40 கி.மீ மைலேஜ் தரும் கார்களை கொண்டு வரப்போகும் மாருதி! இந்த 5 காரை பத்தி தெரியுமா?

மாருதி நிறுவனம் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் தனது முக்கியமான தயாரிப்புகளை களம் இறக்கப் போகிறது. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.புதிதாக ஸ்விஃப்ட் முதல் இவிஎக்ஸ் வரை பல கார்கள் அறிமுகுமாக போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது மாருதி தான். இந்தியாவிலேயே அதிகமான கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் நிறுவனம் இந்நிறுவனம் தான். இந்நிறுவனம் எதிர்கால இந்தியா ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான சில வாகனங்களை தற்போது அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது.

maruti upcoming 5 cars

வழக்கமான தனது பாணியிலிருந்து மாறுபட்டு தனது புதிய தயாரிப்புகளை புதிய விதத்தில் தயார் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் போகிறது. அதன்படி இந்நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள புதிய தலைமுறை ஸ்விஃப்ட் முதல் இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவி வரை விரைவில் வெளியே வர உள்ள வாகனங்களின் பட்டியலை காணலாம் வாருங்கள்.

புதிய தலைமுறை மாருதி ஸ்விப்ட்: மாருதி நிறுவனம் தனது முக்கியமான மாடலான ஸ்விஃப்ட் காரை மாற்றியமைத்து தற்போது ஸ்போர்டி டிசைன் மற்றும் டைனமிக் பெர்ஃபாமென்ஸ் உடன் முக்கிய மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த கார் முழுவதுமாக புதிய டிசைனில் புதிய லுக்கில் பார்க்கவே புதிதாகவும் பிரீமியம் லுக் உடனும் அதிகமான வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய உட்கட்டமைப்புடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

maruti upcoming 5 cars

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய மாடல் காரில் இதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. புதிய காரையிலும் இந்த இன்ஜினில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே இன்ஜின் பொருத்தப்பட்டு 88.5 பிஎச்பி பவரை வெளியிடும் திறன் கொண்ட காராக இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட் ஹைபிரிட்: மாதிரி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரில் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை புகுத்தி தனது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காராக வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த கார் 35 முதல் 40 கிலோமீட்டர் மைலேஜை வழங்கும் திறன் கொண்ட காராக மார்கெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

maruti upcoming 5 cars

காம்பேக்ட் கார் செக்மென்ட்டில் இந்த கார் மிகப்பெரிய புரட்சியே ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். மாருதி நிறுவனம் அதிகமான மைலேஜ் கொண்ட காரை தயாரிக்க முடிவு செய்துள்ளது . அதே நேரம் இந்த கார் மாசுவையும் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் பெர்ஃபார்மென்ஸிலும் எந்தவித குறையும் இல்லாத வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை மாருதி டிசையர்: ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து மாருதி நிறுவனம் தனது டிசையர் காம்பேக்ட் செடான் காரிலும் புதிய தலைமுறை காரை உருவாக்க முடிவு செய்துள்ளது. நீண்ட காலமாக இந்த கார் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது மிகப்பெரிய அளவிலான அப்டேட்டை இந்த கார் பெற போகிறது. இது மட்டுமில்லாமல் பல புதிய வசதிகளும் இந்த காரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

maruti upcoming 5 cars

இந்தியாவில் டிசையர் காருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் உள்ள பிராக்டிகாலிட்டி மற்றும் கம்ஃபோர்ட் ஆகியன மக்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை மாருதி நிறுவனம் பயன்படுத்தும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தான் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்ஜின் தான் பழைய காரிலும் இருக்கிறது.

மாருதி டிசையர் ஹைபிரிட்: இந்த காரிலும் ஹைபிரிட் வேரியண்ட்டை கொண்டுவர மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹைபிரிட் செட்டப்பை உருவாக்கி இந்த காரை 35 முதல் 40 கிலோமீட்டர் மைலேஜ் தரும் காராக உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதிக மைலேஜ் தரும் காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காருக்கு 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டாரையும் இணைத்து இந்த ஹைபிரிட் காராக மாருதி நிறுவனம் உருவாக்குகிறது. இந்த கார் குறைவான பெட்ரோல் செலவிலும் அதே நேரத்தில் மாசு ஏற்படுத்தாமலும் அதிக மைலேஜ் தரும் காராக மாருதி உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மாருதி இவிஎக்ஸ்: மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இந்த மாருதி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாக போகிறது. இந்த கார் வரும் 2020ஆம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தற்போது டெஸ்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரில் 60 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு முழு சார்ஜில் 550 கிலோமீட்டர் ரேஞ்ச் வரை செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி நிறுவனம் தான் அதிகமான கார்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரும் நிறுவனம் ஆகும். மாருதி நிறுவனத்திற்கு மக்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. மாருதி நிறுவனத்தின் இந்த புதிய கார்கள் மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.மார்கெட்டில் மாருதி நிறுவனம் ஒரு புரட்சியையே செய்யப்போகிறது என்றால் அது மிகையல்ல!

Article Published On: Tuesday, August 29, 2023, 13:30 [IST]
English summary
Future maruti vehicles swift dzire hybrid and evx electric suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X