இது காரா? இல்ல சொகுசு கப்பலா? இந்தியாவிற்குள் களமிறங்க போகும் 100 கார்கள்! விலை என்ன தெரியுமா?

ஃபிஸ்கர் நிறுவனம் ஓஷன் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்தியாவில் களமிறங்க உள்ளது. இந்தியாவில் தனது கார்களை தயாரித்து விற்பனை செய்யும் இந்நிறுவனம் இந்த ஓஷன் என்ற எலக்ட்ரிக் எஸ்யூபியை வெறும் 100 கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இதைத்தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்தடுத்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஃபிஸ்கர் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் விரைவில் இந்தியாவில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காக இந்நிறுவனம் ஓஷன் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் களம் இறக்கிறது. இந்த காரை தற்போது இந்நிறுவனம் ஹைதராபாத்தில் டெஸ்ட் செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த காரின் அறிமுகம் வெகு தொலைவில் இல்லை விரைவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

fisker ocean ev suv

ஹைதராபாத்தில் இந்த கார் டெஸ்ட் செய்யப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் கருப்பு நிற கலர் கொண்ட காராக இருக்கிறது. இந்த காரை பார்க்கும்போது சிறப்பான ரோடு பிரசென்ஸ் கொண்ட சிறப்பான காராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்பக்கம் எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பாய்லர் பகுதியிலும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் வீல்கள் கருப்பு நிற அலாய் வீல்களாக வழங்கப்பட்டுள்ளன. இதன் டோர் ஹேண்டில்கள் ஃபிளஸ் டைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் இந்த காரின் டிசைன் ஹைலைட்களாக உள்ளன.

fisker ocean ev suv

நமக்கு கிடைத்த தகவலின் படி ஓசன் காரின் சர்வதேச மாடலில் உள்ள டாப் வேரியன்ட் கார்தான் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சர்வதேச காரில் 113 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டு எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் சேர்ந்து மொத்தமாக 572 பிஎச்பி பவரையும் 737 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த மோட்டார் மூலம் இந்த ஃபிஸ்கர் ஓஷன் கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 நொடிக்கும் குறைவான நேரத்திலேயே பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பவர் மற்றும் மோட்டார் உடன் இந்த கார் ஒரு தடவை சார்ஜ் செய்தால் 707 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் என டபிள்யூஎல்டிபி சான்று வழங்கியுள்ளது.

fisker ocean ev suv

மேலும் இந்த காரில் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக 17.7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 3டி ப்ரீமியம் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, முன்பக்கம் மற்றும் பின்பக்க சீட்டுகளுக்கான வெண்டிலேஷன், அடாஸ் தொழில்நுட்பம். பவர் டெயில் கேட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. மேலும் இந்த காரின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சோலார் பேனல்கள் மூலம் கார் சாலையில் செல்லும்போது வெயில் அடிக்கும் சூழ்நிலை இருந்தால் அதன் மூலம் காரின் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளும் இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் ரேஞ்ச் இந்த காருக்கு கிடைக்கிறது. இந்த கார் இந்தியாவில் சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் செக்மெண்டில் விற்பனைக்கு களமிறங்குகிறது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகி வரும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ், ஆடி இ-டிரான், ஜாக்குவார் ஐஃபேஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.

fisker ocean ev suv

இந்த காரின் விலையை பொருத்தவரை சுமார் ஒரு கோடி என்ற விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால் இந்த காரின் விலை மிக அதிகமாக இருக்கிறது. அதனால் வெறும் 100 கார்களை மட்டுமே விற்பனை செய்து இந்தியாவில் ஃபிஸ்கர் நிறுவனத்தின் கார்களை மக்கள் விரும்புகிறார்கள் என டெஸ்ட் செய்ய இந்த சோதனையை செய்து வருகிறது.

இந்த கார் இந்திய சாலையில் செல்லும்போது நிச்சயம் சாலையில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் நிச்சயமாக இதன் ரோடு பிரசென்ஸ் இந்தியாவில் உள்ள மற்ற பெரிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பல பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த காரை விரும்பி வாங்க வாய்ப்புள்ளது. இந்த காரின் அறிமுகம் அதிக நாட்கள் இல்லாமல் மிக விரைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபிஸ்கர் நிறுவனம் இந்த ஓஷன் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வெற்றிகரமாக விற்பனை செய்து அதற்கு நல்ல பெயர் கிடைத்தால் அதன் அடுத்தடுத்த தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இந்நிறுவனம் ஆலையை அமைத்து தனக்கான கார்களை தயார் செய்து இந்தியாவில் கார்களை விற்பனை செய்யவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 12, 2023, 13:27 [IST]
English summary
Fisker ocean ev suv india details upcoming spotting
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X