மிடில் கிளாஸ் மக்களுக்காகவே இந்த காரை டிசைன் பண்ணீருக்காங்க! உங்களுக்கு செலவே வைக்காத டாப் 5 கார்கள் இதான்!

இந்தியாவில் சமீபத்தில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. கார் வாங்கும் போது பல afகாரின் விலையை விட கார் வாங்கிய பின் ஆகும் செலவுகளை தான் அதிகம் கணக்கிடுகிறார்கள். ஒரு கார் வாங்கினால் அது அதன் உரிமையாளருக்கு அதிகம் செலவு வைத்த விடக்கூடாது என கணக்கிடுகிறார்கள். இதனால் அதிக மைலேஜ் தரும் கார்களையே இந்தியர்கள் விரும்புகிறார்கள்.

இப்படியாக இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு இருப்பதால் கார் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களை தயாரிக்கும் போது அது அதிக மைலேஜ் தர வேண்டும் என்ற அடிப்படையில் பல மாற்றங்களை செய்கிறார்கள். இப்படியாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அதிக மைலேஜ் கொண்ட 5 கார்களை பற்றி தான் இங்கே காண போகிறோம்.

best mileage cars

டொயோட்டா ஹைரைடர்: டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் கார் ஒரு ஹைபிரிட் ரக காராகும். ஹைபிரிட் என்றால் தன்னைத்தானே சார்ஜ் செய்து கொள்ளும் திறன் கொண்ட பேட்டரி பவரில் இயங்கும் மோட்டாரையும் கொண்ட கார் என்பதாகும் இந்த கார் லிட்டருக்கு 27.93 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இந்த கார் தான் அதன் செக்மெண்ட் கார்களிலேயே அதிக மைலேஜ் கொண்ட காராக இருக்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அட்கின்சன் சைக்கிள் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 115 பிஎஸ் பவரையும் 122 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 1.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஹைபிரிட் சிஸ்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

best mileage cars

கிராண்ட் விட்டாரா: மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரை பொறுத்தவரை 1.5 லிட்டர் 3 சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது ஹைரைடர் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காராகும். இந்த காரின் இன்ஜின் 115 பிஎஸ் பவரையும் 122என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த கார் லிட்டருக்கு 27.93 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது. இது மார்க்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது. இந்த காரும் டொயோட்டாவின் ஹைரைடர் காரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மைலேஜையே வழங்குகின்றன.

best mileage cars

ஹோண்டா சிட்டி இ எச்இவி: இந்த பட்டியலில் உள்ள மூன்றாவது ஹைபிரிட் கார் ஹோண்டா சிட்டி காரின் இ எச்இவி தான். இந்த கார் ஹைபிரிட் வெர்ஷன் காராக விற்பனைக்கு வருகிறது. இதுவும் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் இன்ஜினை கொண்டுள்ளது. இதில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் இ எச்இவி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் அதிகபட்சமாக 124.2 எச்பி பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 27.13 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது. முதல் மூன்று காரும் அட்கின்சன் சைக்கிள் கார் இன்ஜின்களே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸூகி செலிரியோ: மாருதி சுஸூகி நிறுவனத்தின் செலிரியோ கார் அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது . இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு ஏஎம்டி அல்லது மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 26.68 கிலோமீட்டர் மைலேஜை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த 26.68 கிலோமீட்டர் மைலேஜ் என்பது ஏஎம்டி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்களுக்கு தான். மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்களை பொருத்தவரை 25.24 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்ட காராக இருக்கிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை மார்க்கெட்டில் ரூபாய் 4.90 லட்சம் முதல் 5.67 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

வேகன் ஆர்: அடுத்ததாக மாருதி சுஸூகி வேகன் ஆர் இந்த காரை பொறுத்தவரை இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு ஏஎம்டி அல்லது மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை 25.19 கிலோ மீட்டர் மைலேஜ் ஏஎம்டி வேரியண்டிலும் 24.35 கிலோமீட்டர் மைலேஜ் மேனுவல் வேரியண்டிலும் வழங்கும் திறன் கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 4.45 லட்சம் முதல் ரூபாய் 5.95 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்களுக்கு நல்ல மவுசு இருக்கும் நிலையில் பல நிறுவனங்கள் தங்கள் கார்களின் மைலேஜை அதிகரிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். பல நிறுவனங்கள் தங்கள் கார்களை விற்பனை செய்யும் செக்மெண்டிலேயே அதிக மைலேஜ் கொண்ட கார்களாக தங்கள் கார்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதன் விளைவாகவே தற்போது ஹைபிரிட் தொழில்நுட்பம் வேகமாக இந்தியாவில் வளர்ந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 28, 2023, 16:45 [IST]
English summary
Five fuel efficient indian cars achieving mileage of more than 20 kmpl
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X