மிஷனாக 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Maserati mc20 seat

மஸராட்டி எம்சி20 காரால் வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். அதேவேளையில், மணிக்கு நூறு கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும் இந்த காரால் நொடிப்பொழுதில் நின்றுவிட முடியும். 33 மீட்டர் இடைவெளி இருந்தாலே போதும்.

இத்தகைய சூப்பரான பிரேக்கிங் சிஸ்டமே காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான சூப்பரான திறன் கொண்ட சூப்பர் காரையே இந்தியர் ஒருவர் வாங்கி இருக்கின்றார். அவர் யார் என்கிற விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. ஆகையால், சூப்பர் காரை வாங்கியிருக்கும் நபர் பற்றிய விபரங்களை வெளியிட முடியவில்லை.

மஸராட்டி நிறுவனம் இந்த காரை இலகுவான எடைக் கொண்ட காராக உருவாக்கி இருக்கின்றது. 1.5 டன்னுக்கும் குறைவான எடையையே இது கொண்டிருக்கின்றது. 59 சதவீதம் எடை பின் பக்கத்திற்கும், 41 சதவீத எடை முன் பக்கத்திற்கும் பகிரப்பட்டு இருக்கின்றது. இதுவே மிக சிறந்த பிரேக்கிங் மற்றும் வேகத்திற்கு உதவியாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் சாலைகளில் இந்த காரை சட்டப்பூர்வமாக ஓட்டிக் கொள்ள முடியும். ஆனால், அதை அதனுடைய முழு வேகத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது. 300 கிமீ வேகத்தில் இயக்குவதற்கான ஏற்ற சாலை அமைப்பு நாட்டில் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.

More from DriveSpark

Article Published On: Saturday, June 3, 2023, 9:00 [IST]
English summary
First maserati mc20 delivered to customer in india
மேலும்... #மஸராட்டி #maserati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X