Flight Food Taste Bitter ஹெட்போன் போட்டா உணவு டேஸ்டா இருக்குமா? என்னங்க சொல்றீங்க?
நீங்கள் நீண்ட தூரம் விமானத்தில் பயணிக்கும் போது உங்களுக்காக விமானத்தில் உணவு வழங்கப்படும். சில விமானங்களில் உணவைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். சில விமானங்களில் டிக்கெட்விலையிலயே உணவு அடங்கும்.
இப்படி நீங்கள் விமானத்தில் பறக்கும் போது காசு கொடுத்து உணவை வாங்கினாலும் சரி, இலவசமாக உங்களுக்கு வழங்கப்பட்டாலும் சரி விமானத்தில் வழங்கப்படும் உணவுகள் பெரும்பாலும் சுவை இல்லாமலேயே இருக்கும். இதைப் பலர் அனுபவித்திருப்பீர்கள்.

பெரும்பாலான மக்கள் விமானங்களில் உணவுகள் பதப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. அல்லது தரமில்லாத உணவை வழங்குகிறார்கள் இதனால் தான் அப்படி இருக்கும் என நினைத்துக் கடந்து சென்று விடுவார்கள். ஆனால் உண்மை அது வல்ல, உலகின் சிறந்த செஃப் விமானத்திலேயே உங்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்தாலும் அது சுவைக்கப்படும் போது சுவையில்லாமல் ஏதோ காகிதத்தைச் சாப்பிட்டது போல இருக்கும்.
இதற்கு அறிவியல் ரீதியான ஒரு காரணம் இருக்கிறது. விமானத்தில் இருக்கும் போது நீங்கள் கேபின் பிரஷருக்குள் இருக்கிறீர்கள். இது அதிகமான பிரஷராகும். இதை நீங்கள் உணராவிட்டாலும் உங்கள் உடல் உறுப்புகளுக்குத் தெரியும். காது மூக்கு, வாய் வழியாக பிரஷர் உள்ளே செல்லும்.

இப்படிச் செல்லும் போது உங்கள் உங்கள் நாவில் உள்ள சுவையை உணரும் உணர்வைக் குறைத்து அல்லது மாற்றிவிடுகிறது. இதனால் தான் விமானங்களில் உணவு சுவையில்லாமல் இருக்கும். அதாவது உண்மையிலேயே அந்த உணவு சுவையாக இருந்தாலும் அதை நீங்கள் உணர முடியாது.
இந்த பிரச்சனையைச் சமாளிக்க உணவுகளில் அதிகமாக உப்பு, காரம் போட்டுச் சமைத்தால் உங்களுக்கு அந்த உணவில் ஓரளவு சுவை தெரியும். ஆனால் இது உடல் நலத்திற்கு கேடு, அதிகமாக உப்பு சேர்த்தால் டிஹைட்ரேஷன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சரி அப்படி என்றால் விமானத்தில் உணவைச் சுவையாகவே சாப்பிட முடியாதா என்று கேட்டால் அதற்கு ஒரு வழியிருக்கிறது. இதைப் பின்பற்றினால் விமானத்தில் உணவை ஓரளவிற்குச் சுவையாகச் சாப்பிட முடியும். அது தான் ஹெட்செட் போட்டுக்கொண்டே விமானத்தில் சாப்பிடுவது.
இது என்ன ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற கதையாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதற்குப் பின்னாலும் ஒரு அறிவியல் இருக்கிறது. இந்த உணவின் சுவை உணரப்பாடாததற்குக் காரணம் பிரஷர்தான். இது காது வழியாகத் தான் அதிகமாக உள்ளே செல்கிறது.
இதைத் தடுக்க நாய்ஸ் கேன்சலிங் ஹெட் போன்களை நாம் பயன்படுத்தினால் காருக்குள் பிரஷர் செல்லாது. இதனால் உணவின் சுவை முன்பைவிட சற்று நன்றாகத் தெரியும். இதனால் தான் விமான பயணத்தின் போது ஹெட்போன் போட்டுக்கொண்டு சாப்பிடுவது உணவின் சுவையைக் கூட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் பயணித்த பலர் இப்படியாக உணவைச் சுவைத்துவிட்டு அது நல்ல சுவையில் இல்லாததை உணர்ந்திருப்பார்கள். பலர் அதற்கு உணவு செய்த முறை குறித்து சந்தேகம் எழுப்புவார்கள். ஆனால் உண்மையில் இப்படி ஒரு அறிவியல் காரணம் இருப்பது பலருக்குத் தெரியாது. ஹெட்போன் போன்ற யுக்தியைப் பயன்படுத்து ஒரு சிறந்த ஐடியா தான்


Click it and Unblock the Notifications









