நம்பி வந்த வாடிக்கையாளரை ஏமாற்றிய பிரபல கார் நிறுவனம்! இப்படிகூட செய்வீங்களா! அதிரடி நடவடிக்கை எடுத்த கோர்ட்!

உற்பத்தியில் குறைபாடு உள்ள காரை விற்பனைச் செய்ததற்காக பிரபல வாகன உற்பத்தி நிறுவனத்திற்கு மாபெரும் தொகையை அபராதமாக வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. எந்த நிறுவனம் அது? என்ன மாதிரியான பிரச்னைக் கொண்ட காரை அது விற்பனைச் செய்தது?, உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று உற்பத்தியில் குறைபாடு உள்ள வாகனத்தை வாடிக்கையாளர்களுக்கு விற்பனைச் செய்ததற்காக உச்சபட்ச அபராதத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. பிரபல ஃபோர்டு நிறுவனமே அது ஆகும். இந்த நிறுவனம் இப்போது இந்தியாவில் இல்லை. அது வெளியேறி வெகு காலம் ஆகின்றன.

Ford endeavour pic

இருப்பினும், இந்த நிறுவனத்தின் கார்கள் இந்திய சாலையில் இயங்கிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த மாதிரியான சூழலில், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் வர்த்தக பணிகளை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் அது உற்பத்தியில் கோளாறு உள்ள கார் ஒன்றை வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பே தற்போது இறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. உற்பத்தியில் குறைபாடு உள்ள காரை வாடிக்கையாளருக்கு விற்பனைச் செய்ததற்காக அந்நிறுவனத்திற்கு ரூ. 42 லட்சம் அபராதம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை பஞ்சாப் மாநில நுகர்வோர் ஆணையம் வழங்கி இருந்தநிலையில், தற்போது அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கின்றது.

Ford fined

பஞ்சாபைச் சேர்ந்த ஓர் நபர் ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து விலை உயர்ந்த டைட்டானியம் என்டீயோவர் சொகுசு எஸ்யூவி ரக காரை வாங்கி இருக்கின்றார். இந்த காரில் ஆயில் லீக் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதை சரி செய்து தரும்படி முதலில் அவர் நிறுவனத்தை நாடி இருக்கின்றார்.

ஆனால் ஏனோ அவரின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு இருந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் பஞ்சாப் மாநில நுகர்வோர் மன்றத்தின் உதவியை நாடி இருக்கின்றார். அங்கு பழுதடைந்த எஞ்ஜினை மாற்றம் செய்து தரவும், தாமதம் செய்யப்படும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கிடவும் உத்தரவிடப்பட்டது.

பஞ்சாப் நுகர்வோர் குறைதீர் மன்றம் வழங்கிய இந்த உத்தரவை எதிர்த்து ஃபோர்டு நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட காரின் எஞ்ஜினை அது ரீ-பிளேஸ் செய்திருக்கின்றது. இருப்பினும், அந்த கார் பலவிதமான பழுதை கொண்டிருந்ததை காரின் உரிமையாளர் இருந்திருக்கின்றார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் தீபன்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஃபோர்டுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையை உறுதி செய்தது. மேலும், ஏற்கனவே வாடிக்கையாளருக்கு ஃபோர்டு நிர்வாகம் ரூ. 6 லட்சத்தை வழங்கிவிட்டதால் மீதமுள்ள 36 லட்ச ரூபாயை மட்டும் செலுத்த உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, வாடிக்கையாளர் இன்சூரன்ஸுக்காக செலுத்திய ரூ. 87 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்கவும் ஃபோர்டு நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த அனைத்து தொகையைும் திருப்பிக் கொடுத்த பின்னர் வாடிக்காயளர்கள் அவருடைய காரை நிர்வாகத்திடமே திரும்பி ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது. உற்பத்தி குறைபாடு உள்ள காரை விற்பனைச் செய்த நிறுவனத்திற்கு மிக சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அபராதம் எல்லாம் போதாது என்றே நாங்கள் கூறுவோம். வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்பனைச் செய்பவர்கள்மீது இதைவிட கடுமையான நடவடிக்கைகளை நீதிமன்றம் எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். குறிப்பாக, அந்த நடவடிக்கை வேறு எந்தவொரு கார் டீலரும் இதுபோன்ற தவறுகளில் ஈடபட தயங்கச் செய்யும் வகையில் இருக்க வேண்டும். அப்படி என்றால் மட்டுமே தவறுகள் குறையும்.

Article Published On: Sunday, July 9, 2023, 8:30 [IST]
English summary
Ford fined for selling defective car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+