அடேங்கப்பா இவ்வளவு வேகமா? 218 கி.மீ. வேகத்தில் ஃபார்முலா இ ரேஸில் கின்னஸ் சாதனை!
எலெக்ட்ரிக் மோட்டார் ஸ்போர்ட் உலகில் புதிய கின்னஸ் சாதனையாக ஃபார்முலா இ குழுவை சேர்ந்த டிரைவர் ஒருவர் 218.71 கிலோமீட்டர் வேகத்தை எட்டிப் பிடித்துள்ளார். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எலெக்ட்ரிக் கார்களுக்கான மோட்டார் ஸ்போர்ட் ரேஸ் ஜென்பீட்டா என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் கார் ரேஸ் லண்டனில் உள்ள எக்ஸெல் என்ற இன்டோர் கார் ரேஸ் ட்ராக்கில் நடக்கிறது. சுமார் 2.09 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரேஸ் டிராக் உலகிலேயே வித்தியாசமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்காக இருக்கிறது.

இந்த ரேஸ் டிராக்கில் தான் ஃபார்முலா இ வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 29-30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்தப் போட்டிக்காக ஜென்பீட்டா அனைத்து வீல் டிரைவ் கொண்ட கார்களை அறிமுகப்படுத்தி போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த கார்களுக்காக ஹேண்ட்ஹூக் என்ற நிறுவனம் அயான் ரேஸ் டயர்களை வழங்கியுள்ளது.
இந்த போட்டியில் தான் கின்னஸ் சாதனைக்கான முயற்சி நடந்தது. இரண்டு விதமான ஃபார்மெட்டுகளில் இதற்கான முயற்சி நடந்தது. ஃபார்முலா இ டிரைவர் ஜுக் ஹுக்ஸ் மற்றும் மகேந்திரா ரேசிங் டிரைவர் லூகாஸ் டி கிராஸி ஆகியோர் இதில் போட்டியிட்டனர். இரண்டு டிரைவர்களும் இன்டோர் பாதையில் சுமார் 165.2 கிலோமீட்டர் வேகத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.
இதன் போட்டியின் போது என்இஓஎம் மெக்லாரன் ஃபார்முலா ஈ டீம் டிரைவர் அதிகபட்சமாக மணிக்கு 218.71 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப் பிடித்துள்ளார். இவர் இதற்கு முந்தின முந்தைய சாதனையை விட அதிகபட்ச அதிகமாக மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்.
இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவில் அதிகபட்சமான வேகம் இதுதான். இந்த வேகத்தை எட்டிப்பிடிப்பதற்காக பார்முலா ரேஸ் காரை பல்வேறு மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் பவராக 400 கிலோ வாட் அதாவது 536 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கார்கள் எல்லாம் 350 கிலோ அதாவது 436 பிஎச்பி திறன் கொண்டதாக தான் ஃபார்முலா ரேஸ் கார்கள் இருக்கும் ஆனால் தற்போது இது அதிக திறனை வெளிப்படுத்துவதற்காக சற்று மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் இவ்வளவு வேகமா எளிதாக சாத்தியமானது.
இந்த ரேஸ் டிராக் முழுவதும் இன்டோரிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்கூரையிட்ட மிகப்பெரிய ரேஸ் டிராக் இது இந்த சாதனையை செய்ய இந்த ரேஸ் டிராக்கில் 346 மீட்டர் நேர் நீளமான ரோடு இருந்தது. அந்த ரோட்டில் தான் இந்த வேகம் சாத்தியம் என முடிவு செய்யப்பட்டது. அதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டது.
குறிப்பாக இந்த ரோட்டிற்கு வரும் முன்னர் ஒரு திருப்பம் இருக்கிறது. அந்த திருப்பத்தில் சரியாக 130 டிகிரியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் திருப்பினால் மட்டுமே இந்த வேகத்தை எட்டிப் பிடிக்க முடியும் என திட்டமிடப்பட்டது. அதன்படி சரியாக டிரைவர் திருப்பியதால் இந்த வேகத்தை எளிதாக எட்டிப் பிடித்து விட்டனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகில் எலெக்ட்ரிக் மோட்டார் ஸ்போர்ட் என்ற ரேஸ் சமீபமாக தான் பிரபலமாகி வருகிறது. முழுவதும் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே இதில் பயன்படுத்துகிறார்கள். இதில் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுவதில்லை. எலக்ட்ரிக் மோட்டாரை வைத்து இவ்வளவு வேகத்தை சுலபமாக எட்டிப் பிடித்து விட முடியும் என இவர்கள் நிரூபித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








