எமனையே ஏமாத்திட்டாரு இந்த மனுசன்... கூலாக செல்ஃபி எடுக்கும் இவர்தான் இந்த விபத்துக்கே காரணம்! என்ன நடந்தது?

பெரும் விபத்தில் இருந்து தப்பித்த ஓர் அந்த கார் முன்பு நின்று எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்திருக்கின்றார். இவர் எப்படி இந்த அளவு பெரும் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்?, அடையாளம் காண முடியாத அளவிற்கு கவிழ்ந்து கார் எந்த பிராண்ட்?, என்கிற அனைத்து முக்கிய தகவல்களைக் காணலாம், வாங்க.

ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் சூப்பரான தயாரிப்புகளில் ஃபிகோ (Figo)-வும் ஒன்று. நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக உறுதியான கட்டுமானத்திற்கு பெயர்போனவையாக இருக்கின்றன. அதில் இந்த ஃபிகோவும் ஒன்று என்பது கவனிக்கத்தகுந்தது. பாதுகாப்பு, நீடித்து உழைத்தல் என அனைத்திலும் மிக சிறந்த தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது.

ஃபிகோ

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஓர் சம்பவமே தற்போது அரங்கேறி இருக்கின்றது. கடுமையான விபத்திலும் தன்னுள் பயணித்தவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இன்றி இந்த வாகனம் காப்பாற்றி இருக்கின்றது. காரின் முன் பக்கம் எது?, பின் பக்கம் எது என்பதைகூட அறிந்து கொள்ள முடியாத வண்ணம் கரைப்பான் பூச்சி போல கவிழ்ந்து கிடக்கும் காருக்கு அருகில் ஓர் நபர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் படத்தை நம்மால் காண முடிகின்றது.

இவரோ காரின் உரிமையாளரும், அக்காரை ஓட்டி வந்தவரும் ஆவார். விபத்து ஏற்பட்ட அன்றைய தினத்தின் காலையிலேயே இப்படம் புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கின்றது. இத்தனை பெரிய விபத்தைச் சந்தித்த போதிலும் அவர் அதிரஷ்வசமாக உயிர் தப்பி இருக்கின்றார் என்பதற்கு சான்றாக இந்த படம் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

இந்த நிகழ்வின் வாயிலாக தான் ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட வாகனம் என்பதை ஃபோர்டு ஃபிகோ நிரூபித்துக் காட்டி இருக்கின்றது. விபத்து அரங்கேறிய தருணத்தில் டேஷ்கேம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட வீடியோவையும் ஃபிகோவின் உரிமையாளர் வெளியிட்டு இருக்கின்றார். இதன் வாயிலாக விபத்து நள்ளிரவில் அரங்கேறி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், தூக்க கலக்கம் மற்றும் உடல் சோர்வே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது. காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக காரை இயக்கி வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே விபத்து ஏற்பட்டிருக்கின்றது.

ஃபிகோ

அந்த நேரத்தில் கார் மணிக்கு 70 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நேரத்திலேயே கொண்டை ஊசி வளைவை போல் மிக மோசமான வளைவு அந்த பாதையில் வந்திருக்கின்றது. இதை சற்றும் எதிர்பார்த்திராத அந்த நபர் காரின் பிரேக்குகளை பிடித்தும், திசையை மாற்றியும் காரை பாதுகாக்க முயற்சித்திருக்கின்றார்.

இருப்பினும், அதிக வேகத்தின் காரணமாக ஃபிகோ கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்தைச் சந்தித்திருக்கின்றது. பலமுறை உருண்டு சென்று அக்கார் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கின்றது. காரின் உரிமையாளருடன் சேர்த்து அவருடைய நண்பர்கள் இருவர் அதே வாகனத்தில் பயணித்திருக்கின்றனர். அவர்களும் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஃபிகோ

குறிப்பாக, ஆச்சரியம் அளிக்கும் விதமாக காரை ஓட்டி வந்தவர் காயமே இன்றி தப்பி இருக்கின்றார். இதற்கு ஃபிகோவின் உறுதியான கட்டுமானமே காரணமாக இருக்கின்றது. மேலும், காருக்குள் வழங்கப்பட்டிருந்த ஏர் பேக்குகளும் அவர்களை பெரும் காயங்கள் இன்றி காப்பாற்றி இருக்கின்றது. இத்தகைய அதிக பாதுகாப்பான வாகனம் தற்போது துரதிரஷ்டவசமாக விற்பனையில் இல்லை.

ஃபோர்டு நிறுவனத்தின் ஒரு தயாரிப்புகூட இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியர்கள் மத்தியில் ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போதிய அளவு வரவேற்புக் கிடைக்காததன் காரணத்தினால், இந்த அமெரிக்க நிறுவனம் தனது ஒட்டுமொத்த செயல்பாட்டையும் இந்தியாவில் நிறுத்திக் கொண்டது. வாகன உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்தையும் நிறுத்திவிட்டது.

இதன் விளைவாக நிறுவனத்தின் புகழ்மிக்க தயாரிப்புகளான ஈகோஸ்போர்ட், அஸ்பையர், ஃபிகோ மற்றும் என்டீயோவர் ஆகியவற்றின் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில் குறிப்பிட்ட சில சேவைகளை மட்டும் தன்னுடைய பழைய வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்டு நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே முழுமையாக விபத்தின் காரணமாக ஃபிகோ உருக்குலைந்து போயிருக்கின்றது. இந்த விபத்திற்கு முழுக்க-முழுக்க உடல் சோர்வே காரணமாக இருக்கின்றது.

இதன் காரணமாகவே நீண்ட தூர பயணங்களின்போது உடல் ஓய்வு கட்டாயம் தேவை என அறிவுறுத்தப்படுகின்றது. மேலும், சோர்வாகவோ அல்லது தூக்க கலக்கமாகவோ இருந்தால் உடனே காரை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. ஆனால், ஆபத்தை உணராமல் பலர் விதிகளையும், அறிவுரைகளையும் மீறி வாகனங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 20:09 [IST]
English summary
Ford figo crash video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+