ரொம்ப நாள் கழிச்சு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்குலி... காரோட விலையை கேட்டா பொளந்த வாய மூட மாட்டீங்க!
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. மிக சிறந்த கேப்டன்சி மற்றும் பேட்டிங்கிற்கு பெயர்போனவர் இவர் ஆவார். இவர் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த மாதிரியான சூழலில் இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் தற்போது ஓர் புத்தம் புதிய சொகுசு காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீண்ட நாட்கள் கழித்து வாங்கப்பட்டதாலும், அவர் அக்காருக்கு பெரும் தொகையை செலவழித்ததன் காரணத்தினாலும் தற்போது சவுரவ் கங்குலியின் கார் கொள்முதல் இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கின்றது. சவுரவ் கங்குலி புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS luxury SUV) சொகுசு காரையே வாங்கி இருக்கின்றார்.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே 1.29 கோடி ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை எப்படியும் இரண்டு கோடிகளை நெருங்கிவிடும். இத்தகைய உயரிய விலை உள்ள காரையே கங்குலி தற்போது வாங்கி இருக்கின்றார். பல ஆண்டுகள் கழித்து காரை வாங்கினாலும் நல்ல பெஸ்டான காரைதான் அவர் வாங்கி இருக்கின்றார் என கூற செய்யும் அளவிற்கு அவரின் கார் கொள்முதல் இருக்கின்றது.
கங்குலி மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல மிகப் பெரிய வாகன காதலர் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. தேவைக்கேற்ப மட்டுமே அவரிடத்தில் வாகனங்கள் உள்ளன. அதுவும், நடு நிலையான சொகுசு வசதிகள் கொண்ட காரையே அவர் வைத்திருக்கின்றார். அதிகம் பணம் படைத்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இவர் இருந்தாலும் இந்த சிம்பிளான வாகனங்களையே கங்குலி தன்னுடைய தினசரி பயணங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையிலேயே மிகப் பெரிய தொகைக் கொடுத்து பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு காரை தற்போது அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரின் சாவியை கங்குலி பெற்றுக் கொள்வதைப் போன்ற படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், கார் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டிலே டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
காரை கங்குலியின் மனைவி டோனா கங்குலியே டெலிவரி பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் ஓர் எஸ்யூவி ரக சொகுசு காராகும். இந்த கார் மாடலின் 400டி வேரியண்ட் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் மிக தாரளமாக ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.
இது ஓர் டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனமாகும். இதில், 3.0 லிட்டர் இன்லைன் 6 டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால், அதிகபட்சமாக 326 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் வரை வெளியேற்ற முடியும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் இந்த மோட்டார் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கல்கத்தாவின் இளவரசர் என்று சவுரவ் கங்குலி அழைக்கப்படுகிறார். இதற்கேற்ப வசதியான குடும்ப பின்புலத்தை கொண்டவரே கங்குலி. இருப்பினும், அவரிடத்தில் கணிசமான எண்ணிக்கையிலேயே கார்கள் உள்ளன. அந்தவகையில், ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் மற்றும் பென்ஸ் சி கிளாஸ் கன்வெர்டபிள் ஆகிய கார்களே உள்ளன. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் லக்சூரி எஸ்யூவி சேர்க்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








