எம்பிஏ படிப்பு வேணாம்னு உதறிவிட்டு டீ கடை ஆரம்பித்தவர்... இன்னைக்கு கோடி ரூபா பென்ஸ் காருக்கு உரிமையாளர்!

எம்பிஏ சாய் வாலா (MBA Chai Wala) கடையை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். தற்போது கோடியில் காசு பார்க்கும் இந்த கடையின் உரிமையாளர் பிரஃபுல் பில்லோர், ஒரு காலத்தில் எம்பிஏ படிப்பை முழுமையாக முடிக்க முடியாமல் டீ கடை திறந்தவர் ஆவார்.

இந்த தொழிலில் நல்ல வருமானம் வருவதை உணர்ந்து அடுத்தடுத்து புதிய டீ கடைகள் என தனது பிசினஸை விரிவுப்படுத்தினார். இதன் விளைவாக தற்போது மிகப் பெரிய இளம் தொழிலதிபராக அவர் மாறியிருக்கின்றார். எம்பிஏ படிப்பை கை கழுவிட்டு அவர் முதலில் ஐஐஎம் அஹமதாபாத்திலேயே தனது முதல் டீ கடையை திறந்தார். இதற்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கின்றது.

டீ கடை

நாடு முழுவதும் கடைகள் திறப்பு

இந்த நிலையிலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் டீ கடையை நிறுவி இருக்கின்றார். தற்போது நாடு முழுவதும் எம்பிஏ சாய் வாலா கடை பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. இந்நிலையிலேயே இந்த இளம் தொழிலதிபர் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கியிருக்கும் பென்ஸ் சொகுசு காரின் விலை 90 லட்ச ரூபாய் ஆகும்.

புத்தம் புதிய பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி ரக கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். பன்முக வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதில், 300 டி வேரியண்டையே பிரஃபுல் வாங்கி உள்ளார். தன்னுடைய இந் லேட்டஸ்ட் கொள்முதலை இன்ஸ்டா பக்க பதிவின் வாயிலாக பிரஃபுல் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

டீ கடை

உங்களாலும் வாங்க முடியும்

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஜிஎல்இ-யும் ஒன்று. இதையே பிரஃபுல் வாங்கி இருக்கின்றார் என்பது பிற டீ கடைக்காரர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தொழிலை விரிவுபடுத்தும் யுக்தி அறிந்திருந்தால் அனைவராலும் இந்த காரை வாங்க முடியும். எக்கசக்க சொகுசு வசதிகளையும், நவீன கால சிறப்பு கருவிகளையும் கொண்டதே இந்த பென்ஸ் ஜிஎல்இ சொகுசு எஸ்யூவி ஆகும்.

இந்த அம்சங்கள் காரின் அதிக விலைக்கு காரணம்

இதன் விளைவாகே இதன் விலை கோடி தொடும் வகையில் இருக்கின்றது. மிக முக்கியமான அம்சங்களாக இந்த காரில் நான்கு ஜோன்கள் க்ளைமேட் கன்ட்ரோல், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், முழு டிஜிட்டல் ரக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், எல்இடி ஹெட்லேம்ப்புகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.

டீ கடை

இதுதவிர ஹேண்ட் ஃப்ரீ பார்க்கிங், பவர்டு டெயில்கேட், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களும் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இன்னும் ஏராளமான அம்சங்களை இந்த கார் மாடலில் பென்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த சொகசு காரை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்விலும் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது.

பவர்ஃபுல் மோட்டார் தேர்வுகள்

அனைத்தும் அதிக பவர்ஃபுல்லான மோட்டார்கள் ஆகும். உதாரணமாக 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் பென்ஸ் ஜிஎல்இ மணிக்கு 225 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க வெறும் 7.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்திலும் இது செல்லும். இதுதவிர, 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டார் தேர்வுகளிலும் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டீ கடை

ஜிஎல்இ மட்டுமின்றி ஏஎம்ஜி தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதனை பிரத்யேகமாக கூபே ரக தோற்றத்தில் நிறுவனம் வடிவமைத்திருக்கும். மேலும். 435 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகை பவர்ஃபுல் மோட்டார் மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காருக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 14, 2023, 11:50 [IST]
English summary
Founder of mba chai wala buys mercedes benz gle luxury suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X