கப்பல் மாதிரி இருக்கு! 10 பேர் போற காரின் விலை இவ்ளோதானா! 2, 3 குடும்பம் நெருக்கடி இல்லாம சொகுசா போகலாம்!

புத்தம் புதிய ஃபோர்ஸ் சிட்டிலைன் (Force Citiline) கார் இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 10 இருக்கைகளை கொண்ட, எம்யூவி (MUV) ரக கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்கு அறிமுகமான (Force Trax Cruiser) அடிப்படையில், புதிய ஃபோர்ஸ் சிட்டிலைன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், புதிய ஃபோர்ஸ் சிட்டிலைன் காரின் வாக்அவுரண்ட் (Walkaround) வீடியோ (Video) ஒன்று யூ-டியூப் (YouTube) தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவின் மூலம் ஃபோர்ஸ் சிட்டிலைன் காரின் வெளிப்புறம் மட்டுமின்றி, உட்புறத்தையும் தெளிவாக பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

Force Citiline

ஃபோர்ஸ் சிட்டிலைன்தான் இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் கார் ஆகும். இதன் நீளம் 5,120 மிமீ ஆகவும், அகலம் 1,818 மிமீ ஆகவும், உயரம் 2,027 மிமீ ஆகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இதன் வீல் பேஸ் நீளம் 3,050 மிமீ ஆக உள்ளது. இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 191 மிமீ ஆகும். மொத்த எடை 3,140 கிலோ.

பிரம்மாண்ட தோற்றம் கொண்ட ஃபோர்ஸ் சிட்டிலைன் காரில், 63.50 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், ஃபோர்ஸ் சிட்டிலைன் காரில், 2.6 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,200 ஆர்பிஎம்மில் 91 ஹெச்பி பவரை உருவாக்கும்.

Force Citiline Side Design

அதே நேரத்தில் 1,400-2,400 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனை வழங்கும். இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தவிர, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், ஃபோர்ஸ் சிட்டிலைன் 'ப்ரைவேட் வெய்கில்' என பதிவு செய்யப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் 8 சீட்டர் வரையிலான கார்கள் மட்டுமே 'ப்ரைவேட் வெய்கில்' என பதிவு செய்யப்படும்.

ஆனால் ஃபோர்ஸ் சிட்டிலைன் 10 சீட்டர் கார் என்பதால், டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 'வர்த்தக வாகனம்' என்றுதான் பதிவு செய்யப்படுகிறது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், பாக்ஸி டிசைனில் ஃபோர்ஸ் சிட்டிலைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியில் செவ்வக வடிவ க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Force Citiline Interior

இந்த க்ரில் அமைப்பில், வட்ட வடிவ சிட்டிலைன் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. பாடி கலரில் வழங்கப்பட்டுள்ள பேனல்கள், கருப்பு நிற ஓஆர்விஎம்கள், பிரம்மாண்டமான வீல் ஆர்ச்கள் மற்றும் மிகப்பெரிய பானெட் ஆகியவையும் ஃபோர்ஸ் சிட்டிலைன் காரின் வெளிப்புறத்தில் கவனம் ஈர்க்க கூடிய அம்சங்களாக இருக்கின்றன.

உட்புறத்தை பொறுத்தவரையில், இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 10 சீட்டர் கார் ஆகும் (9 பயணிகள் + டிரைவர்). 2+3+2+3 என்ற லேஅவுட்டில், இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 4 வரிசைகளிலும் இருக்கைகள் முன்னோக்கிதான் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் 2வது வரிசையில், பென்ச் வகை இருக்கை இடம்பெற்றுள்ளது.

இங்கே 60:40 ஸ்பிளிட் வசதி இருப்பதால், தேவையான சமயங்களில் நீங்கள் மடக்கி கொள்ள முடியும். அதே நேரத்தில் இந்த காரின் 3வது வரிசையில், கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஃபோர்ஸ் சிட்டிலைன் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். அதன் எக்ஸ் ஷோரூம் விலை (Price) 15.93 லட்ச ரூபாய் மட்டுமே.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலைக்கு ஃபோர்ஸ் சிட்டிலைன் மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதில் சந்தேகமில்லை. அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு ஏற்ற காராக இது இருக்கும். தனித்தனி காரில் செல்ல விருப்பம் இல்லாதவர்கள், ஃபோர்ஸ் சிட்டிலைன் 10 சீட்டர் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 1, 2023, 16:32 [IST]
English summary
Force citiline 10 seater walkaround price engine exterior interior get all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X