மேனுவல் கார்களை இந்தியர்கள் அதிகம் வாங்க இதுதான் காரணமா... இத்தன நாளா தெரியாம போச்சே! டாப் 5 காரணிகள்...

புதுசா கார் வாங்கும் பிளானில் இருக்கின்றோம், மேனுவல் கியர்பாக்ஸ் (Manual GearBox) வச்ச வண்டிய வாங்கலாமா?, அல்லது, தானியங்கி கியர்பாக்ஸ் (Automatic GearBox) வச்ச வண்டிய வாங்காலமா?, என யோசிச்சிட்டு இருக்கீங்களா? இந்த கேள்விக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

இந்தியர்கள் மத்தியில் ஆட்டோமேட்டிக் கார்கள் மீது மோகம் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேவேளையில், பலர் மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட கார்களையே வங்கவே இப்போதும் விரும்புகின்றனர். மலிவு விலையில் ஆட்டோமேட்டிக் கார்கள் கிடைக்கின்றநிலையில் இப்போதும் மேனுவல் கார்கள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

Manual car

அதேவேளையில் இதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. அதாவது, ஐந்து விஷயங்களில் மேனுவல் கார்களே மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணத்தினாலேயே இப்போதும் மேனுவல் கார்கள் பலர் விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்ன காரணங்கள் அவை என்பது பற்றிய தகவலையே இந்த பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மலிவு விலை: தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி மலிவு விலை கார்களிலேயே வழங்கப்படுகின்றது. ஆனால், அதைவிட பலமடங்கு குறைவான விலையில் மேனுவல் கியர்பாக்ஸ் வச்ச கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும். பட்ஜெட் விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் மேனுவல் கார்களை தேர்வு செய்வது மிக சிறந்த தேர்வாக இருக்கும் என கருதப்படுகின்றது.

Maruti suzuki fronx

அதேவேளையில், மேனுவல் கார்களை பராமரிக்கும் செலவும் மிக குறைவே. எளிமையான வடிவமைப்பு, குறைவான பாகங்கள் ஆகியவற்றின் காரணமாக அவற்றின் விலையும் சரி, பராமரிப்பு செலவும் சரி அனைத்தும் மிகக் குறைவாக இருக்கின்றன. இதுவும் பலர் மேனுவல் காரை தேடி சென்று வாங்க காரணமாக இருக்கின்றது.

கன்ட்ரோல்: மேனுவல் கார்கள் மிக சிறந்த கன்ட்ரோலை வழங்கும். தேவைக்கேற்ப உடனடியாக கியரைக் குறைத்து, வேகத்தைக் கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும். மேலும் மிக சிறந்த பிக்-அப் மற்றும் எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, வளைவுகள் மற்றும் நெருக்கமான சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக மேனுவல் கார்கள் இருக்கின்றன.

Driving manual

எரிபொருள் சிக்கனம்: ஒரு சில ஆட்டோமேட்டிக் கார்களே எரிபொருளை சிக்கனம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கின்றன. ஆனால், மேனுவல் கார்கள் பெரும்பாலும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். ஓட்டும் வேகத்திற்கு ஏற்ப ஓட்டுநர்கள் கியரை குறைத்தும், தேவைக்கேற்ப கியரை அதிகரித்தும் பயன்படுத்துவதனால், எரிபொருளை சிக்கனப்படுத்திக் கொள்ள முடியும்.

ஃபன் டிரைவிங் அனுபவம்: ஆட்டோமேட்டிக் கியரைக் கொண்ட காரைக் காட்டிலும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட காரை ஓட்டுவது வேடிக்கையாக இருக்கும். கியர்களை மாற்றும் செயல்முறைதான் மிகவும் சுவாரஷ்யமான ரைடிங் அனுபவத்தை வழங்குகின்றது. மேனுவல் கார் ஓட்டுவதை வாகன ஓட்டிகள், அதனை தனி கலையாக பார்க்கின்றனர். மேலும், மேனுவல் காரை ஓட்டும்போது கிடைக்கும் மிகழ்ச்சி ஆட்டோமேட்டிக் கார்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

கிடைக்கும் தன்மை அதிகம்: மேனுவல் கார்கள் பரந்த அளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சொல்லப்போனால் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களே அதிக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை குறைவான தேர்வுகளில் மட்டுமே பெற முடியும். மேலும், அவற்றின் விலையும் முன்பு கூறியதைப் போலவே சற்று அதிகம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மேனுவல் கார்களை அதிகம் வாங்குவதற்கான காரணங்களையே மேலே பார்த்தோம். புதிய காரை வாங்கும் திட்டத்தில் இருக்கின்றீர்கள் என்றால், நீங்களும் இந்த காரணங்களை முன் வைத்து மேனுவலை தேர்வு செய்யலாம். லாபம், அதிகம் மைலேஜ் மற்றும் சிறந்த ரைடிங் அனுபவத்தை மேனுவல் கார்கள் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.

Article Published On: Monday, May 8, 2023, 15:34 [IST]
English summary
Five top reasons why manual car best over an automatic
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X