யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த 2கார்களுக்கு டிமாண்ட் அதிகம்! அதுவும் முதல் முறை காரை வாங்குறவங்க தேடி வராங்க!
இந்தியாவில் புதிய கார்களுக்கு இணையாக யூஸ்டு கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால்தான் சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் கூட இந்த பிசினஸில் ஈடுபட்டு வருகின்றன. புதிய கார்களை போல செகணட் ஹேண்ட் கார்களின் விற்பனையிலும் அவை ஈடுபட்டு வருகின்றன.
தனி ஷோரூம்களை அமைத்து அதன் வாயிலாக யூஸ்டு கார்களை நிறுவனங்கள் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு இந்திய சந்தையில் சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிகமாக இரண்டு பழைய கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, அந்த இரண்டு கார் மாடல்களை, முதல் முறையாக காரை வாங்க நினைப்பவர்களே அதிகம் வாங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த கார் மாடல்கள் எவை? அவற்றின் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிகம் டிமாண்டைப் பெற்று வரும் கார் மாடலாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகியவையே இருக்கின்றன. இத்துடன், ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காருக்கும் முதல் முறையாக காரை வாங்க விரும்புபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மேலும், டீசல் கார்களைக் காட்டிலும் பெட்ரோல் கார்களுக்கே தேவைப் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 32 வயதுடைய ஆண் மற்றும் பெண்களே அதிகம் யூஸ்டு கார்களை வாங்குபவர்களாக இருக்கின்றனர். புதிய கார்களின் விலை கடுமையாக உயர்ந்துக் கொண்டு வருவதனாலேயே பலர் யூஸ்டு கார்களை அதிகம் வாங்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இதேபோல், இந்திய அரசு டீசல் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து வருவதானலேயே யூஸ்டு கார் மார்க்கெட்டில் டீசலைக் காட்டிலும் பெட்ரோல் கார்களை வாங்குவோர் அதிகரித்துக் காணப்படுகின்றனர். 2023 ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மிகப் பெரிய ஆண்டாக அமைந்திருக்கின்றது.
வாகன உற்பத்தியாளர்கள் பலர் இந்த ஆண்டில் இரட்டிப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, யூஸ்டு கார் மார்க்கெட் களம் மிகப் பெரிய அளவில் சூடுபிடித்துக் காட்சியளிக்கின்றது. மேலும், மிக முக்கியமாக முதல் முறையாக காரை வாங்குபவர்கள் யூஸ்டு கார்களையே அதிகம் தேர்வு செய்திருக்கின்றனர்.
இரண்டாம் காலாண்டில், ஃபர்ஸ்ட் டைம் காரை வாங்குபவர்கள், 57 சதவீதம் பேர் பயன்படுத்திய கார்களையே வாங்கி இருக்கின்றனர். இதே எண்ணிக்கை இந்த மூன்றாம் காலாண்டில் 63 சதவீதமாக உயர்ந்திருக்கின்றது. ஆகையால், முதல் முறையாக காரை வாங்குபவர்கள் அதிகம் யூஸ்டு கார்களையே நாடுகின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
ஓட்ட பழகுவதற்கு ஏற்றவை யூஸ்டு கார்கள் என்று இந்தியர்கள் நம்புவதே இந்த நிலைக்கு காரணமாக இருக்கின்றது. மேலும், புதிய வாகனத்தை ஓட்ட தெரியாமல் ஓட்டி சேதப்படுத்த வேண்டாம் என்கிற நோக்கிலும் பலர் பயன்படுத்திய வாகனங்களை வாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஸ்பின்னி எனும் தளம் வெளியிட்ட தகவலின் வாயிலாக இந்த விபரங்கள் தெரிய வந்திருக்கின்றன.
100 சதவீத யூஸ்டு கார் விற்பனையில் 70 சதவீதம் விற்பனை ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த டெலிவரியில் 32 சதவீத டெலிவரி ஹோம் டெலிவரியாகவும் பெறப்பட்டிருக்கின்றன. இதுதவிர, ஆன்-லைன் வாயிலாக பணத்தைச் செலுத்துவோர்களின் எண்ணிக்கையும் லேசாக அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது.
21 சதவீதம் பேர் ஆன்-லைன் வாயிலாக தங்களுடைய பணத்தைச் செலுத்தி இருக்கின்றனர். மலிவு விலை கார்களை போலவே பிரீமியம் மற்றும் லக்சூரி பிராண்டுகளுக்கான வரவேற்பும் யூஸ்டு மார்க்கெட்டில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. மிக முக்கியமாக ஜீப், பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்ல சிறு சிறு நிறுவனங்களும்கூட இந்த பிரிவில் தங்களின் கால் தடத்தை ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும், பலர் இந்த பிசினஸை மேற்கொண்டும் வருகின்றனர். வரும் ஆண்டுகளிலும் இந்த துறைக்கு சூப்பரான டிமாண்டே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








