ஜெயலலிதாவுக்குப் பிடித்த கார் எப்பவும் முதலிடத்தில் இருப்பதன் ரகசியம் என்ன?
இந்தியாவில் கடந்த மே மாதம் விற்பனையான முழு சைஸ் எஸ்யூவிகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் முதலிடத்தில் இருக்கிறது. எந்தெந்த கார்கள் எவ்வளவு விற்பனையாகியுள்ளன என்ற முழு விபரங்களை விரிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு அதிகமான மோகம் இருந்தாலும், முழு சைஸ் எஸ்யூவி காரர்களின் விற்பனை மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இதன் விலை தான். முழு சைஸ் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் அதிகமான விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

இதை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இந்த கார்களின் மீதான மவுசு அதிகமாக இருக்கிறது. இதனால் தொடர்ந்து இந்த விற்பனை அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த செக்மெண்டில் நீண்ட நாட்களாக முன்னணியிலிருந்து வருவது டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் தான்.
பல்வேறு விலையேற்றங்களுக்குப் பிறகும் தொடர்ந்து இந்த கார் இந்த செக்மெண்டில் முதலிடத்திலேயே இருக்கிறது. சொல்லப்போனால் டொயோட்டா நிறுவனத்தின் மற்ற கார்களை காட்டிலும் இந்த காரின் விற்பனை வெகு சிறப்பாகவே இருக்கிறது. அதுவும் நீண்ட நாட்களாக விற்பனை நல்ல முறையில் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.

டொயோட்டாவில் நான்காவதாக அதிகமாக விற்பனையாகும் கார் இந்த ஃபார்ச்சூனர் கார் தான். கடந்த மே மாதம் மட்டும் இந்த பார்சனார் கார் மொத்தம் 2887 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஆண்டு மே மாதம் மொத்தம் 1184 கார்கள் தான் விற்பனையானது. ஒரே ஆண்டில் 144 சதவீத வளர்ச்சியை இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் சம்பாதித்துள்ளது.
இந்த 2887 என்ற எண்ணிக்கை அந்நிறுவனத்தின் டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைட்ரேடர் காரின் விற்பனையை விட வெறும் 100 எண்ணிக்கை தான் குறைவாகும். இந்த செக்மெண்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ள கார் ஜீப் மெரிடியன். இந்த கார் வெறும் 418 கார்கள் தான் கடந்த மே மாதம் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு இந்த கார் விற்பனையிலேயே இல்லை.

மூன்றாவது இடத்தை எம்ஜி குளோஸ்டர் கார் பிடித்துள்ளது. மொத்தம் 217 காரர்கள் கடந்த மே மாதம் விற்பனை ஆகி உள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் மொத்தம் 51 கார்களை விற்பனையாகியிருந்தன ஒரே ஆண்டில் 320 சதவீத வளர்ச்சியை இந்த எம்ஜி குளோஸ்டர் கார் பெற்றுள்ளது.
பட்டியலில் நான்காவது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் மொத்தம் 121 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 54 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. ஒரே ஆண்டில் 217 சதவீத வளர்ச்சியை இந்த கார் பெற்றுள்ளது.
பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஸ்கோடா நிறுவனத்தின் கோடியாக் கார் இருக்கிறது. கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 157 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் 16 கார்கள் விற்பனை ஆகி இருந்தது. இருப்பதிலேயே குறைந்தபட்சமாக இந்த நிறுவனம்தான் வெறும் 48% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இந்த செக்மெண்டில் முன்னணியில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அதன் புதிய அப்டேட்டை பெற உள்ளது. புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அடுத்த ஆண்டு வெளியாகும். என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்களும் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்திலும் மாற்றங்களும் முக்கியமாக டீசல் ஹைபிரிட் இன்ஜின் தொழில்நுட்பம் கொண்ட காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் இவ்வளவு சிறப்பான விற்பனைக்கு அதன் லுக் ஒரு முக்கியமான காரணம். அது சமூகத்தில் அந்த காரை வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய மரியாதையையும் அந்தஸ்தையும் கொடுக்கிறது. ஃபார்ச்சூனர் கார் அரசியல்வாதிகளால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் பிரபலமான பல தொழிலதிபர்களும் இந்த காரை வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









